சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Simma rasi guru peyarchi palangal 2019-20

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21

மேஷம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | ரிஷபம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கடகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கன்னி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | துலாம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | தனுசு குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மகரம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கும்பம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மீனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

சிம்ம ராசி பலன்கள் – 92/100.

சிம்மம்( சிங்கம் )சிலிர்த்தெழுந்து, சிங்கிளாக சிக்ஸ் அடித்து, சிரசில் (தலையில் சிங்க) சின்னம் பதித்து, சிகரம் தொடும் காலமிது.

சிம்ம ராசிக்கு குரு பகவான் 5ம் அதிபதியும் 8ம்ப அதிபதியாகவும் வருவார்

2020ஆம் ஆண்டு மிக நல்ல பலனை அடையக்கூடிய ராசிகளில் முதலாவதாக இருப்பது சிம்மராசியே.

காரணம் ராசிக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் எனப்படும் 5ஆம் இடத்தில் குரு ஆட்சி பெற்று அடுத்து ஒரு வருடத்திற்கு பலன் நடத்த இருக்கிறார்.

அடுத்த சில மாதங்களில் சனியும் ருண, ரோக, சத்ரு ஸ்தானம் எனப்படும் ஆறில் ஆட்சி பெற இருக்கிறார்.

அதுபோல் ராகுவும் ராசிக்கு பதினோராம் இடத்தில் அமர்ந்து குருவின் பார்வையைப் பெற இருக்கிறார்.

பருத்தி சேலையாய் காய்ப்பது என கேள்விப்பட்டிருப்போம்.

சேலையாய் காய்த்ததை அனுவித்து விட ஒரு ஆளை நினைப்பதுபோல் பலன் மும்மடங்கு கிடைக்கும்.

உங்கள் சுய ஜாதகத்தில் 5, 9 ஆம் அதிபதிகள் நல்ல நிலையில் இருந்து அதன் திசைகள் நடைமுறையில் இருந்தால் அல்லது ராகு யோகம் செய்யக்கூடிய நல்ல நிலையில் இருந்து மேற்கண்ட கோட்சார நிலைகள் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு நீடிப்பதால் அஷ்ட லட்சுமிகளும் வீட்டில் வாசம் புரியும்.

சொந்தத் தொழில் தாராளமாக செய்யலாம். ( உங்கள் சுய ஜாதக அமைப்பு நன்றாக இருந்தால்.)

தொழிலில் லாபம் கூடும். எதிர்பார்த்த ஆர்டர்கள் ஒன்றுக்கு இரண்டாக கிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெற்று தேறுவார்கள்.

குரு தனுசில் ஆட்சி பெற்று 9-ஆம் இடத்தையும், 11-ஆம் இடத்தையும், ராசியையும் பார்ப்பதால் இதுநாள் வரை இருந்த கவலைகள் பறந்தோடும்.

கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும் அல்லது கரைந்துவிடும்.

சூரியனின் ஆதிக்கத்தைப் பெற்ற சிம்மராசிக்காரர்கள் எதிலும் தனித்துவமானவர்கள். அவர்களுக்கு அடுத்த ஒரு வருட கோட்சாரம் மிக மிக அருமையாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும்.
அரசியலில் இருப்பவர்களுக்கு தலைமைப்பதவி கைகூடும் .பிரமோஷன் எதிர்பார்க்கலாம். அரசாங்க தொடர்புகளும், அரசின் சலுகைகளும் அதிக அளவில் கிடைக்கப்பெறும்.

நீண்ட நாட்களாக குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்த திருமணமான தம்பதிகளுக்கு அழகான குழந்தை பிறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். திருமணம் கைகூடும்.

ஆதிக்கம் செலுத்துபவன் இடத்தில் அதிகாரத்தை கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதை போல உங்களுக்கு அதிகாரமும், புகழும் ஒரு சேரக் கூடும் காலம் இது.

எதிலும் தனித்து முதல் இடத்தில் வெற்றி காண்பீர்கள்.

பதுங்கி இருந்த சிங்கம் பாய்வதற்கு நேரம் வந்துவிட்டது. சிங்கம் சிங்கிளா ஜெயிக்க போகுது.

