2019 புத்தாண்டு பலன்கள் மற்றும் பரிகாரங்கள், 2019 Rasi palan and parigarangal
வரும் செவ்வாய்க்கிழமை 1/1/2019 அன்று பிறக்கும் ஆங்கில புத்தாண்டு பலன்கள் மற்றும் பரிகாரங்கள்…
மேஷம் ராசி 2019 புத்தாண்டு பலன்கள்
உங்களது ராசிக்கான மதிப்பெண் 90/100.
பரிகாரங்கள்:
கோவை மாவட்டம் தாளக்கரை தண்டுக்காரன்பாளையம் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஶ்ரீலட்சுமி நரசிம்மரை சுவாதி நட்சத்திர நாளில் தரிசிப்பது நல்லது.
செவ்வாய்க் கிழமைகளில் ஏழைகளுக்கு முடிந்த அளவு மருத்துவ உதவியோ / பணமோ தந்து உதவுங்கள்
ஏழைகளுக்கு உதவி புரிவதை வழக்கமாக செய்யுங்கள்
ஆசிரியர் மற்றும் வழிகாட்டிகளின் ஆசி பெறுங்கள்
சரியான இடத்தில் சரியான நேரத்தில் சரியான செயலை சரியான வழியில் சரியான நோக்கத்துடன் செய்வதற்கும் அனைத்தும் உங்களுக்கு இசைந்த வகையில் இருப்பதற்கும் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை 1௦8 முறை ஜபம் செய்யுங்கள்.
ஓம் குருவே நமஹ அல்லது ஓம் திவ்ய பூஷனாய நமஹ என்ற குரு மந்திரத்தை வியாழக் கிழமைகளில் 108 முறை சபிக்கவும்.
சாதகமான மாதங்கள்: ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர்
ரிஷபம் ராசி 2019 புத்தாண்டு பலன்கள்
உங்களது ராசிக்கான மதிப்பெண் 70/100.
பரிகாரங்கள்:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீசுப்பிரமணிய சுவாமியை கிருத்திகை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வழிபடுங்கள்.வாழ்வு சிறக்கும்.
இந்த ஆண்டு பின்பற்றப்பட வேண்டிய தொண்டு நடவடிக்கைகள் /வீட்டு பரிகாரங்கள்
சனிக் கிழமைகளில் உடல் நலம் குன்றியவர்களுக்கு முடிந்த அளவு உணவு தந்து உதவுங்கள்
மன நலம் குன்றியவர்களுக்கு தானம் அளியுங்கள்
மன அமைதி பெற பணிவுடனும் பிறருடன் அனுசரித்து/ விட்டுக்கொடுத்து செல்லவும்
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீ மஹே
தன்னோ ருத்ர ப்ரசோதயாத்
என்ற சிவ மந்திரத்தை 108 முறை சொல்லவும்
சனீஸ்வர ஸ்லோகத்தை 108 முறை சொல்லவும்
ஓம் சநேச்சராய நமஹ அல்லது ஓம் நீலாம்பர விபூஷனாய நமஹ
சாதகமான மாதங்கள் : ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்
மிதுனம் ராசி 2019 புத்தாண்டு பலன்கள்
உங்களது ராசிக்கான மதிப்பெண் 70/100.
பரிகாரங்கள்:
கடலூர் மாவட்டம் நஞ்சை மகத்து வாழ்க்கை என்னும் ஊரில் அருள்பாலித்து கொண்டிருக்கும் அருள்மிகு காளியம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வழிபடுங்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். .
இந்த ஆண்டு பின்பற்றப்பட வேண்டிய தொண்டு நடவடிக்கைகள் /வீட்டு பரிகாரங்கள்
சனிக்கிழமைகளில் நோயாளிகளுக்கு உணவு அளிக்கவும்
பிச்சைக்காரர்களுக்கு தானம் செய்யவும்
ஓம் கேதவே நமஹ அல்லது ஓம் மிருத்யுபுத்ராய நமஹ
என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்
சாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே, மற்றும் நவம்பர்.
