ஆடிக்கிருத்திகை விரதமுறை மற்றும் பலன்கள் | Aadi kiruthigai

#ஆடிக்கிருத்திகை விரதம் இருக்கும் முறை இதுதான்!!

கிழமைகளில் செவ்வாயும், திதிகளில் சஷ்டியும், நடத்திரங்களில் கிருத்திகையும் முருகனுக்கு உகந்தது.

மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வரும்.
ஓரிரு மாதத்தில் மாதத்திற்கு இரு கிருத்திகை நட்சத்திரம் வரும்.

அன்றைய தினம் அனைத்து கோவில்களிலும் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பெரும்பான்மையோர் விரதமிருந்து அவரவர் இல்லத்தில் #கிருத்திகை_வழிபாடும் #நடக்கும். இவ்வாறு மாதந்தோறும் விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் வருடத்திற்கு மூன்று கிருத்திகை தினத்தில் விரதமிருந்து வழிபாடு செய்வர். இப்படி மூன்று கிருத்திகை தினத்தில் விரதமிருந்து முருகனை வணங்குபவர்களுக்கு, வருடத்தின் அனைத்து கிருத்திகைகளிலும் விரதமிருந்து வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Lord Murugar
ஆடிக் கிருத்திகை, கார்த்திகை கிருத்திகை, தைக் கிருத்திகை என மூன்று கிருத்திகைகளே முக்கோடி கிருத்திகை என அழைக்கப்படும் #சிறப்பு_வாய்ந்தவை. தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

கிருத்திகை விரதமிருப்பவர் அதிகாலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, வீட்டை தூய்மைப்படுத்தி காலை உணவெதும் உட்கொள்ளாமல் மதியம் உப்பில்லா உணவை முருகனுக்கு படைத்து அதை உண்டு, இரவு பால் பழத்தோடு விரதத்தை முடிக்க வேண்டும்.

காலமாற்றத்தில் உப்பில்லாமல் உணவு படைப்பதும், புண்ணிய தீர்த்தத்தில் நீராடுவதும் நின்று போயிற்று.. அன்றைய தினம் கந்தர் சஷ்டி, கந்தர் அலங்காரம், திருப்புகழ் ஆகியவற்றை இறைசிந்தனையோடு பாராயணம் செய்து, மறுநாள் ரோகிணியன்று விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
எல்லா முருகன் கோயில்களிலும் ஆடிக்கிருத்திகையன்று பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என விமரிசையாக பல விழாக்கள், உற்சவங்கள் நடைப்பெறும். பழனி,. திருச்செந்தூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷமென்றாலும் #திருத்தணி_முருகன் கோவில்தான் ஆடிக்கிருத்திகைக்கு
மிக விசேசமானது.

இந்நாளில், திருத்தணி முருகன் கோவிலுக்கு #நேர்த்திக்கடன் செலுத்த உலகெங்கும் இருந்து பக்தர்கள் வருவர். இங்கிருக்கும் #சரவணப்பொய்கையில் மூன்று நாட்கள் இரவு வேளையில் #தெப்போற்சவம் நடக்கும். காவடி பிரியனான முருகனுக்கு நேர்த்திக்கடனாய் காவடி எடுப்பதும், முடிக்காணிக்கையும் ஆடிக்கிருத்திகையில் நிகழும்.

ஆடிக்கிருத்திகை நாளில்
விருதமிருந்து வழிபடுவோருக்கு
முன் ஜென்ம வினைகள் யாவும் தீரும்..

*🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🦚*

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

அழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள்

108 முருகர் போற்றி

#கந்தன்_காலடியை #வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
கந்தன் காலடியை வணங்குங்கள்!

தந்தை பரமனுக்கு சிவகுருநாதன்!
தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன்
சிவசக்தி தானே வேலன்!
அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்!
மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன்!

உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி!
உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி!
கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி!
அன்னையர்கள் பலருண்டு
அவனுக்கினை எவனுண்டு!

ப்ரணவ மந்திரத்தை மறந்தான்
பிரம்மனே!
அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே!
அதனால் கந்தனிடம் பிரம்மனும்
மிரளுவான்!
கந்தன் அடியவருக்கு அவனும்
அருளுவான்!

கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்!
வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்!

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
கந்தன் காலடியை வணங்குங்கள்!

#முருகாசரணம்
#MurugaSaranam

Leave a Comment