மீனம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை) Meenam rasi Rahu ketu peyarchi 2020

மீன ராசி வாசகர்களே,

ராகு பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 4 ம் இடத்தில் அமர்ந்து உங்களை சோர்வடைய செய்த ராகு பகவான் ராசிக்கு 3 ம் வீட்டில் வந்து அமர்வதால் எதிலும் வெற்றி உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். அடகு வைத்து நகைகளை திருப்புவீர்கள். கடன்கள் பைசலாகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்னை விலகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும் . தடைபட்டு வந்த சுபகாரியங்களை இனிதே சிறப்பாக நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் உங்களின் விருப்பங்களுக்கேற்ப நடந்துகொள்வார்கள்.

கேது பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 10 ல் அமர்ந்து எந்த வேலையையும் முழுமையாகச் செய்யவிடாமல் தடுத்த கேது பகவான் இனி உங்கள் ராசிக்கு 9 ல் வந்து அமர்கிறார். வேலையில் நிலவி வந்த தேக்க நிலை மாறி உயர்ந்த நிலை அடைவீர்கள். பெண்களின் நட்பு கிடைக்கும் . புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் பெருகும். ஒரு சிலருக்கு வெளி நாடுகளில் இருந்து உதவிகள் கிடைக்கும் . உங்கள் பேச்சுக்கும் அனைவரும் கட்டுப்படுவர்.

 

பூரட்டாதி – 4:

இந்த பெயர்ச்சியில் நீங்கள் அடுத்தவருக்கு வலிய சென்று உதவி செய்வீர்கள். உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும், சுக சௌக்கியத்தை தரும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.

 

உத்திரட்டாதி:

இந்த பெயர்ச்சியில் நல்லது, கெட்டது அறிந்து சமயோசிதமாக செயல்படுவீர்கள் .வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும்.

 

ரேவதி:

இந்த பெயர்ச்சி மூலம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம்.

பரிகாரம்: முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மலர் பரிகாரம்: முல்லை மலரை வியாழக்கிழமைதோறும் அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்யுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: “ ஓம் ஸ்ரீகுருப்யோ நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.

ராகு & கேது பரிகார ஸ்லோகம்:
இந்த மந்திரத்தை 27 முறை சொல்லவும்.
ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய, வேத ருபாய, வினதா புத்ராய, விஷ்ணு பக்தி பிரியாய, அம்ருத கலச ஹஸ்தாய, பஹீ பராக்ரமாய,  பக்ஷி ராஜாய , சர்வ வக்ர, சர்வ தோஷ, சர்ப்ப தோஷ, விஷ சர்ப்ப விநாசநாய ஸ்வாஹா.

 

Leave a Comment