Mesha rasi guru peyarchi palangal 2017-18

மேஷம்:

மேஷ ராசி அன்பர்களே!!!

அசுவனி, பரணி, கிருத்திகை 1ம் பாதம்

தன்னை நம்பியவர்களை எத்தகைய துன்பத்திலிருந்தும் காப்பாற்றக்கூடிய பரந்த மனப்பான்மை கொண்ட மேஷராசி நேயர்களே!

மேஷ ராசி நண்பர்களே இந்த குரு பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 75/100.

உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான பொன்னவன் எனப்போற்றப்படக்கூடிய குருபகவான் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் வாக்கியப்படி வரும் 2-9-2017 முதல் 4-10-2018 வரை சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அற்புதமான அமைப்பு என்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் சிறப்பாகக் கைகூடும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் தாராளமாக அமைவதால் கடன் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். விரோதம் பாராட்டிய உற்றார்- உறவினர்கள் மற்றும் நண்பர்களும் நட்புக்கரம் நீட்டுவார்கள். கொடுக்கல்-வாங்கல் சரளநிலையில் நடைபெறும்.

சனி பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் 19-12-2017 முதல் சஞ்சரிக்க இருப்பதால் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்களும் லாபங்களும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகமான பலனைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறமைக்கேற்ற உயர்வுகளைப் பெறுவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச்சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு திருப்தி அளிப்பதாக அமையும்.

சர்ப்ப கிரகங்களான ராகு, கேது கேந்திர ஸ்தானங்களாகிய 4,10-ல் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகக்கூடும். உணவு விஷயத்திலும் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வதன்மூலம் தேவையற்ற மருத்துவச் செலவுகளைக் குறைத்துக்கொள்ளலாம். அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். தொழில், உத்தியோக ரீதியாக சிறுசிறு இடையூறுகளைச் சந்திக்க நேரிட்டாலும் அடையவேண்டிய பொருளாதார மேன்மையை அடைவீர்கள்.

உடல் ஆரோக்கியம்
உங்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பதால் மருத்துவச்செலவுகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெற்று மனநிம்மதியை உண்டாக்கும். தொலை தூரப்பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் இருந்தாலும் அதன்மூலம் அனுகூலப்பலனை அடைவீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலை
குடும்பத்தில் கணவன் -மனைவியிடையே ஒற்றுமை நிலவும். கடந்தகால மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் அற்புதமாக இருக்கும். வெளியூர்களிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்திகள் அனுகூலத்தை உண்டாக்கும். பொருளாதாரநிலையும் சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதும் உத்தமம். அசையாச் சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.

கொடுக்கல்வாங்கல்
கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தமுடியும். பழைய தொகையும் தடையின்றி வசூலாகும். வம்பு வழக்குகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். எடுக்கும் காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடித்து மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகளும் விலகி நல்ல முன்னேற்றமும் அபிவிருத்தியும் பெருகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். கூட்டுத்தொழிலிலும் கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தொழிலை விரிவுசெய்யும் நோக்கம் நிறைவேறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் பெருகும்.

உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும். உங்கள் திறமைக்கான பாராட்டுதல்களும் கிட்டும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை எடுப்பீர்கள். சிலருக்கு வேண்டிய இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். கடந்தகால அலைச்சல், டென்ஷன்கள் குறைந்து பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சேமிப்பு பெருகும்.

பெண்கள்
உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றமிகு பலன்களைப் பெறுவீர்கள். கணவன்-மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடப்பதும் நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வதும் நல்லது. நினைத்த காரியங்கள் நிறைவேறும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். அசையும், அசையா சொத்துகள் வாங்கக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். பணிபுரியும் பெண்கள் எதிர்பாராத உயர்வுகளைப் பெறுவார்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

அரசியல்
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த கௌரவமான பதவிகள் கிடைக்கும். தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவுகள் சிறப்பாக அமைந்து மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். எடுக்கும் காரியங்களை சிறப்பாகச் செய்து முடித்து மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

விவசாயிகள்
எல்லாவகையிலும் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீனமுறைகளைக் கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசுவழியிலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார் -உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் குறையும்.

கலைஞர்கள்
உங்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய அளவிற்கு கதாபாத்திரங்கள் அமையும். தடைப்பட்ட சம்பள பாக்கிகளும் கைக்குக் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் சாதகமான பலன்களையும் பெறுவீர்கள்.

