திருவெற்றியூர் வடிவுடையம்மன் பாமாலை
சந்தணம் குங்குமம் சவ்வாது திருநீறில்
தவழ்ந்திடும் சக்தி வடிவே
தங்க முக ஒளியிலே தரணியை வாழ்விக்கும்
தாயமுத அன்பு வடிவே !!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி – ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
செங்கனிச் சிரிப்பிலே செவ்வானம் பொழிகின்ற
செம்பவள முத்து வடிவே
செங்கதிர் ஒளி கூட்டி சிங்காரப்புகழ் சூடும்
செப்பரிய அழகு வடிவே !!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி – ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
கந்தனைக் கணபதியை தந்துமே வாழ்வித்த
கற்கண்டு கனிவு வடிவே
காற்றையும் மழையையும் கதிரவன் ஒளியையும்
கலந்து தரும் இயற்கை வடிவே !!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி – ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
சிந்தனைச் சோலையில் தென்றலாய் உலவிடும்
தெய்வ ஒளி சிற்பவடிவே
சிவனாரின் துணையாக திருவொற்றியூர் வாழும்
ஸ்ரீ வடிவுடையம்மை உமையே !!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி – ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி.