பிரதோஷ விரதம்!

பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

விரத முறை :

🌟 வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று காலையில் எழுந்து நீராடி, சிவநாம சிந்தனையுடன் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும்.

🌟 பிரதோஷ வேலை என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையுள்ள காலமாகும். பிரதோஷ வேளையில் சிவலிங்க மூர்த்தியை இடப தேவரின் இரு கொம்புகளுக்கிடையே கண்டு வணங்க வேண்டும்.

🌟 பிரதோஷ நேரத்தில் தேவியுடன் கூடிய சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை வணங்க வேண்டும். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.

 

🌟 முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாவது சுற்றில் செய்யப்படும் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்து கேட்க வேண்டும்.

பலன்கள் :

பிரதோஷ தினத்தை வழிபடுவதால் சுப மங்களம் நல் எண்ணம், நல் அருள் கிடைக்கும். பஞ்சம், வறுமை, பட்டினி அகலும். நல்ல புத்திரபாக்யம் கிடைக்கும். திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும். எதிரிகள், எதிர்ப்பு விலகும். அனைத்து துன்பமும் விலகும்..

ஓம் நமஹ சிவாய….

தென்னாடுடைய சிவனே போற்றி….

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…

108 சிவபெருமான் போற்றி

சிவபுராணம் பாடல் வரிகள்

லிங்காஷ்டகம் தமிழ் பதிகம் | Lingashtagam Tamil song lyrics

சிவராத்திரி பற்றிய 40 அரிய தகவல்கள்

Leave a Comment