🔥 ஹனுமத் ஜெயந்தி ஸ்பெஷல் 🔥 ❤️ அனுமன் பெற்ற அற்புத வரங்கள் .❤️

🙏 ✡️ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேகக் கொண்டாட்ட வைபவங்கள் முடிந்த பின், ஆசுவாசமாக ஸ்ரீராமபிரான்- ராவணாதியரின் பலம், தபம், வரம் முதலியவை பற்றிய சந்தே-கங்களை அகத்திய மாமுனிவர் விளக்குவதாக, ஸ்ரீவால்மீகி ராமாயணத்தின் உத்தரகாண்டம் அமைந்திருக்கிறது.

🙏 ✡️ஸ்ரீராமர், ஒரு நியாயமான கேள்வியை எழுப்புகிறார்: “வாலி மிகுந்த பலசாலிதான். ராவண-னையே தோற்-கடித்து அவனைத் தனது கையில் இடுக்கிக்கொண்டு பல சமுத்திரங்-களுக்கும் சென்று தனது நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்து, ராவணனுக்குச் சொல்ல முடியாத துன்பத்தை அளித்தான். இருப்பினும் ஆஞ்சநேயன் – வாலி, ராவணன் இவர்களையும்விட மிகப் பலம் வாய்ந்தவர். அப்படியிருந்தும் வாலி, சுக்ரீவனைத் துன்புறுத்தி கிஷ்கிந்-தையை விட்டுத் துரத்தியபோது ஆஞ்சநேயர் ஏன் சுக்ரீவனுக்கு உதவவில்லை?” என்று அகத்தியரிடம் கேட்கிறார்.அப்போதுதான் ஸ்ரீராமருக்கு, ஆஞ்சநேயரின் வரலாற்றைக் கூறுகிறார் அகத்தியர்*

✡️ .“அஞ்சனாதேவிக்கு ஆஞ்சநேயர் பிறந்தபோதே, மிகுந்த பலசாலியான குழந்தையாக விளங்கினார். அஞ்சனாதேவி, குழந்தைக்கு ஆகாரம் கொண்டு வரச் சென்றிருந்தபோது, மிகவும் பசியுடன் இருந்த குழந்தை ஆஞ்சநேயன், சூரியனை ஒரு பழம் என்று நினைத்து அதைப் பறித்து உண்ண விரும்பி சூரியனைநோக்கி வானில் பாய்ந்தார். ஆனால் சூரியன், ஸ்ரீராமபிரானுக்கு இந்த ஆஞ்சநேயன் உதவி செய்ய வேண்டுமென்பதை உணர்ந்து, குழந்தைக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லை.
ஆனால், அன்றைக்குச் சூரிய கிரகணம். ராகு, சூரியனை விழுங்குவதாக ஏற்பாடு. தனக்குப் போட்டியாக சூரியனை நெருங்கும் ஆஞ்சநேயனைப் பார்த்து வெகுண்ட ராகு, இந்திரனிடம் சென்று முறையிட்டார் (ஏனெனில், சூரியனைப் பிடிக்க விரும்பிய அனுமன், ராகுவையும் பிடிக்க முயன்றார்).இந்திரன், ராகுவையும் அழைத்துக்கொண்டு மிகுந்த கோபத்துடன் அனுமனை அணுக, அவர் ஐராவதத்தையும் ஒரு பெரிய பழமென்று நினைத்து அதை நோக்கிப் பாய்ந்தார். இதனால் இன்னும் கோபமுற்ற இந்திரன், குழந்தை என்றும் பார்க்காமல், அனுமனைத் தனது வஜ்ராயுதத்தால் அடித்தார். அடியுண்ட அனுமன் இடது தாடை உடைபட்டு விழுந்தார். இறந்தது போலவே கிடந்தார்.தனது மகன் இந்திரனால் தாக்கப்பட்டு உயிரிழந்ததுபோல் கிடந்ததைக் கண்டு வருந்திய வாயு பகவான், அந்தக் குழந்தையைத் தனது மடியில் கிடத்தியவாறு தனது இயக்கத்தை நிறுத்திவிட்டார்.

✡️ வாயுவின் இயக்கம் இல்லாததால், அனைத்து ஜீவராசிகளும் மிகவும் துன்பப்பட்டனர். இதற்கு தேவர்களும் கந்தர்வர்களும்கூடவிதிவிலக்-கல்ல. எனவே, அனைவரும்பிரம்மாவிடம் சென்று முறையிட…அவர் அனைவரையும் அழைத்துக்கொண்டு வாயு பகவானிடம் வந்தார்.

✡️ இறந்துகிடந்த குழந்தையைக் கண்டு, பரிதாபமும் இரக்கமும் கொண்ட பிரம்மா தனது கரத்தால் அதைத் தடவிக் கொடுக்கவும், அனுமன் மீண்டு எழுந்தார். பிரம்மா அனைத்து தேவர்களையும் நோக்கி, ‘இந்தக் குழந்தையால்தான், ராவணன் முதலிய அரக்கர்களால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தைத் தீர்க்க முடியும்.அதனால் இவனுக்கு வேண்டிய அளவு நல்ல வரமளியுங்கள். அதன்மூலம் வாயு பகவானும் திருப்தி அடைவார்’ என்று சொன்னார்.
இதன்பின்னர் சூரியன், தனது ஒளியில் 100-ல் ஒரு பங்கை ஆஞ்சநேயருக்கு அருளினார். மேலும்,
தானே அனுமனுக்கு வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் போதித்து, கல்வியில் சிறந்தவனாகச் செய்வதாக ஒப்புக்கொண்டார்
.வருணன் – காற்றாலோ, நீராலோ அவருக்கு மரணம் ஏற்படாது என்றார்.
யமதர்மன், யம தண்டத்திலிருந்தும் நோய்களினின்றும் அனுமன் பாதிக்கப்பட மாட்டார் என வரமருளினார்.
குபேரன், அனுமன் யுத்தத்தில் சோர்வே அடைய மாட்டார் என்றார். சிவபெருமான், தனது அஸ்திரங்களினாலோ, தனது கரங்களினாலோ மரணம் ஏற்படாது என்றார்.
விஸ்வகர்மா, தன்னால் இதுவரை செய்யப்-பட்ட ஆயுதங்களாலோ, இனிமேல் தான் செய்யும் ஆயுதங்களாலோ ஆஞ்சநேயர் பாதிக்கப்பட மாட்டார் என்றார்.
✡️பிரம்மதேவர், ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக இருப்பார் என்றும்
, பிராமணர்களால் சாபம் அளிக்கப்பட மாட்டார் என்றும் அருளினார். மேலும்,
அனுமன் தான்விரும்பிய வடிவம் எடுக்கவும்,
ஒருவரிடமும் பயமோ, யுத்தத்தில் தோல்வியோ அடைய மாட்டார்.
✡️நினைத்த இடத்துக்கு நினைத்த வேகத்தில் அவரால் செல்ல முடியும் என்றும் வரமளித்தார். இந்த வரங்களினால்திருப்தியுற்ற வாயு பகவான் தனது இயக்கத்தைத் தொடங்கினார்.
✡️தனக்களிக்கப்பட்ட வரங்களால் பெருமை கொண்ட அனுமன், காட்டில் தவம், யாகம் செய்துவந்த முனிவர்களுக்கு விளையாட்டாக மிகவும் தொல்லை கொடுக்கவே,
அவர்கள் அனுமனுக்குத் தனது பலம் தெரியாமல் இருக்க வும், யாராவது அதைப் பற்றி நினைவுறுத்தினால் மட்டுமே அதை அவர் உணர முடியும் என்று சொல்லி, அவர் தனது உண்மையான பலத்தைப் பற்றி அறியாதவாறு செய்துவிட்ட-படியால்தான், ஆஞ்சநேயரால் தனது பலத்தை உணர்ந்து சுக்ரீவனுக்கு உதவ முடியாமல் போனது” என்று ஸ்ரீராமபிரானுக்கு விளக்குகிறார்.
✡️அகத்தியர்.சுந்தர காண்டத்தில்கூட, ஆஞ்சநேயருக்கு ஜாம்பவான், அவரது பலத்தையும் பராக்கிரமத்-தையும் எடுத்துக் கூறி நினைவூட்டியதால்தானே, அவரால் செயற்கரிய செயல்களைச் செய்ய முடிந்தது.
✡️புத்திர்-பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம்அரோகதாஅஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத்ஸ்மரணாத் பவேத்‘புத்தி, ✡️பலம், புகழ், தைரியம், பயமின்மை, நோயின்மை, சோம்பலின்மை, தெளிந்த வாக்கு ஆகியவை, அனுமனை நினைப்பதால் சித்திக்கும்.’
🙏 ஓம் ஆஞ்சநேயாய நமஹ 🙏

