மிதுனம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை) Mithuna rasi palangal Rahu ketu peyarchi 2020

மிதுன ராசி வாசகர்களே

ராகு பலன்கள்: இது நாள் வரை ஜென்ம ராசியில் இருந்து பல இன்னல்களை கொடுத்து வந்த ராகு பகவான் இனி உங்கள் ராசிக்கு 12 ம் வீட்டிற்கு வருவதால் எல்லா கஷ்டங்களும் விலகும். தன ஸ்தானத்தை குரு பகவான் பார்க்க போவதால் தடை பட்டு வந்த பண வரவு சீராகும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஓன்று சேருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் வீடு கட்டும் முயற்சிகளில் இறங்குவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். புத்திரர்களால் வீட்டில் சந்தோஷமும் மன மகிழ்ச்சியும் நிலவும்.

கேது பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 7 ம் வீட்டில் அமர்ந்து கணவன் மனைவிக்குள் பிரிவையும், மன கசப்பையும் உண்டாக்கிய கேது பகவான் இனி உங்கள் ராசிக்கு 6 ம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதால் கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து லாபத்தை அடைவீர்கள். தொழிலில் இருந்து வந்த முடக்க நிலை மாறி அசுர வளர்ச்சி அடையும். கணவன் மனைவி உடல் நிலையில் சற்று கவனம் செலுத்தவும்.

சிலருக்கு வெளி நாடு செல்லும் யோகம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு இது நாள் வரை தடைபட்டு வந்த பதவி உயர்வுகள் இனிதே கிடைக்கும். எதிரிகள் பலம் இழந்து உங்கள் கால்களில் தஞ்சம் அடைவர். கொடுக்க வேண்டிய கடன்களை பைசல் செய்வீர்கள். வெளி நாட்டு தொடர்புகளால் உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்து அதில் லாபத்தையும் அடைவீர்கள்.

 

மிருகசீரிஷம் – 2, 3:

இந்த ராகு கேது பெயர்ச்சியால் வாகனங்கள் வாங்குவதில் தடை ஏற்பட்டு நீங்கும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும்.

திருவாதிரை:

இந்த ராகு கேது பெயர்ச்சியால் வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை  அதிகரிக்கும்.தொழிலில் திறமை அதிகரிக்கும். உபதொழிலில் ஆர்வம் உண்டாகும். சொந்த பந்தங்களின் ஆதரவு கிடைக்கும்.

புனர்பூசம் – 1, 2, 3:

இந்த ராகு கேது பெயர்ச்சியால் எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மனதில் இருந்த கவலையை போக்கி நிம்மதி அடைவீர்கள். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.

ராகு & கேது பரிகார ஸ்லோகம்:
ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய, வேத ருபாய, வினதா புத்ராய, விஷ்ணு பக்தி பிரியாய, அம்ருத கலச ஹஸ்தாய, பஹீ பராக்ரமாய,  பக்ஷி ராஜாய , சர்வ வக்ர, சர்வ தோஷ, சர்ப்ப தோஷ, விஷ சர்ப்ப விநாசநாய ஸ்வாஹா.
இந்த மந்திரத்தை 27 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6, 7

மலர்பரிகாரம்: தாமரை மலர்களால் மகாலட்சுமி தாயாரை பூஜிக்க வேண்டும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் நமோ நாராயணாயா நம: என்று 11 முறை கூறவும்.

ராகு பகவான் 108 போற்றி

கேது பகவான் 108 போற்றி

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

 

Leave a Comment