Guru Peyarchi Palangal 2023-24 Parigarangal

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024 (Guru Peyarchi Palangal 2023-24)

மேஷம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024

சுயமரியாதையின் சொந்தக்காரர்களே…!

புரட்சிகரமான தொலைநோக்குத் திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர் நீங்கள்.

ஜென்ம குரு – மேஷம்

மேஷ ராசிக்கு 9ஆம் இடமான தனுசுவுக்கும் 12-ஆம் இடமான மீனத்துக்கும் உரியவர் குரு பகவான். இதுவரை 12ம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் தற்போது உங்கள் ஜென்ம ராசியான மேஷத்திற்கு வருவது அவரது விசேஷப் பார்வைகள் முறையே உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் களத்திர ஸ்தானம் பித்ரு ஸ்தானங்களில் பதியும்.  முழுமையாக படிக்க….

மேஷம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-2024

பரிகாரம்
குலதெய்வ வழிபாடு நன்மை பயக்கும் முடிந்தால் மாதம் ஒருமுறை குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது. ஒருமுறை திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் இந்த குரு பெயர்ச்சி சிறப்பான பலன்களை தரும். குரு பெயர்ச்சி பல்வேறு விதத்தில் மேஷ ராசிக்கு நன்மைகள் மட்டுமே அதிகம் தர வாய்ப்புள்ளது. அதோடு சனி பகவானும் உங்களுக்கு கைகொடுக்க உள்ளதால் இந்த 2023ம் ஆண்டு பெரியளவில் சாதகமான ஆண்டாகவே இருக்கும்.
குருவின் அருளைப் பெற்றிட மேஷ ராசியினர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருவது நன்மை தரும்.

ரிஷபம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024

ஏமாளிகள், அப்பாவிகளுக்காக பரிந்து பேசுபவர்களே..!

எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் கொண்டவர் நீங்கள். உழைப்பைத் தவிர வேறு எதையும் நம்பாதவர்கள்.

குரு பகவான் விரய ஸ்தானத்திற்கு வந்தாலும் அவர் ரிஷப ராசிக்கு ஓரளவு நல்ல பலனையே தர உள்ளார். நல்ல மாற்றங்கள் உண்டாகும். அடுத்த ஒரு ஆண்டு அதிக பயணங்களை மேற்கொள்ள வேண்டியது இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. நம்பிக்கையுடன் உழைத்தால் நல்ல வெற்றி கிடைக்கும். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொள்வீர்கள். முழுமையாக படிக்க….

ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-2024

பரிகாரம்
அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று அருகம்புல் சாற்றி வழிபடுங்கள். ஒருமுறை காணிப்பாக்கம் சென்று கணபதியை வணங்கி வாருங்கள் வாழ்வில் ஏற்றம் இருக்கும். வியாழக் கிழமைகளில் அம்பாள் வழிபாடு செய்வதும், ஏழை, எளியவர்களுக்கு உதவுவது நல்லது

மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024

அதிகம் ஆசைப்படாமல் உதிக்கும்போது விதிக்கப்பட்டதை உணர்ந்து வாழ்பவர்களே…!

லாப குரு – மிதுனம்

புதன் பகவானின் அருள் பெற்ற மிதுன ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு குருபகவான் 7-ம் இடத்திற்கும் 10-ம் இடத்திற்கும் உரியவர். அவர் இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருகிறார். அதே சமயம் அவருடைய விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு 3-ம் இடம்(சகோதர ஸ்தானம் ) 5-ம் இடம் (பூர்வ புண்ணிய ஸ்தானம்) மற்றும் 7-ம் இடம் (களத்திர ஸ்தானம் )ஆகியவற்றில் பதியும். முழுமையாக படிக்க….

மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-2024

 

பரிகாரம் 
உங்களுக்கு அருகில் இருக்கும் மகான் கோவிலுக்கு சென்று வணங்கி வாருங்கள் ஒருமுறை மந்திராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திர மஹானை தரிசித்து வாருங்கள் மகிழ்ச்சி மலரும். மிதுன ராசியினர் அடிக்கடி மகான்கள், குரு, சித்தர் சமாதி இடங்களுக்கு சென்று வணங்கி வாருங்கள். அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரவும்.

 

கடகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024

கடமை உணர்வு கொண்ட நீங்கள் எல்லாவற்றையும் விரும்பிச் செய்பவர்களே…!

சீர்திருத்த சிந்தனை அதிகமுள்ளவர் நீங்கள்.

