வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை 43 அறிவுரைகள் | Vallalar Golden Words Tamil
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை – 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
- வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
- தேவைக்கு செலவிடு.
- அனுபவிக்க தகுந்தன அனுபவி.
- இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்.
- மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
- இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
- உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
- மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
- உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
- உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
- உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
- உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.
- அவ்வப்போது பரிசுகள் அளி.
- அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
- பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
- அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
- உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
- அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
- “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
- இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
- ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.
- “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
- எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
- மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
- மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!
- அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
- பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
- நண்பர்களிடம் அளவளாவு.
- நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
- இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
- வாழ்வை கண்டு களி!
- ரசனையோடு வாழ்!
- வாழ்க்கை வாழ்வதற்கே!
- நான்கு நபர்களை புறக்கணி!
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன் - நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன் - நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி - நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன் - நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு - நான்கு நபர்களை வெறுக்காதே!
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி - நான்கு விசயங்களை குறை!
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு - நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம் - நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன் - நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள்.
மஹா பெரியவா அருளிய 9 வரி ராமாயணம்
ஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்
அருமையான பதிவு.
மிக்க நன்றி!!! 🙂