மாணவமாணவியர்
கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். கடந்தகால மந்தநிலைகள் விலகும். நண்பர்களின் உதவி தக்கசமயத்தில் கிடைக்கும். அரசுவழியில் ஆதரவுகள் உண்டாகும். விளையாட்டுப் போட்டி, கட்டுரை, கவிதை போன்றவற்றில் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள். சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் அமையும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 2-9-2017 முதல் 5-10-2017 வரை
குரு பகவான் இக்காலங்களில் ராசியாதிபதி செவ்வாயின் நட்சத்திரத்தில் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக உங்களுக்கு இருந்த தடைகள் விலகும். வீண்விரயங்கள் குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மனமகிழ்ச்சி அளிக்கும். புத்திரவழியில் பூரிப்பு, கணவன்-மனைவியிடையே ஒற்றுமை போன்ற யாவும் மிகச்சிறப்பாக அமையும். குடும்பத்தில் ஒற்றுமை, புதிய பொருட்சேர்க்கைகள், ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் யாவும் சிறப்பாக இருக்கும். உற்றார்-உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கொடுக்கல்-வாங்கலில் நல்ல லாபத்தினை எதிர்பார்க்கலாம். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபமும் அபிவிருத்தியும் பெருகும். போட்டி, பொறாமைகள் குறையும். அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ் உயரக்கூடிய காலமாகும். மக்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு பொருளாதார நிலை மேன்மையடையும். கடன்கள் குறையும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 6-10-2017 முதல் 7-12-2017 வரை
குரு பகவான் உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் ராகுவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. நினைத்த காரியங்களை நினைத்தபடி நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைந்து எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் கொடுத்த நேரத்தில் காப்பாற்றமுடியும். சிலருக்கு புதிய வீடு, மனை வாங்கக்கூடிய வாய்ப்புகள்கூட உண்டாகலாம். மங்களகரமான சுபகாரியங்கள் இக்காலத்தில் நடைபெற்று மனமகிழச்சியினை உண்டாக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளும் உங்களைத் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் திருப்தியான நிலை நிலவும். எதிர்பார்க்கும் உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு, இடமாற்றம் யாவும் சிறப்பாக அமையும். தொழில், வியாபார ரீதியாகவும் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் எதிர்பார்க்கலாம். கலைஞர்களுக்கு வாய்ப்புக்கள் தேடிவரக்கூடிய காலம் என்பதால் அதை சிறப்புடன் பயன்படுத்திக்கொள்வது நல்லது. துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 8-12-2017 முதல் 13-2-2018 வரை
குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு 7-ல் தனது சொந்த நட்சத்திரமான விசாகத்தில் சஞ்சாரம் செய்வது அனுகூலமான அமைப்பாகும். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக அமையும். உங்களுக் கிருந்து வந்த கடன்கள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். 19-12-2017 முதல் சனி பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு அஷ்டமச்சனி முடிவடைகிறது. இதனால் எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்புடன் செய்து முடிக்கமுடியும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலனை அடை வீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவும், உதவியும் தேடிவரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வு களைப் பெறமுடியும். தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

குரு பகவான் அதிசாரமாக விருச்சிக ராசியில் 14-2-2018 முதல் 6-3-2018 வரை
உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் குரு பகவான் அதிசாரமாக சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஏற்றத்தாழ்வுடையப் பலன்களைப் பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகளும் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளுக்கு உற்றார்- உறவினர்களே தடையாக இருப்பார்கள். நெருங்கியவர்களிடம் வீணான வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்ள முடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தினாலும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. கல்வி பயிலுபவர்களும் நல்ல மதிப்பெண்களைப்பெற சற்றே கடின முயற்சிகளை மேற்கொள்வது உத்தமம். குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து வழிபடவும்.

குரு பகவான் வக்ரகதியில் 7-3-2018 முதல் 3-7-2018 வரை
குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் சனியின் சாதகமான சஞ்சாரத்தால் எதிலும் ஓரளவுக்கு நற்பலன்களை அடைவீர்கள்.பணவிஷயத்தில் மட்டும் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு முன்னேற்றமாக அமையும். எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். நெருங்கியவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதால் குடும்பத்தில் ஒற்றுமை குறையாமல் பார்த்துக்கொள்ள முடியும். பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதாகவே அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் வெற்றிகளைப் பெறமுடியும் என்றாலும் சுபகாரிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். அரசியல்வாதிகள் தேவையற்ற செலவுகளையும், பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறமுடியும். கௌரவமான பதவிகள் அமையும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தி, பைரவரை வணங்குவது உத்தமம்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 4-7-2018 முதல் 4-10-2018 வரை
உங்கள் ஜென்ம ராசிக்கு 7-ல் தனது சொந்த நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற பிரச்சினைகள் அனைத்தும் விலகி ஏற்றமான பலனைப் பெறுவீர்கள்.எந்தவொரு முயற்சியிலும் சாதகமான பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பாராத அளவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு உடையவற்றாலும் லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் இருந்து வந்த இடையூறுகள் விலகி நிம்மதியான நிலை ஏற்படும். சிலர் எதிர்பாராத கௌரவப் பதவிகளையும் பெறுவார்கள். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை நிலவும். நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலிலும் நல்ல லாபம் அமையும். வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். மற்றவர்களுக்கு உதவி செய்து மன சந்தோஷத்தை அடைவீர்கள். கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை சிறப்படையும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் நிறைவேறும். துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

பரிகாரம்
சர்ப்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது, ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம். ராகு, கேதுவுக்கு சர்ப்ப சாந்தி செய்வது நல்லது.

வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவெண்பாக்கம் ஊன்றீஸ்வரரை தரிசித்து வந்தால் நல்ல பலன் உண்டு.

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுவது சிறந்தது.

அறுபடை முருகன் கோயில் ஒன்றுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்யவும்.

ஏழை எளிய மக்களின் மருத்துவ செலவிற்கு உதவுங்கள்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 1, 2, 3, 9.
நிறம்: ஆழ் சிவப்பு.
கிழமை: செவ்வாய்.
கல்: பவளம்.
திசை: தெற்கு.
தெய்வம்: முருகன்.

Leave a Comment