திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா..  Sani Peyarchi arrangements

நவகிரகங்களில் ஒன்றான சனி பகவான் திருநள்ளாறு தர்பாரேண்யேஸ்வரர் கோயிலில் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். இங்குள்ள நளதீர்த்தத்தில் புனிதநீராடி, சனி பகவானை வணங்கி, திலதீபம் ஏற்றி வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் என்பது ஐதிகம். சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பதை சனிப் பெயர்ச்சி விழாவாக இத்தலத்தில் வெகுசிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.

வரும் டிசம்பர் 19-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.01 மணிக்கு சனி பகவான், விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்குப் பெயர்ச்சியடைகிறார். அந்நாளில் லட்சக் கணக்கான பக்தாகள் சனிபகவானைத் தரிசிக்க வருவார்கள். அவர்களுக்குப் புதிய முறையில் தரிசன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இதற்கு முன்பு இலவச தரிசனப் பாதையில் வரும் பக்தர்கள், சனீஸ்வரபகவானை மட்டும்தான் தரிசனம் செய்ய முடியும். அதே நேரத்தில் கட்டணம் செலுத்தி தரிசனம் செய்யவரும் பக்தர்கள் சனீஸ்வரபகவானுடன் சுவாமி மற்றும் அம்பாளையும் தரிசனம் செய்ய முடியும்.

புதிய முறையில் தரிசன ஏற்பாடு

இந்நிலையில், கட்டண தரிசனத்துக்கு வரும் பக்தர்களைப்போல இலவசத் தரிசனத்துக்கு வரும் பக்தர்களும் சுவாமி, அம்பாள் மற்றும் சனீஸ்வரபகவானைத் தரிசிக்கும் வகையில் புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் கேசவன் பேசுகையில் கூறினார்…

சனிப்பெயர்ச்சி விழாநாளில் மட்டுமல்லாமல், அதைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமைதோறும் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து லட்ச கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதனால், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும் தேவஸ்தான நிர்வாகமும் மேற்கொண்டு வருகிறது.

 

இந்த சனிப்பெயர்ச்சி விழாவில் இப்படி பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது…..

Leave a Comment