கர்ம ஸ்தான குரு – கடகம்

சந்திர பகவானின் அருள் பெற்ற கடக ராசி அன்பர்களே!!! குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடமான தனுசுவிற்கும், 9-ம் இடமான மீனத்திற்கும் உரியவர் ஆவார். பத்தாமிடமும் ஜீவன ஸ்தானமான மேஷத்திற்கு வருவதும், அவரது விசேஷ பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே 2மிடம் (வாக்கு ஸ்தானம்),4மிடம் (மாத்ரு ஸ்தானம்),6மிடம்( சத்ரு ரோக ஸ்தானம்) ஆகிய இடங்களில் பதிவதும் கணக்கில் கொல்லப்பட்டு இந்த பலன்கள் சொல்லப்படுகின்றது. இந்த சமயத்தில் உங்கள் ராசிக்கு குரு உச்ச வீடு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். முழுமையாக படிக்க….

கடகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-2024

பரிகாரம்
சனிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள். நேரம் கிடைக்கும்போது திருக்கொள்ளிக்காடு சென்று பொங்கு சனீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். மாற்றமும் முன்னேற்றமும் நிச்சயம் இருக்கும். அஷ்டம சனி நடப்பதால் கடக ராசியினர் சனிக்கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று வழிபடவும்.

சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024

நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுபவர்களே!

பாக்ய குரு – சிம்மம்

சூரிய பகவானின் அருள் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே!! உங்கள் ராசிக்கு 5-ம் இடமான தனுசுக்கும், எட்டாம் இடமான மீனத்துக்கும் உரியவரான குரு பகவான் தற்பொழுது ஒன்பதாம் இடமான பித்ரு ஸ்தானத்துக்கு செல்கிறார். அவரின் விசேஷப் பார்வைகள் ஐந்தாம் பார்வை உங்கள் ராசியிலும், ஏழாம் பார்வை சகோதர ,தைரிய வீரிய ஸ்தானத்திலும்,9-ம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பதிவது சிறப்பு. முழுமையாக படிக்க….

சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-2024

பரிகாரம்
ஒரு முறை பட்டீஸ்வரம் சென்று துர்க்கை அம்மனுக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து விட்டு வாருங்கள். துர்க்கை அருளும்,குருவின் அனுகிரகமும் உங்கள் வாழ்க்கையை செழிக்க செய்யும். சிம்ம ராசியினர் அருகில் உள்ள சிவாலய வழிபாடு செய்வதும், துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

கன்னி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024

வெளிப்படையாக மற்றவர்களை சில நேரங்களில் விமர்சிக்கும் மண்ணின் மைந்தர்களே…!

மனிதநேயம் மாறாதவர் நீங்கள்.

அஷ்டம குரு – கன்னி
புதன் பகவானின் அருள் பெற்ற கன்னி ராசி அன்பர்களே!!! வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 4 மற்றும் 7-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு ஆயுள் ஸ்தானமான எட்டாவது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே விரயம்(12-மிடம் ) வாக்கு(2-மிடம்) தாய்(4மிடம் ) ஸ்தானங்களில் பதியும். முழுமையாக படிக்க….

கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-2024

பரிகாரம்
அருகில் இருக்கும் நரசிம்மர் கோவிலுக்கு சென்று வாருங்கள். பரிக்கல், சிங்கர் குடி, பூவரசன் குப்பம் ஆகிய நரசிம்ம தலங்களுக்கு ஒருமுறை சென்று வணங்கி விட்டு வாருங்கள். ஆளரிநாதர் அருளும் குருவின் அருளும் உங்கள் வாழ்க்கையை பசுமையாக்கும்.

துலாம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024

வெகுளித்தனமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திழுப்பவர்களே…!

மற்றவர்களின் மனநிலையை நொடிப் பொழுதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டவர் நீங்கள்.

களத்திர குரு – துலாம்
சுக்கிர பகவானின் அருள் பெற்ற துலாம் ராசி அன்பர்களே!!! குருபகவான் உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானமான 7-வது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே லாபம் (11-மிடம் ) சகோதரன் ,தைரியம் (3-மிடம்) ஜென்ம ராசி(1மிடம்) ஸ்தானங்களில் பதியும். வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முழுமையாக படிக்க….

துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-2024

பரிகாரம்
வாரம் தோறும் வெள்ளிக்கிழமையில் அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வாருங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் குடியிருக்கும் நேரம் கிடைத்தால் பௌர்ணமி திதியில் குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.

 

விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024

பணத்துக்கும் பகட்டான வாழ்க்கைக்கும் மயங்காதவர்களே…!

வாக்கு சாதுர்யம் மிகுந்தவர் நீங்கள்.

