Kanni rasi palangal Rahu ketu peyarchi 2020
கன்னி: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை)
கன்னி ராசி வாசகர்களே
ராகு பலன்கள்: இது நாள் வரை ராசிக்கு 10 ம் வீட்டில் அமர்ந்து வேலையில் பல நெருக்கடிகளை கொடுத்து வந்த ராகு பகவான் இனி ராசிக்கு 9 ம் வீட்டில் வந்து அமர்கிறார். இதனால் சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பண தட்டுப்பாடுகள் விலகி பல வழிகளில் இருந்தும் பண மழை கொட்டும். கணவன் மனைவி உறவுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழப்பமான மனநிலை மாறி தெளிவான சிந்தனை உதயமாகும். இதை ஆக்கபூர்வமான செயல்களில் செலுத்தி பெரும் பலன்களை அடையவும்.
உறவினர்கள் மத்தியில் பெரும் மதிப்பு அதிகரிக்கும். 9 ஆம் பார்வையாக ராசியை பார்க்க போகும் குரு பகவான் பெரும் அதிர்ஷ்டத்தை அளிக்க போகிறார். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிதாக தொழில் செய்ய நினைப்பவர்கள் குறைந்த முதலீட்டில் பெரும் லாபத்தை அடைவார்கள். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய ஏற்ற காலம். வாழ்க்கை தரம் உயரும்.
கேது பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 4 ம் வீட்டில் இருந்து பல பிரச்னைகளை கொடுத்து நிம்மதியை இழக்க வைத்த கேது பகவான் 3 ம் வீட்டில் வந்து அமர போகிறார். இதனால் இழந்த செல்வங்களை திரும்ப பெரும் அமைப்பு உண்டாகும். படிப்பில் இருந்த மந்த நிலை மாறும். சுறுசுறுப்புடன் செயலாற்றி பல வெற்றிகளை பெறுவார்கள். பிள்ளைகளால் வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் உங்களை தேடி வரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஒரு சிலர் வாகனங்களை புதுப்பிப்பார்கள். அரசாங்க வகையில் பல உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் சுமூக போக்கு நிலவும். ஒரு சிலருக்கு வேலையில் பதவி உயர்வு ஏற்படும். மொத்தத்தில் மிக சிறப்பான பலன்களை அனுபவிப்பார்கள்.
உத்திரம் – 2, 3, 4:
இந்த ராகு கேது பெயர்ச்சியால் நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும். நோய் நீங்கி ஆரோக்யம் உண்டாகும். புதிய சொத்து வாங்கும் போதும் சொத்தை விற்கும் போதும் கவனம் தேவை.
ஹஸ்தம்:3
இந்த ராகு கேது பெயர்ச்சியால் வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். காரியங்களில் வெற்றி பெற திட்டமிடுதலும் ஆலோசனை செய்வது நல்லது. தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. பெரியோரின் ஆலோசனைகளைக் கேட்க எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.
சித்திரை – 1, 2:
இந்த ராகு கேது பெயர்ச்சியால் வாழ்க்கையில் பலவகை சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறிவீர்கள். எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.
பரிகாரம்: அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்சனைகள் தீரும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 8, 9
மலர்பரிகாரம்: தாமரை மலர்களால் பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய நன்மை பெருகும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீ கோவிந்தாய நம: என்று தினமும் 11 முறை கூறவும்.