Athma and Anathma

ஆத்மா, அனாத்மா, பரமாத்மா பற்றிய அழகிய விளக்கம் – Athma and Anathma

ஆத்மா, அனாத்மா, பரமாத்மா அப்படின்னா என்ன?

பகவான்: ஆத்மான்னா ஜீவாத்மா. மற்றது நேரடியா அதே பொருள்தான்.

ஆத்மா நித்ய ஸித்தம், அதாவது எப்பவும் இருக்கறது.

எல்லோரும் ஆத்ம ஞானம் அடையணும்னு விரும்பறா.

தன்னைத்தானே தெரிஞ்சுக்கறதுக்கு என்ன உதவி வேணும்?

நாம இருக்கோம்ன்னு தெரியறதுக்கு நமக்கு முன்னாடி கண்ணாடியைக் காட்டணுமா? இந்த நாம இருக்கோம்ன்னு இருக்கில்லையா…. அதுதான் ஆத்மா.

எல்லாரும் என்ன நினைக்கறோம்…ஆத்மான்னா… ஏதோ புதுசா பாக்கப் போறோம்ன்னு…. அது எப்பவும் இருக்கறது. மாறாம இருக்கறது.

அது ஜோதி மயமா, ஒளி வடிவா இருக்கும்ன்னு நினைக்கறோம்.

அது ஒளியில்லை; இருளில்லை; ‘இருக்கறது’தான் அது.

அதைச் சொல்ல முடியாது.

அதிகபட்சமா சரியா சொல்லணும்னா ‘நான் இருக்கேன்னு நான் இருக்கேன்’ (I Am that I Am).

சாஸ்திரங்கள்லே ஆத்மா, மயிர் நுனி, ஜோதி, கட்டை விரல் அளவு, ஆகாயத்தை காட்டிலும் பரந்தது, நுண்ணியதை விட நுண்ணியது, அப்படி இப்படின்னு என்னன்னமோ
சொல்லியிருக்கு.

சாரம் இல்லை. உபசாரம்தான்.

உண்மையிலேயே ஆத்மா வெறும் ‘இருப்பு’ மாத்ரம்தான்.
இருக்கறதுக்கும் இல்லாததுக்கும் ஆதாரமான இருப்பு.

வெறும்’அறிவு’ மாத்ரம்தான். அறிவுக்கும் அறியாமைக்கும்
ஆதாரமான அறிவு.

அதை எப்படிச் சொல்ல முடியும்?

ரொம்ப ரொம்ப சாமான்யமான இருப்பு.

இதைத்தான் தாயுமானவர்.

தாயுமானவர் பாடல்

‘நான் என்று ஒரு முதல் உண்டு என்ற
நான் தலை நாண என்னுள்
தான் என்று ஒரு முதல் பூரணம்
ஆகத் தலைப்பட்டு ஒப்பில்
ஆனந்தம் தந்து என் அறிவை எல்
லாம் உண்டு அவசம் நல்கி
மோனம் தனை விளைத் தால்இனி
யாது மொழிகுவதே’… ன்னு பாடறார்.

மொத்தத் தாயுமானவர் பாடல்களோட இதயம்ன்னே இந்தப் பாட்டைச் சொல்லலாம்.

Leave a Comment