🌿🌿🌿🌿🌿🌿🌿
*🥥பிறந்தது ஆடி… ஏன் இன்னைக்கு தேங்காய் சுடுரோம்னு தெரியுமா?*
*ஆடி மாதம்!!*

*🌟 தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் நான்காவது மாதம் ஆடி ஆகும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும், அம்பாள் மாதம் என்றும் சிறப்பாக கூறுவர். இம்மாதத்தில் ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு சிறப்பான நாட்களாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றது. அது போல ஆடி பிறப்பன்று தேங்காய் சுடும் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.*

*🥥ஆடிப்பிறப்பன்று தேங்காய் சுடுவது ஏன்?*

*🌟 ஆடி மாதம் முதல் நாளான இன்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தேங்காய் சுடும் பண்டிகையானது மகாபாரதப் போருடன் தொடர்புடையதாக புராணங்கள் கூறுகின்றது.*

*🌟 அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையில் மகாபாரத போர் நடைபெற்றது. இந்தப் போரானது ஆடி மாதம் 1-ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று மகாபாரதப் போர் ஆடி-18 அன்று முடிவுக்கு வந்தது.*

*🌟 இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1-ந் தேதி மக்கள் அனைவரும் விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களை வேண்டி பூஜை செய்கிறார்கள். மேலும், இந்த பூஜையின்போது தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாக படைத்து வழிபட்டதாக கூறப்படுகிறது.*

*🥥தேங்காய் சுடுவது எப்படி?*

*🌟 ஒரு தேங்காயை எடுத்து அதன் மேல் பகுதியில் உள்ள நார்களை அகற்றிவிட்டு பின் தேங்காய் மேற்பகுதியில் உள்ள ஓடு மெலிதாகும் அளவிற்கு தரையில் தேய்க்க வேண்டும். பின் அதன் கண்ணில் துளையிட்டு தேங்காய் தண்ணீரை வெளியேற்றி தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல் ஆகியவை கலந்த கலவையை போட்டு, ஒரு கூரிய முனையுடைய அழிஞ்சிமர குச்சியில் அந்த தேங்காயை சொருக வேண்டும்.*

*🌟 பின்னர் அந்த குச்சியை சுற்றி மஞ்சளை பூசி துளையை அடைக்க வேண்டும். பின் ஒரு இடத்தில் நெருப்பு மூட்டி, குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை சுட வேண்டும்.*

*🌟 ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் தேங்காய் சுடப்பட்டபின், அருகில் உள்ள பிள்ளையார் கோவில்களுக்கு எடுத்துச்சென்று வழிபடுவதும், பின்னர் தேங்காயை வீட்டில் உள்ள சாமி படங்களுக்கு முன்பு படைத்துவிட்டும் உண்பார்கள்.*
🔥🔔🔥🔔🔥🔔🔥

Leave a Comment