பெரியபாளையம் பவானி அம்மன் பாமாலை

உள்ளத்தின் ஆசையை ஒப்பற்ற ஓசையாய்
ஒலித்திடும் ஓங்காரியே !
உலகத்தின் ஆசையை உதிக்கின்ற அருளாக
ஒளிருகின்ற ரீங்கரியே !

பள்ளத்தில் விழாமல் பாவங்கள் செய்யாமல்
பண்பாக்கும் சிங்காரியே !
பாசமுடன் கருணையை பாகாக குழைத்துமே
பசிதீர்க்கும் அலங்காரியே !

கொள்ளைகள் கொடுமைகள் இல்லாத வாழ்வுமழை
கொடுத்திடும் மின்னல் ஒளியே !
கொஞ்சிடும் குழந்தைகள் கோரிடும் வரங்களைக்
கொடுக்கின்ற அன்னை விழியே !

வெள்ளையம் பாளையம் வேப்பிலை ஆலயம்
வெகுவாக பெற்றத்தாயே !
வினைதீர்க்கும் சோலையாம் பெரிய நற்பாளயம்
வீற்றிடும் பவானி உமையே !!!