கடகம் ராசி 2019 புத்தாண்டு பலன்கள்
உங்களது ராசிக்கான மதிப்பெண் 80/100.
பரிகாரங்கள்:
காஞ்சிபுரம் மாவட்டம் இளநகர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு உமையாம்பிகை சமேத அருள்மிகு உடையீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வழிபட்ட பிரச்னைகள் அகலும்.
இந்த ஆண்டு பின்பற்றப்பட வேண்டிய தொண்டு நடவடிக்கைகள் /வீட்டு பரிகாரங்கள்
உணர்ச்சிகளை கண்காணிக்கவும், ஒவ்வொரு மணி நேரமும் உங்களை நேர்மறையாக மீட்டமைக்கவும்.
முன்னோர்கள் மற்றும் பெரியவர்களின் ஆசி பெறவும்
சோம்பேறித்தனத்தை கைவிடவும்.எந்தச் செயலையும் ஒத்தி வைக்க வேண்டாம்.
உண்மையாகப் பேசவும்
தான தர்மங்கள் செய்யவும்
ஓம் ராகுவே நமஹ அல்லது ஓம்நிதிபயாநமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்
சாதகமான மாதங்கள் : ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர்
சிம்மம் ராசி 2019 புத்தாண்டு பலன்கள்
உங்களது ராசிக்கான மதிப்பெண் 85/100
பரிகாரங்கள்:
விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரம் என்னும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஶ்ரீசுப்பிரமணிய சுவாமியை சஷ்டி திதி நாளில் சென்று தரிசித்து வழிபட மகிழ்ச்சி பெருகும்.
தான தர்மங்கள் போன்ற செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
கனிவான வார்த்தைகளை பேசுங்கள்
பெற்றோருடன் நல்லுறவு கொள்ளுங்கள்
ஓம்சூர்யாய நமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்
ஓம் ராஹவே நமஹ அல்லது ஓம்ஷ்யாமாத்மனே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்
சாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே ஜூன், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர்
கன்னி ராசி 2019 புத்தாண்டு பலன்கள்
உங்களது ராசிக்கான மதிப்பெண் 70/100.
பரிகாரங்கள்:
கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் என்னும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் சென்று தரிசித்து வந்தால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
தினமும் நல்லதையே நினையுங்கள்
ஆன்மீக குருவின் ஆசி பெற்றிடுங்கள்
உடல் ஊனமுற்றோருக்கு உதவும் காரியங்களில் பங்கு பெறுங்கள்
சிறந்த அணுகுமுறையைக் கையாளுங்கள்
மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையுடன் இருங்கள்
ஓம் சநேஸ்வராய நமஹ அல்லது ஓம் வஜ்ர தேஹாய நமஹ
என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்
சாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி , மார்ச், ஏப்ரல் மே மற்றும் நவம்பர்
துலாம் ராசி 2019 புத்தாண்டு பலன்கள்
உங்களது ராசிக்கான மதிப்பெண் 90/100.
பரிகாரங்கள்:
காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் என்னும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு திரிசக்தி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வழிபட, பிரச்னைகள் குறைந்து வெற்றிகள் சேரும்.
தொண்டு செய்யுங்கள்
பெற்றோரின் ஆசி பெறுங்கள்
அன்பான மற்றும் கனிவான வார்த்தைகளைப் பேசுங்கள். கடுமையான சொற்களை தவிர்த்துவிடுங்கள்
தினமும் 15 நிமிடங்கள் தியானம் செய்யவும்.
ஓம் சநேஸ்வராய நமஹ என்ற மந்திரத்தை 1௦8 முறை தியானம் செய்யவும்.
சாதகமான மாதங்கள் : ஜனவரி பிப்ரவரி , மார்ச் , ஏப்ரல், மே, நவம்பர் மற்றும் டிசம்பர்
விருச்சிகம் ராசி 2019 புத்தாண்டு பலன்கள்
உங்களது ராசிக்கான மதிப்பெண் 70/100.
பரிகாரங்கள்:
மதுரை மாவட்டம் பேரையூர் என்னும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியை பூசம் நட்சத்திரத்தன்று சென்று வழிபட சுபிட்சம் உண்டாகும்.