ருண ரோக சத்ரு குரு – விருச்சிகம்

செவ்வாய் பகவானின் அருள் பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே!!! குருபகவான் உங்கள் ராசிக்கு 2 மற்றும் 5-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு நோய் -கடன் -எதிரி ஸ்தானமான 6-வது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே தொழில் (10-மிடம் ) குடும்பம் ,வாக்கு (2-மிடம்) விரயம் -தூக்கம் (12மிடம்) ஸ்தானங்களில் பதியும். வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முழுமையாக படிக்க….

விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-2024

பரிகாரம்
வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை முருகன் கோயில்களில் இருக்கும் நவகிரக சன்னதிக்கு சென்று செவ்வாய் பகவானுக்கு அர்ச்சனை செய்து, முருகப்பெருமானை வழிபாடு செய்து வாருங்கள். ஒரு முறை திருச்செந்தூர் சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.

 

தனுசு குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024

தலையை அடகு வைத்தாவது சொன்ன சொல்லை நிறைவேற்றுபவர்களே…!

பூர்வ புண்ணிய குரு – தனுசு

குரு பகவானின் அருள் பெற்ற தனுசு ராசி அன்பர்களே- குருபகவான் உங்கள் ராசி மற்றும் 4-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-வது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே பாக்கிய ஸ்தானம் (9-மிடம் ) லாபம் (11-மிடம்) ஜென்ம ராசி (1மிடம்) ஸ்தானங்களில் பதியும. வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முழுமையாக படிக்க….

தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-2024

பரிகாரம்
வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் குரு ஓரை வரும் நேரத்தில் கோயிலில் இருக்கும் பசுமாடுகளுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை, வெல்லம் ஆகியவற்றை உணவாக கொடுக்கலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யவும். சித்தர்கள். ஜீவசமாதி அடைந்தவர்களை வழிபாடு செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

மகரம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024

உதட்டால் பேசாமல் இதயத்தால் பேசுபவர்களே…!

பிரச்னைகளைக் கண்டு பின்வாங்காதவர் நீங்கள்.

சுக ஸ்தான குரு – மகரம்

சனி பகவானின் அருள் பெற்ற மகர ராசி அன்பர்களே!!! குருபகவான் உங்கள் ராசிக்கு 3 மற்றும் 12-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-வது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே ஆயுள் (8-மிடம் ) தொழில் (10-மிடம்) விரயம் (12மிடம்) ஸ்தானங்களில் பதியும். வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முழுமையாக படிக்க….

மகரம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-2024

பரிகாரம்
அருகில் இருக்கும் விநாயகர் ஆலயங்களுக்கு சென்று வணங்குங்கள். ஒருமுறை பிள்ளையார்பட்டி சென்று கற்பக கணபதியை மனம் ஒன்றி வணங்கி விட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நிம்மதி நிறையும்.

கும்பம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024

எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே…!

சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் காய் நகர்த்தி காரியம் சாதிப்பவர் நீங்கள்.

தைரிய குரு – கும்பம்

சனி பகவானின் அருள் பெற்ற கும்ப ராசி அன்பர்களே!!! குருபகவான் உங்கள் ராசிக்கு 2 மற்றும் 11-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானமான 4-வது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே திருமணம் ,நண்பர்கள் (7-மிடம் ) பாக்கியஸ்தானம் (9-மிடம்) லாபம் (11மிடம்) ஸ்தானங்களில் பதியும். வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முழுமையாக படிக்க….

கும்பம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-2023

பரிகாரம்
அருகில் இருக்கும் சிவன் பார்வதியை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.ஒரு முறை திருவண்ணாமலை சென்று தரிசனம் செய்யுங்கள்.முடிந்தால் கிரிவலம் செல்லுங்கள்.உங்கள் வாழக்கை பிரகாசிக்கும்.

மீனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024

மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்பவர்களே…!

எளிய மக்களை அதிகம் நேசிக்கும் அன்பர் நீங்கள்.

குடும்ப குரு – மீனம்

குரு பகவானின் அருள் பெற்ற மீன ராசி அன்பர்களே. குருபகவான் உங்கள் ராசிக் மற்றும் 10-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானமான 2-வது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே நோய்-கடன் (6-மிடம் )ஆயுள் -அவமானம் (8-மிட)தொழில் (10மிடம்) ஸ்தானங்களில் பதியும். வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முழுமையாக படிக்க….

மீனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-2024

பரிகாரம்
அருகில் இருக்கும் பெருமாள் ஆலயங்களுக்கு புதன் கிழமை புதன் ஓரையில் சென்று வாருங்கள்.ஒரு முறை ஸ்ரீ ரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்துவிட்டு வாருங்கள்.வாழ்க்கை செழிப்படையும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-24

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Leave a Comment