காரி நாயனார்.
திருக்கடவூரிலே அவதரித்த இறையருளாலர் காரி என்பவர் ஆவார்.சிவனின் பால் அன்பு பூண்டு திருத்தொண்டு புரிந்தவர் காரி ஆவார்.மேலும் கடையேழு வள்ளல்களில் காரியும் ஒருவர் ஆவார்.காரி பெருமானார் தமிழின் மீது மிகுந்த அன்பு பூண்டு நல்ல தமிழ் வளமை பெற்று, வண் தமிழில் துறைகளின் பயன் தெரிந்து, நன்றாகச் சொல் விளங்கிப் பொருள் புரிய காரியக்கோவை என்ற நூலை இயற்றினார். இது ஒரு கோவைப் பாட்டாகும்
காரியக்கோவை நூலை இயற்றியதோடு மூவேந்தர்களிடமும் சென்று அவர்கள் மகிழும்படி எடுத்துக் கூறி, அம்மன்னர்களிடம் இருந்து பல்வேறு திரவியங்களைப் பரிசாகப் பெற்றுக் கொண்டு, அவற்றை வைத்து பல சிவாலயங்களைக் கட்டுவித்தும் சிவனடியார்களுக்கு நல்லன செய்தும் உயர்ந்தார்..
காரியக்கோவை எனும் அற்புத நூலை அருளியமையால்
காரி நாயனார் இறுதியில், இறைவனுடைய திருவருளினாலே, இந்த உடலோடு வடகயிலை சிவபுரம் அடையும் பாக்கியமும் இறைவனின் திருவடிபேறும் பெற்றார். அறுபத்துமூன்று நாயன்மார்களிலும் ஒருவரானர்.
காரி நாயனார் குருபூசை மாசி பூராடம் நட்சத்திரம் கொண்டாடப்படுகிறது.
காரிநாயனார் திருவடிகள் போற்றி.
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.