பசு வழிபாட்டின் மகத்துவம்.

பசு வழிபாட்டின் மகத்துவம் – (Benefits of worshipping cow)

இந்துக்களுக்குரிய வழிபாடுகளில் பசு வழிபாடு முக்கியமானதாகும்.

பசுவை நாள் முழுவதும் பார்த்தபடி, தொழுவத்தில் இருந்தாலே, பிரம்மஹத்தி தோஷம் விலகிவிடும் என்கிறார்கள்.

தீராத தோல் நோய் உள்ளவர்கள்ஏதேனும் கோ-சாலையில் தினசரி இரண்டு மணிநேரம் துப்புரவுப் பணியை செய்து பாருங்கள். கோ-சேவையின் மகத்துவம் புரியும்.

பசுவைத் தவிர உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தோஷம் உண்டு. ஒரு பசுவுக்கு ஒரு நாள் தண்ணீர் தந்தவனின், முன்னோர்களில் 7 தலைமுறையினர் முக்தியடைவார்களாம்.

அதிகாலையில் எழுந்தவுடன் யாரிடமும் பேசாமல்,

‘சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசினி
பாவனே சுரபி சிரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே’

என்ற மந்திரத்தை உச்சரித்தபடி, பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுத்தால், குழந்தைப் பேறு கிடைக்குமாம்.

பசு காயத்ரி மந்திரம்:

‘ஓம் பசுபதயேச வித்மஹே
மகா தேவாய தீ மஹி
தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்’

Leave a Comment