Mesha rasi guru peyarchi palangal 2021-22

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22 Mesha rasi guru peyarchi palangal 2021-22

 

மேஷ ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் இருந்து தொழிலில் பல சிக்கல்களையும் பிரச்சனைகளையும் தந்த குரு இப்போது ராசிக்கு யோகத்தை அளிக்க கூடிய 11ம் இடமான லாப ஸ்தானத்தில் வருகிறார். குரு லாப ஸ்தானத்தில் அமர்வது மிகவும் நல்லது. அடுத்த ஒரு வருட காலத்திற்கு நல்லது நடக்க போகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. குரு எந்த ராசிக்கும் 11ம் இடத்திற்கு வந்தால் அது யோகம் தான். இனி மேல் நீங்கள் எந்த முயற்சியில் இறங்கினாலும் அது வெற்றி தரும். லாப ஸ்தானத்திற்கு குரு வரும்போது எல்லா நன்மைகளையும் எதிர்பார்க்க முடியும். குரு உங்களுக்கு 9, 12க்கு உடையவர். உங்கள் செல்வமும், ஆரோக்கியமும் சிறந்து விளங்கும். இவற்றில் முன்னேற்றமும் ஏற்படும்.

எடுத்த வேலைகளில் வெற்றியையும், குடும்பப் பிரச்னைகளுக்கான நல்ல தீர்வுகளையும் லாப ஸ்தான குரு தந்தருள்வார்.பணப் புழக்கம் அதிகரிக்கும். கடன் தீரும். பாதியில் நின்று போன வீடு கட்டும் பணி தடைகள் நீங்கி மீண்டும் துவங்கும். வீடு வாகனம் ஆகிய வசதி ஏற்படும். திருமணம் காரியம் கைகூடி வரும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். கடுமையான உடல் உபாதைகள் ஏதும் வர வாய்ப்பு இல்லை. அப்படி வந்தாலும் அது நாளடைவில் குணமாகும். குடும்ப வருமானம் கனிசமாக உயரும். சிலருக்கு, திடீர் ஆதாயங்களும், எதிர்பாராத பண வரவுகளும் கூடக் கிடைக்கலாம். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். குடும்ப நபர்கள் உடனான உறவு முறையும் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் உங்கள் பொன்னான நேரத்தை செலவு செய்வீர்கள். அண்டை அயலார், நண்பர்கள் போன்றவர்களும் ஆதரவாகப் பழகுவர். மொத்தத்தில் மற்றவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் எப்போதும் கிடைக்கும்.

இந்தக் காலக் கட்டத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட எல்லா வழிகளும் கிடைக்கும். முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்ல எந்த ஒரு தடையும் இருக்காது. தன்னம்பிக்கையம், தைரியமம், அதிகரிக்கும். உங்கள் அறிவு திறன் வெளிப்படும். நீங்கள் எதையும் புதுமையாகச் செய்ய நினைப்பீர்கள். நடக்கும் விஷயங்கள் யாவும் உங்களுக்கு சாதகமாக அமையும். ஆண்களுக்குப், பெண்களிடமும், பெண்களுக்கு ஆண்களிடமும் ஆழ்ந்த ஈர்ப்பு உருவாகலாம். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர் வருமானமும் அதிகரிக்கும். பல வகையில் பணம் வந்து சேரும். சொத்து வாங்குவதற்கும் இது உரிய நேரம் என்று சொல்லலாம். இது உங்கள் எதிர்காலத்திற்கும், நிதிநிலையை மேம்படுத்துவதற்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, இப்பொழுது, வீடு, நிலம், அல்லது வாகனம் போன்றவை வாங்குவது, புத்திசாலித்தனம் ஆகும்.

சொத்து, வாங்குவது விற்பது போன்றவையும் கணிசமான லாபம் தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப உறுப்பினர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். உறவினர்களுடன் சிறந்த உறவு முறை வளர்த்துக்கொள்ள முடியும். வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க முடியும். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு இருக்கும். கணவன், மனைவிடையே நிலவும் உறவிலும், மகிழ்ச்சியும், புரிதலும், நெருக்கமும் நிறைந்திருக்கும். உங்கள் ஆரோக்கியம் பொதுவாக நன்றாக இருக்கும். வருமுன் காப்பது நல்லது என்பதை கருத்தில்கொண்டு அதற்கேற்ப ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இது போல, உங்கள் குடும்பத்தினரும் நல்ல உடல்நிலையுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பார்கள் எனலாம். புத்திசாலித்தனத்தின் மூலம் நீங்கள் முன்னேற்றம் ஆடையை முடியும்.

புது வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். உத்யோகத்தில் புது பதவி, பொறுப்புகள் தேடி வரும். அலுவலகத்திலும் மேலதிகாரிகள், மற்றும் சக பணியாளர்களுடன் சுமுக உறவு இருக்கும், மேலும் அவர்கள்களின் முழு ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதகமாக சூழ்நிலைகள் அமையும். நீங்கள் பல சவால்களை எதிர் கொள்ள வேண்டி இருந்தாலும் இந்த பெயர்ச்சிக் காலக் கட்டங்களில் சவால்களை வெற்றிகரமாக சமாளிக்க முடியும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் லாபம் கணிசமாக இருக்கும். லாபகரமான தொழில் அமையும். தொழில் மென்மேலும் விருத்தி அடையும். பல விதத்திலும் வருமானம் கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததே.

பரிகாரம் : பௌர்ணமி நாட்களில் கிரி வலம் செல்லவும்.

மேஷராசிக்காரர்களுக்கு பலவிதத்திலும் நன்மைகளை தரக் கூடியவர் திருச்செந்தூர் முருகப் பெருமான். அது குரு ஸ்தலமும் கூட..! எனவே மேஷ ராசிக்காரர்கள், திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை வணங்கி வந்தால் மேலும் பலவித நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க வளமுடன்.

 தக்கோலம் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். வாழ்வில் ஆதரவில்லாமல் தவிக்கும் முதியோர்களுக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்யுங்கள். குருவின் அருள் உங்களோடு இருக்கும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Leave a Comment