❤️ஆஞ்சநேயர் மறந்த அவருடைய அபரிமிதமான சக்தி.
கார்காலம் முடிந்ததும் ஹனுமன் சுக்ரீவனுடன் படைகளை அழைத்து கொண்டு ஸ்ரீராமரை சந்தித்து,அவர் ஆசியுடன் கணையாழி பெற்றுக் கொண்டு தமது பயணத்தை தொடர்ந்தார் ஸ்ரீமத் ராமாயணம் எனும் காவியத்தில் ரத்தினம் போல் ஜொலிக்கும் ஸ்ரீ ஆஞ்சநேய மகாபிரபு ஸ்ரீராம நாமத்தைச் மனதில் கொண்டு தத்தமது வீரர்களுடன் தென்திசை நோக்கி பயணத்தை தொடர்ந்தார்.
✡️ஆஞ்சநேயரும் மற்ற வீரர்களும் அடர்ந்த காடுகளிலும் இருளடைந்த குகைகளிலும் அன்னையைத் தேடி திரிந்தனர்.
பல மலை உச்சிகளையும் காட்டாறுகளையும் கடந்தனர்.
நடந்த களைப்பைப் பற்றி கவலைப்படாமல் வழியில் கிடைத்த கனிகளையும் கிழங்குகளையும் உண்டு மகிழ்ந்தனர்.
வீரர்களின் எண்ணமெல்லாம் அன்னையை கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருந்தன.
வீரர்களுக்கெல்லாம் வீரசிங்கம்போல் தலைமைதாங்கிச் சென்று கொண்டிருந்தார் ஆஞ்சநேயர்.
ஒருவாறு வடமேற்கு பகுதியை அடைந்தனர். அங்கு தேவசிற்பி மயனால் அமைக்கப்பட்ட குகையை கண்டு, துணிவுடன் உள்ளே சென்றனர்.
குகையின் உள்ளே தாமரை தடாகங்களும்,பல்சுவை கனிவகைகளும் நிறைந்து காணப்பட்டன.
தங்கம் வைரம் பல அற்புதமான பொருள்களை கண்டனர்.அங்கு தடாகம் அருகே தவமிருக்கும் தேவகன்னியை கண்டு ஆஞ்சநேயர், அவளை வணங்கி களைப்பாறி செல்ல அனுமதி பெற்றார்.அனைவரும் நீராடி கனிகளை உண்டு பசியாறினர்.
மாருதி நித்ய அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு கனிகளை உண்டு பசியாறினார்.
மாருதி இளைப்பாற விரும்பாமல் தேவ கன்னியின் வரலாறை தெரிந்து கொள்ள வந்தார். தேவ மாதுவும் கூறினாள். இக்குகைபல மாயசக்திகளை கொண்டது.
இக்குகையில் நுழைவது சுலபம் வெளியே செல்வது கடினம் அவ்வகையில் மயன் நிர்மாணித்துள்ளான்.
மயன் தன் சகோதரி மண்டோதரியை ராவணனுக்கு மணமுடித்த பிறகு, ஹேமை என்ற அப்சர ஸ்திரியுடன் இங்கு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தான்.
இதை கண்டு இந்திரன் கோபங்கொள்ள, மயன் இக்குகையை ஹேமைக்கே கொடுத்து விட்டான்.ஹேமை என் உயிர்த்தோழி கலைகள் பல கற்றவள்.
