கடகம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Kadagam sani peyarchi palangal 2017-20

சிறு கண்ணோட்டம்:

கடக ராசிகாரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி அற்புதமாக உள்ளது. சனி பகவான் உங்களுக்கு அதிஷ்டத்தை அல்லித் தர உள்ளார். இதுவரை தீராமல் இருந்த அனைத்து கடன்களும் தீரும். தொழிலில் அதிகப்படியான லாபத்தை பார்ப்பீர்கள். பதவி உயர்வு, குடும்பத்தில் மகிழ்ச்சிச்சி என திரும்பும் திசை எங்கும் உங்களுக்கு இனி நம்மையே நடக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் புதிய முயற்சிகளில் துணிந்து இறங்கலாம். பண வரவு அதிகரிக்கும் சமயம் என்பதால் நீங்கள் சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

(புனர்பூசம், 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

(ஹி – ஹூ – ஹே – ஹோ – ட – டி – டு – டெ – டோ – கொ – கௌ – மெ – மை போன்ற எழுத்துக்களில் பெயரை முதல் எழுத்தாக கொண்டவர்கள் ஆடி மாதத்தில் பிறந்தவர்களுக்கு இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்)

வான மண்டலத்தில் 4வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசிநாதன் சந்திரன் ஆவார். நவக்கிரகங்களில் சந்திரன் ஒருவர் மட்டுமே வளர்ந்து தேய்ந்து வலம் வருபவராக இருப்பார். ஊரோடு சேர்ந்து வாழ்ந்து பழகும் இயர்புடைய நீங்கள் சிந்தனை சக்தியும் அதை செயல்படுத்துவதில் ஆர்வமும் திறமையும் உடையவர்கள். அதற்காக முயன்று முயற்சி அடைந்து வெற்றி பெறப்படுவீர்கள். எதற்கும் ஆசைப்படாத உங்களுக்கு ஏதாவது ஒரு துறையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும் என்ற தனியாத ஆர்வம் உடையவர்கள்.

புனர்பூசம் 4ம் பாதம் பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தை உடைய உங்கள் கடகராசிக்கு இதுவரை 5ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் இடமான வெற்றி, ருண, ரோக, சத்குரு எதிரி கடன் ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகிறார். இதுவரை போராட்டமாக இருந்து வந்த வாழ்க்கையில் வெற்றியின் அருமையை உணர வேண்டிய தருணம் வந்து விட்டது. இதுவரை நடை பெறாமல் தள்ளிப் போன விஷயங்கள் எளிதில் வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும்.

6ம் இடமான தனுசு ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் உருவாக்குவார். வேலையில் முன்னேற்றமும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படுத்துவார். இதுவரை அடிக்கடி வேலை மாறிய அல்லது பார்த்த வேலையை விட்டுவிடக் கூடிய சூழ்நிலையில் இருந்த நீங்கள் இனிமேல் உங்களுக்கு பிடித்த வேலையில் அமரும் வாய்ப்பு அமையும். அதிக மகிழ்ச்சியுடன் வேலையில் ஈடுபடுவீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமும் உங்களைச் செயல்பட வைப்பார். இதுவரை நிலுவையில் இருந்த பணம், பொருள் வந்து சேரும். வேலைக்கு ஏற்ற ஊதியமும் அதற்கேற்ப உங்களுக்கு ஊதிய உயர்வும் ஏற்படும். வேலையில் மாற்றம் ஒரு சிலருக்கு ஏற்படும்.

உங்களுடைய கௌரவம் அந்தஸ்து, புகழ் அதிகரிக்கும் எடுக்கும் காரியங்களில் முழு மனதுடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாகவும் சகாயமாகவும் வந்து சேரும். புதிய விஷயங்களில் ஈடுபட்டு வெற்றி பெறப் பாடுபடுவீர்கள். பேச்சு வார்த்தைகளில் எதிர்பாராத லாபம் ஏற்படும். பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். இதுவரை வராமல் இருந்த வந்த சொத்து பத்துக்கள், நகைகள், பணங்கள் இனி தானாக வந்து சேரும்.

சகோதர சகோதரிகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அவர்களுக்கு வேலை மற்றும் சுபகாரியம் நடக்க வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் புது உறுப்பினர்கள் வருகை நன்மையாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வந்து சேரும். தாயாரால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. ஒரு சிலருக்கு வண்டி வாகனம், வீடு, இடம், மனை போன்றவைகள் அமைய வாய்ப்புகள் வந்து சேரும்.

குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் ஏற்பட வாய்ப்பு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். உங்களது உழைப்ப்பு மற்றவர்களுக்கு லாபகரமாக அமையும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். அவர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.

வேலையாட்களால் நன்மை ஏற்படும். தாய் மாமன்களின் அன்பும் ஆதரவும் நிறைந்து காணப்படும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வழக்குகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன்கள் அதிகரிக்கும், எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பார்கள். புது புதுப் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. உடலில் தேமல், அரிப்பு, கட்டி போன்ற நோய்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை அமையும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிகக் கவனம் தேவை. எப்பொழுதும் எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும்.

காதல் விஷயங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் சாதகமாகவும் இருந்து வரும். காதல் கனிந்து ஒரு சிலருக்கு திருமணத்தில் முடியும். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். கூட்டுதொழில் சாதகமாக இருந்து வரும். முன்னோர்கள் சொத்து அல்லது எதிர்பாராத தனவரவு பொருள் வரவு அமையும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் போல் இருந்து வரும். அரசாங்கத்தால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். பங்கு சந்தைகள் முதலீட்டில் அதிக கவனம் தேவை. ரேஸ், லாட்டரி இவற்றில் அதிக எச்சரிக்கைகள் தேவை. விசா, பாஸ்போர்ட் இவைகள் எளிதாக வந்து சேரும். நண்பர்களால் எதிர்பார்த்த அளவு அன்பும் ஆதரவும் கிட்டும். வெளிநாடு செல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும்.

பரிகாரம்: திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக் காடு எனும் ஊரில் அருளும், பொங்கு சனீஸ்வரரைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; வாழ்க்கை வளமாகும்.

ஆதரவின்றி தவிக்கும் முதியோர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். வீட்டருகில் உள்ள அம்மன் கோயிலிற்கு சென்று அம்மனுக்கு வேப்பிலை சார்த்தி வழிபட்டு வந்தால் பண வரவு அதிகரிக்கும். திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பரை தரிசித்து வந்தால் வாழ்வில் வளர்ச்சி காணலாம்.

Leave a Comment