Vijayadashami
*ஏன் விஜயதசமியை கல்விக்கு உகந்த நாள் என்று சொல்கிறோம்? விஜயதசமி கொண்டாடுவது ஏன்?*
சரஸ்வதி பூஜை முடிந்த அடுத்த நாளை அனைவரும் விஜயதசமி நாளாக கொண்டாடுகிறோம். ஏன் விஜயதசமி கொண்டாடுகிறோம் என்று தெரியுமா?
நவராத்திரிப் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் மகா நவமி என்று தொழில்களையும், கல்வியையும், கலைகளையும் போற்றும் விதமாகவும், அதற்கடுத்த நாள் விஜயதசமி என்று வெற்றித் திருநாளாகவும் உலகெங்கும் தொன்று தொட்டுக் கொண்டாடி வருகின்றார்கள்.
விஜய் – வெற்றி; தசமி – பத்து (தசம் என்றால் பத்து). இதனையே விஜயதசமி என்று கொண்டாடுகிறோம். எனவே 9 நாட்களும் விரதமிருந்து வழிபடுவோர், 10ம் நாளான இன்று அன்னையின் வெற்றியைக் கொண்டாடி விரதத்தை முடித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நாள் மகிஷாசுரன், சண்ட முண்டர்கள், சும்ப நிசும்பர்கள் ஆகிய கொடிய அரக்கர்களை அன்னை பராசக்தி அழித்து வெற்றி கொண்ட திருநாள். தீமையின் உருவான ராவணனை ஸ்ரீராமன் போரில் வென்ற திருநாள். பாண்டவர்கள் தர்மத்தின் வெற்றிக்காக தங்கள் ஆயுதங்களையும், அன்னை துர்க்கையும் வழிபட்ட நன்னாள்.
*விஜயதசமியன்று என்னென்ன தொடங்கலாம்?*
🌀 இந்த விஜயதசமி நாளில் நாம் துவங்கும் எல்லா புதிய முயற்சிகளுக்கும், குறிப்பாக (வித்தியாரம்பம் செய்தல்) ஏடு தொடங்குதல், புதிய வியாபார நிலையம் ஆரம்பித்தல், புதிய தொழில் ஸ்தாபனங்கள் போன்றன ஆரம்பித்தால் வெற்றியும் புகழும் கிடைக்கும்.
🌀 குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, (அ) வீட்டிலேயே வித்யாரம்பம் செய்வது, நடனம், சங்கீதம், வீணா, வேணு, வயலின் போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல் நலம்.
🌀 முன்பே கற்க ஆரம்பித்தவர்களும் முதல் நாள் சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்ட புத்தங்கள், வாத்தியக் கருவிகள், மற்றும் தமது தொழிலுக்கான கருவிகளை விஜய தசமி பூஜை முடிந்து உபயோகம் செய்தல் நலம் என்று கூறப்படுகிறது. இந்த நல்ல நாளில் தமது குருவுக்கு வந்தனங்கள் செய்து குரு-தக்ஷிணை அளித்து வணங்குதல் மரபு.
சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்:
1. ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா
2. ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸீதாம்சு ஸமவிக்ரஹாம்
ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் ச சுகம் கரை
3. சதுர்பிர்த்தததீம் தேவீம் சந்த்ரபிம்ப ஸமானனாம்
வல்லபாம் அகிலார்த்தானாம் வல்லகீ வாதனப்ரியாம்
4. பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதிதேவதாம்
பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி பாமினீம் பரமேஷ்புன
5. சதுர்புஜம் சந்த்ரவர்ணாம் சதுரானன வல்லபாம்
நமாமி தேவி வாணீ த்வாம் ஆச்ரிதார்த்த பர்தாயினீம்
6. பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம
7. பாசாங்குச தரா வாணீ வீணாபுஸ்தக தாரிணீ
மம வக்த்ரே வஸேந்தித்யம் ஸந்துஷ்டா ஸர்வதா சிவா
8. சதுர்தசஸூ வித்யாஸூ நமதே யா ஸரஸ்வதீ
ஸாதேவி க்ருபயாயுக்தா ஜிஹ்வாஸித்திம் கரோதுமே
9. பாஹிமாம் பாவனே தேவி ரக்ஷ ராக்ஷஸநாசினி
அவ மாம் அம்புஜாவாஸே த்ராஹிமாம் துஹினப்ரபே
10. தேஹி தேவி கலாதாஷ்யம் வாணி வாக்படுதாம் திச
ஸரஸ்வதி ஸூதான் ரக்ஷ கலே பாலயமே குலம்…