என்பெயர் சுவயம்பிரபை நான்மேருமலையின் புத்ரி. என்தோழி தற்போது பிரம்மலோகம் சென்றிருக்கிறாள்.
இதையெல்லாம் கேட்ட மாருதி மகிழ்ந்து அவர்கள் அன்பை பாராட்டினார்.
தாங்கள் அனைவரும் வெளியே செல்ல அனுமதி கேட்டார். அனைவரையும் கண்களை மூடச்சொல்லி தன் மாயசக்தியால் சமுத்திரக்கரையோரம் சேர்த்து வாழ்த்து கூறி மறைந்தாள் சுவயம் பிரபை.
வானர வீரர்கள் கரையோரம் அமர்ந்தனர்.
அப்போதுதான் சுக்ரீவன் கொடுத்த ஒருமாத கெடு முடிந்துவிட்டது நினைவில் வந்தது.
அனைவரும் அழுது புலம்பினர்.
அங்கதன் அரசன் கையால் மடிவதைவிட தம்முயிரை தாமே மாய்த்துகொள்வது என ஓரிடத்தில் அமர்ந்தான்.
வீரர்களும் அவனுடன் அமர்ந்தனர்.
மாருதி பலவாறு ஆறுதல் கூறியும் எவரும் செவிசாய்க்கவில்லை.
🙏 மாருதி ஜெய்”ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்” என்னும் திருநாமத்தை சிந்தையில் கொண்டு கடலை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார்.
வீரர்களின் அழுகுரல்கேட்டு மஹேந்திர பர்வதத்தில் வாழ்ந்துவந்த கழுகு வர்கத்தை சேர்ந்த சம்பாதி எனும் வயதானவர் இவர்கள் அருகில் வந்தார். வீரர்கள் ஜடாயுவிற்கும் ராவணனுக்கும் நடந்த சண்டையைப்பற்றி பேசிக்கொண்டனர்.
சம்பாதி அவர்களை அணுகி ஜடாயுபற்றி கேட்டார்.
ஜடாயு சம்பாதியின் சகோதரன்.
வீரர்கள் தங்களைப்பற்றி அனைத்தையும் கூறி, ராவணனால் ஜடாயு கொல்லப்பட்டதை கூறினர். .
சம்பாதியும் ஜடாயுவும் சகோதரர்கள். இருவரும் ஒருமுறை சூரியனை நோக்கி
பறந்து செல்ல
சூரியக்கதிர் தாக்கி இருவரும் வெவ்வேறு திசையில் விழுந்தனர். சம்பாதியின் இறக்கை கருகி மஹேந்திரபர்வதத்தில் விழுந்தார்.
ஒருநாள் ராவணன் சீதையை கவர்ந்து செல்வது கண்டு அவனுடன் போராடி இறக்கை இழந்து நிலத்தில் வீழ்ந்து, ஸ்ரீராமரிடம் உண்மை கூறி உயிர் துறந்தார்.சம்பாதி தன்மகன் சுபார்சுவன் உதவியுடன் மஹேந்திர பர்வதத்தில் மஹரிஷி ஆசியுடன் வாழ்ந்து வந்தான்.
முனிவர் தம் தவ வலிமையால் சம்பாதிக்கு ஏற்பட்ட துயரம் தீர கிஷ்கிந்தை வீரர்களுக்கு உதவி புரிவாய் என்றார்.
ஆதலால் இன்று உங்களை சந்தித்தேன். ராவணன் சீதையை தூக்கிக் கொண்டு இலங்கை சென்றான்.

