Puratasi vratham types

புரட்டாசி மாத விரதமும் அதன் பலன்களும்

🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔

Puratasi vratham types

புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு உறையும் திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர். புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு  பூஜைகள்  நடத்தப்படும். முன்னோர்களின் ஆசியை பெற்றுத் தரும் மிக அற்புதமான மாதம் ஆகும்.

🌟 புரட்டாசி சனி என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமையில் சனிபகவானை நினைத்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும்.

இதேபோல் புரட்டாசியில் கடைப்பிடிக்க வேண்டிய சில விரதங்கள் :

சித்தி விநாயக விரதம்:

🌟 புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகருக்காக இருக்கும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டால் காரிய சித்தி உண்டாகும்.

சஷ்டி – லலிதா விரதம்:

🌟 புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை நினைத்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பரமேஸ்வரி சர்வமங்கலங்களையும் அருள்வாள்.

அனந்த விரதம்:

🌟 புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி அன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. பக்தியுடன் இந்த விரதத்தை கடைபிடித்தால், தீராத வினைகள் எல்லாம் தீரும். ஐஸ்வரியங்கள் கிடைக்கும்.

அமுக்தாபரண விரதம்:

🌟 புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா – மகேஸ்வரின் அருள் கிடைக்க இருக்கும் விரதம் இது. இவ்விரத வழிபாட்டால் சந்ததி செழிக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

ஜேஷ்டா விரதம்:

🌟 புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் இருக்கும் விரதம் இது. இந்த விரத நாளில், அருகம்புல்லை கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட்டால் குடும்பம் செழிக்கும்.

மஹாலட்சுமி விரதம்:

🌟 புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்து இருக்கும் விரதம் இது. ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

கபிலா சஷ்டி விரதம்:

🌟 புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூ ரியனை பூஜை செய்து, பழுப்பு வண்ணம் உடைய பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூ ஜிக்கும் விரதம் இது. இவ்விரதம் சித்திகளை தரும்.

Leave a Comment