வயதானவர்களுக்கு உதவுங்கள். உங்கள் குடும்ப நபர்களாக இருந்தாலும் பரவாயில்லை
தினமும் நல்லதையே நினையுங்கள்
காகம் அல்லது மற்ற பட்சிகளுக்கு இரை அளியுங்கள்.
நாவை அடக்குங்கள். இனிய சொற்களைப் பேசுங்கள்.
பெற்றோரிடமும்,முன்னோர்களிடமும் ஆசி பெறுங்கள்
ஓம் ஆஞ்சனேயாய வித் மஹே
வாயு புத்ராய தீ மஹி
தன்னோ ஹனுமான் ப்ரசோதயாத்
என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்
சாதகமான மாதங்கள் : ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி
.
தனுசு ராசி 2019 புத்தாண்டு பலன்கள்
உங்களது ராசிக்கான மதிப்பெண் 70/100.
பரிகாரங்கள்:
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் என்னும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு சரபேஸ்வரரை ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சென்று வழிபடுங்கள். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.
தினமும் நல்லதையே நினையுங்கள்
ஆசிரியர் மற்றும் குருமார்களின் ஆசி பெறுங்கள்
உடல் ஊனமுற்றோருக்கு உதவுங்கள்
மறப்போம் மன்னிப்போம் என்ற எண்ணத்துடன் இருங்கள்.
ஓம் தும் துர்கையே நமஹ
என்ற ராகு மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.
சாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி , மார்ச் , ஏப்ரல், மே மற்றும் நவம்பர்
மகரம் ராசி 2019 புத்தாண்டு பலன்கள்
உங்களது ராசிக்கான மதிப்பெண் 90/100.
பரிகாரங்கள்:
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு லட்சுமி கோபாலரை சனிக்கிழமைகளில் சென்று வழிபடுவது முன்னேற்றம் தருவதாக அமையும்.
குருமார்கள் மற்றும் பெற்றோரின் ஆசி பெறுங்கள்
உங்கள் பேச்சில் நேர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்
கல்வி சார்ந்த உதவிகளைச் செய்யுங்கள்
கோவில் புனர்நிர்மானத்திற்கு உதவுங்கள்
ஓம் கேதவே நமஹ அல்லது ஓம் மிருத்யு புத்ராய நமஹ
என்ற கேது மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்
சாதகமான மாதங்கள் : மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர்
கும்பம் ராசி 2019 புத்தாண்டு பலன்கள்
உங்களது ராசிக்கான மதிப்பெண் 80/100.
பரிகாரங்கள்:
கோவை மாவட்டம் வடவள்ளி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு காட்டு விநாயகரை சதுர்த்தி திதி நாளில் சென்று வழிபட சங்கடங்கள் நீங்கும்.
உடல் ஊனமுற்றோருக்கு உதவுங்கள்
தினமும் நேர்மறையான வார்த்தைகளை பயன் படுத்துங்கள்
நன்றியையும் பாராட்டுதலையும் வெளிப்படுத்துங்கள்.
ஓம் கம் கணேஷாய நமஹ அல்லது ஓம் வக்ரதுண்டாய ஹும்
என்ற கணேஷ மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.
சாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி , மார்ச், ஏப்ரல், மே, ஜூன், மற்றும் ஜூலை
மீனம் ராசி 2019 புத்தாண்டு பலன்கள்
உங்களது ராசிக்கான மதிப்பெண் 70/100.
பரிகாரங்கள்:
பெரம்பலூர் மாவட்டம் வெங்கனூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு விருத்தகிரீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வழிபட நன்மைகள் கூடும்.
பெரியவர்களுக்கு சேவை செய்யுங்கள்
முன்னோர்கள் மற்றும் பெற்றோரின் ஆசி பெறுங்கள்
உடல் ஊனமுற்றோருக்கு உதவுங்கள்
ஓம் ஷம் சநேஸ்வராய நமஹ என்ற சனி மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.
சாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்