✡️இலங்கை ஒரு சின்ன தீவு இக்கடலுக்கப்பால் உள்ளது.
இதை கூறியதும் ஸ்ரீராமர் அருளால் சம்பாதிக்கு முன்போல் இறக்கைகள் வந்தன.
சம்பாதி தன்தம்பி ஜடாயுவிற்கு ஈமக்கடன்களை செய்து முடித்தார்.
வீரர்கள் மகிழ்ந்தனர் ஆனால் கடலை தாண்டுவது எப்படி என்று கலங்கினர். அப்போது பிரம்மதேவரின் அம்சமான ஜாம்பவான் ஆறுதல் கூறி, தவமிருந்த மாருதியிடம் சென்று சம்பாதி சொன்னதை சொல்ல, மாருதியும் கடலை எவ்வாறு தாண்டுவது என்று கலங்கி நின்றார்.ஜாம்பவான் மகிழ்ச்சியுடன், “ஆஞ்சநேயா! நீ யௌவன பிராயத்தினன்.
இருப்பினும் வீரத்தில் இவ்வீரர்களை விட அதிபராக்கிரமும் அபாரசக்தியும் கொண்டவன்.
சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தெரிந்த வேதவிற்பன்னன்.
நீ கருடனின் இறக்கைகளைப் போன்ற புஜபலம் கொண்டவன்.
அஞ்சனையின் மைந்தன்,கேசரி நந்தன், வாயு புத்திரன் என்பதை மறந்தாயோ?
தேவாதி தேவர்களின் பரிபூரண பேரருளைப் பெற்றவன் அல்லவா நீ! காற்றிலும் நீரிலும் நெருப்பிலும் நிலத்திலும் மிக வேகமாகச் செல்லும் செயல் வீரன்.
ப்ராண தேவர் மற்றும் ஸ்ரீருத்ரனின் அம்சம் அல்லவோ !!
உன் பலத்தைப்பற்றி பாராட்டுவது என்பது கடலுக்கு கரை காண முயலுவது போலாகும்.
ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் நினைத்த மாத்திரத்திலேயே செல்லும் வல்லமை பெற்றவன் நீ !
அன்று முனிவர்கள் கொடுத்த சாபத்தையும்,சாப விமோசனத்தையும் நினைவிற் கொள்வாய்!
உத்தம குணங்களுக்கு நீயே உறைவிடம். பக்திக்கும் பலத்துக்கும் பராக்கிரமத்துக்கும் நீயே தலைவன்.
ஆகவே நீ தென்திசை நோக்கிச் சென்று சீதாதேவியைப் பற்றிய தகவல்களை அறிந்து வருவாயாக!
உன் ஓருவனால்தான் சீதாதேவியைக் கண்டுபிடிக்கத் தக்க வழி பிறக்கும்” என்று கூறினார்.
ஆஞ்சநேயர் உள்ளமும் உடலும் பூரித்தார்.
இனந்தெரியாத ஏதோ ஒருவித புது சக்தியால் பழைய ஞாபகங்களுடன் புதுப்பொலிவு பெற்றார்.
தான் அமர்ந்திருந்த மரத்தை ஒரு கையால் வேறொடு பிடுங்கி பல அடி தூரம் வீசி எறிந்தார்.
ஆஞ்சநேயரின் புஜபல பராக்கிரமம் கண்டு வானர வீரர்கள் வியந்தனர்.
அவரது அகண்ட மார்பும் புஜங்களும் வீரத்தால் துடித்தன.
அவரது கண்களில் பிரகாசம் பொங்கியது.
எழுந்து நின்று ஜாம்பவானை நமஸ்கரித்தார்.
ஜெய் ஸ்ரீராம் என்று கோஷத்துடன் விண்ணில் பறந்தார்.

🙏 🏹 ஜெய் ஸ்ரீராம்.🏹

ஹனுமான் 108 போற்றி

Leave a Comment