Events

Thulam rasi palangal Rahu ketu peyarchi 2020 | ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

துலாம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை) Thulam rasi palangal Rahu ketu peyarchi 2020

துலாம் ராசி வாசகர்களே

ராகு பலன்கள்: இது நாள் வரை ராசிக்கு 9 ம் வீட்டில் அமர்ந்து பண தட்டுப்பாடும், மன காஷ்டத்தையும் கொடுத்து வந்த ராகு பகவான் இனி 8 ம் வீட்டில் சென்று அமர்கிறார். இது மறைவு ஸ்தானம்.

இது வரை இருந்த மந்த நிலை மாறி புது உத்வேக சூழல் உருவாகும். இனி எடுத்த காரியங்களில் வெற்றிகள் தேடி வரும். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். வேலையில் புது புது உத்திகளை கையாண்டு மேலதிகாரியின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள். இதனால் பதவி உயர்வும், பணவரவு ஏற்படும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவ செலவு குறையும். வேலை சம்பந்தமாக திடீர் பயணங்கள் உண்டாகும். வீட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கேது பலன்கள்: இது நாள் உங்கள் ராசிக்கு 3 ம் வீட்டில் அமர்ந்து விவேகமாக செயலாற்ற வைத்த கேது பகவான் இனி உங்கள் ராசிக்கு 2 ம் வீட்டில் வந்து அமர்கிறார். இதனால் வீண் வாக்குவதங்களை தவிர்க்கவும். புனித காரியங்களுக்கு பணத்தை செலவு செய்யும் சூழல் உருவாகும். தேவையற்ற வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். உங்கள் சாதூர்ய பேச்சால் யாராலும் முடிக்க முடியாத வேலையை எளிதில் முடித்து காட்டுவீர்கள். அளவுடன் பேசி காரியத்தை சாதிப்பீர்கள். அளவிற்கு மீறி பேசும் போது பெரும் சிக்கலில் மாட்டும் நிலை உருவாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் ஈட்டும் காலமிது.

சித்திரை – 3, 4:

இந்த பெயர்ச்சியினால் குடும்பத்தில் தாய், தந்தையிடமும், பெரியோரிடமும் அனுசரித்து நடந்து கொள்வதும் நன்மை தரும். பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்தும் கூடும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளும் தீரும்.

ஸ்வாதி:

இந்த பெயர்ச்சியில் ஏற்படும் பலன்களினால் சொந்தம், நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

விசாகம் – 1, 2, 3:

இந்த பெயர்ச்சியின் மூலம் உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள்.

பரிகாரம்: குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7, 9

மலர் பரிகாரம்: தாமரையினால் பெருமாளுக்கு மாலை செய்து அர்ப்பணித்து வணங்க கஷ்டங்கள் குறையும்.

ராகு & கேது பரிகார ஸ்லோகம்:
ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய, வேத ருபாய, வினதா புத்ராய, விஷ்ணு பக்தி பிரியாய, அம்ருத கலச ஹஸ்தாய, பஹீ பராக்ரமாய,  பக்ஷி ராஜாய , சர்வ வக்ர, சர்வ தோஷ, சர்ப்ப தோஷ, விஷ சர்ப்ப விநாசநாய ஸ்வாஹா.
இந்த மந்திரத்தை 27 முறை சொல்லவும்.

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Sivapuranam lyrics Tamil | சிவபுராணம் பாடல் வரிகள் | Manickavasagar Tiruvasagam Tamil

    Sivapuranam lyrics Tamil - சிவபுராணம் பாடல் வரிகள் சிவபுராணம் பாடல் வரிகள் (sivapuranam lyrics tamil) மற்றும் இந்த… Read More

    2 months ago

    Aadi Pooram | ஆடிப்பூரம் | Aadi pooram Festival | Aadi Pooram 2023 Date

    Aadi Pooram Festival ஆடிப்பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது… Read More

    2 months ago

    நம: பார்வதீ பதயே என்பது என்ன?

    ஓம் நமசிவாய... ஓம் சக்தி.... நம: பார்வதீ பதயே என்பது என்ன? சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல,… Read More

    3 months ago

    உங்கள் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த 6 சிவன் மந்திரங்கள் | Powerful shiva mantras tamil

    சக்தி வாய்ந்த 6 சிவன் மந்திரங்கள் | Powerful Shiva Mantras Tamil Powerful shiva mantras tamil |… Read More

    2 months ago

    Girivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் | கிரிவலம் வரலாறு

    பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More

    4 months ago

    Today rasi palan 22/09/2023 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் வெள்ளிக் கிழமை புரட்டாசி -5

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our 3rd WhatsApp group *_📖 பஞ்சாங்கம்:… Read More

    14 hours ago