சிம்ம ராசியை பற்றி எதிர்மறையாக சொல்ல எந்த ஒரு கிரக அமைப்பும் இல்லை அடுத்த ஒரு வருடத்திற்கு.

அறுவடைக்கு தயாராக இருங்கள் அனைத்தும் வெற்றியே.

சுருக்கமாக சொன்னால் சிங்கம் காட்டுக்கு ராஜா. சிம்ம ராசியை பெற்ற நீங்கள் நாட்டில் ராஜா. ஒன் மேன் ஆர்மியாக அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள் .

அசிங்கமாக இருந்த நீங்கள் சிங்கமாய் சீரும் நேரமிது. பயன்படுத்தி கொள்ளுங்கள்.

14 .12 .2019 முதல் 10.1.2020 வரை குரு அஸ்தமனமாக இருப்பதால் இக்காலகட்டங்களில் பணம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அதுபோல் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 14.12.2019 முதல்10.1.2020 வரை இந்த இடைப்பட்ட நாளை செயற்கை கருத்தரிப்பிற்கு பயன்படுத்த வேண்டாம்.

இந்த காலகட்டங்களில் நீங்கள் செய்யும் முயற்சி தோல்வியில் முடியலாம்.

30.3.2020 முதல் குரு அதிசாரமாக மகர ராசிக்கு செல்வதால் பணம் மற்றும் அரசின் சலுகையில் தாமதம் ஏற்படும். 01 . 6 .2020 வரை இந்நிலை நீடிக்கும்.

தனுசு ராசியில் மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம் உத்திராடம் 1 பாதம் நட்சத்திரங்கள் உள்ளன.

மற்றபடி இந்த குருப்பெயர்ச்சி உங்களை குஷி ஊட்டி குதுகூலப்படுத்த காத்திருக்கிறது.

சிம்ம ராசிக்கு 2020 ஆம் ஆண்டு மிக சிறப்பான பலன் தரும் ஆண்டாகவே இருக்கும்.

அறிவுரை
அதிக உழைப்பையும், கற்பனையான கவலைகளையும் குறைத்துக் கொள்ளுங்கள்,
வரவிற்கேற்ற செலவுகளும் இருப்பதால், சற்று சிக்கனமாக இருக்க முயற்சி செய்யுங்கள்,
மாணவ – மாணவியர் தகாத நட்பை தவிர்க்கவும்,
பல பெண்மணிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க சிறந்த வாய்ப்பிருப்பதால், உடல் நலனில் கவனம் இருக்கட்டும்.
பரிகாரம்
மாணவ, மாணவியர் தினமும் அவதார புருஷரான ஸ்ரீமத் நிகாமந்த மகா தேசிகர் சக்தி வாய்ந்த ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் சொல்லி வர வேண்டும்.
2. இந்த ராசியில் பிறந்துள்ள புருஷர்கள் தினமும் ஆதித்ய ஹிருதயம் படித்து வருதல் அளவற்ற நன்மைகளைத் தரும்.
பெண்மணிகள், காலையில் நீராடிய பின்பு, ஒரு ஸர்க்கமாவது ஸ்ரீமத் சுந்தரகாண்டம், மாலையில் ஸ்ரீ அனுமான் சாலிசாவும் படித்து வந்தால் நன்மைகள் பலமடங்கு அதிகரிக்கும்.
பெண்மணிகள் ஸ்ரீ அபிராமி அந்தாதி, மற்றும் ஸ்ரீ லஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி வருவது மிகச்சிறந்த பரிகாரங்களாகும்.

பலன் இரட்டிப்பாக வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும். திருசெந்தூர் முருகனையும் , தக்ஷிண மூர்த்தியும் வழிபட புகழ் பெருகும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-20

மேஷம் – http://bit.ly/mesham
ரிஷபம் – http://bit.ly/rishabam
மிதுனம் – http://bit.ly/mithunam
கடகம் – http://bit.ly/kadagam
சிம்மம் – http://bit.ly/simmam
கன்னி – http://bit.ly/kannirasi
துலாம் – http://bit.ly/thulam
விருச்சிகம் – http://bit.ly/viruchigam
தனுசு – http://bit.ly/thanusu
மகரம் – http://bit.ly/magaram
கும்பம் – http://bit.ly/kumbam
மீனம் – http://bit.ly/meenamrasi

Leave a Comment