Sani peyarchi palangal 2020-2023
சனிப்பெயர்ச்சி 2020-2023 பலன்கள் (Sani Peyarchi Palangal 2020)
இந்த மாற்ற நிலை 27.12.2020 முதல் 19.12.2023 வரை இருக்கும்…
சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி டிசம்பர் 27ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது…
சனிபகவான் நீதிமான். சனியினால் சங்கடம் ஏற்படுமோ என்று பலரும் பயப்படுவார்கள். சனிபகவான் எல்லோருக்குமே தண்டனை தர மாட்டார். தவறு செய்பவர்களை மட்டுமே தண்டனை கொடுப்பார். பலருக்கும் படிப்பினைகளை கொடுப்பார் சனிபகவான்.
இந்த சனிப்பெயர்ச்சி மூலம் உங்கள் ராசிகளின் பலன் மற்றும் பரிகாரங்களை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்
#மேஷம் :
மேஷம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் (27.12.2020 முதல் 19.12.2023 வரை)
சனி நிற்கும் ஸ்தானம் : 10 ஆம் இடம் – ஜீவ ஸ்தானம்
சனி தேவரின் நாமம்:கர்ம சனி
சனீஸ்வரர் தாக்கங்கள்:சனி பகவானின் பாதிப்பு குறைவு
நன்மை: 50%
தீமை: 50%
எளிய பரிகாரங்கள் : சனிக்கிழமை கோவில் படிக்கட்டுகளை சுத்தம் செய்யவும்
மேஷம் ராசி பரிகாரம்
உடல் ஊனமுற்றோர்களுக்கு உணவு தானம், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பாதணி (செருப்பு) வாங்கி தரலாம்.
உங்கள் ராசிக்கான கடவுள் முருகன் என்பதால் உங்களால் முடியும் போதெல்லாம் முருகன் கோயில் சென்று கந்தனை தரிசித்து வருவதும், கந்த சஷ்டி கவசத்தைப் பாடி வர தைரியமும், ஆரோக்கியமும், முன்னேற்றமும் கூடும்.
#ரிஷபம் :
ரிஷபம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் (27.12.2020 முதல் 19.12.2023 வரை)
சனி நிற்கும் ஸ்தானம் : 9ஆம் இடம் – பாக்கிய ஸ்தானம்
சனி தேவரின் நாமம்: பாக்கிய சனி
சனீஸ்வரர் தாக்கங்கள்: அஷ்டம சனி முடிந்தது
நன்மை: 75%
தீமை: 25%
எளிய பரிகாரங்கள் : நீல சனி ஸ்தோத்திரத்தை பதித்து வரவும்
ரிஷப ராசிக்கான பரிகாரம்:
ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன், அதே போல் உங்கள் 5ம் இட அதிபதி புதன். இந்த இருவரின் அதிபதியாக விளங்கக் கூடியார் சரஸ்வதி தேவி.
இவர்கள் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சரஸ்வதி தேவியை வழிபட்டு வர மிக சிறந்த முன்னேற்றத்தை அடையலாம். அதோடு புதன் ஹோரையில் வழிபாடு செய்வது விசேஷமானது.
சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வருவது நல்லது. உங்களால் இயன்ற தான தர்மங்கள் செய்ய உங்களின் நிலைமை மேம்படும்.
மிதுனம்: சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.12.2020 முதல் 19.12.2023 வரை)
சனி நிற்கும் ஸ்தானம் : 8 ஆம் இடம் – அஷ்டம ஸ்தானம்
சனி தேவரின் நாமம்: அஷ்டம சனி
சனீஸ்வரர் தாக்கங்கள்: அஷ்டம சனி ஆரம்பம்
நன்மை: 20%
தீமை: 80%
எளிய பரிகாரங்கள் : சனிக்கிழமை விரதம் இருந்து ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது
பரிகாரம்:
சனிக்கிழமைகளில் அனுமனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வருவது நல்ல பலனைத் தரும்.
வாரம் தோறும் சிவாலத்திற்கு செல்வதும், சிவ வழிபாட்டுக்கு பின்னர் சனி பகவானுக்கு செய்வது நல்லது.
சிவ மந்திரத்தை சொல்லுதலும், விஷ்ணுவின் சகஸ்ரநாமம் படிப்பதால் ஏற்பட்ட தடைகள் நீங்கி மன நிம்மதி கிடைக்கும்.
#கடகம் :
கடகம்: சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.12.2020 முதல் 19.12.2023 வரை)
சனி நிற்கும் ஸ்தானம் : 7 ஆம் இடம் – சப்தம ஸ்தானம்
சனி தேவரின் நாமம்: கண்டக சனி
சனீஸ்வரர் தாக்கங்கள்: கண்டக சனி ஆரம்பம் – கவனம் தேவை
நன்மை: 40%
தீமை: 60%
எளிய பரிகாரங்கள் : சனிக்கிழமை தோறும் கடுகு எண்ணெய் தானம் கொடுத்து சாப்பிடவும்
பரிகாரம்:
கடக ராசிக்கு அதிபதியாக சந்திரன் உள்ளார். அவருக்கு அதிபதியாக பெண் தெய்வங்கள் உள்ளதால் அம்மன் கோயில் வழிபாடு மிக சிறப்பான பலன்களை தரும். பெளர்ணமி அன்று சந்திர தரிசனம், சந்திர பூஜை செய்வது சிறப்பானது. உங்களின் குல தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
சிம்மம் :
சிம்மம்: சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.12.2020 முதல் 19.12.2023 வரை)
சனி நிற்கும் ஸ்தானம் : 6ஆம் இடம்
சனி தேவரின் நாமம்:ரண ருண ஸ்தானம் – ரோக சனி
சனீஸ்வரர் தாக்கங்கள்: சனியின் பாதிப்பு குறைவு
நன்மை: 80%
தீமை: 20%
எளிய பரிகாரங்கள் : தங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு புதிய துணி தானம் செய்யவும்
பரிகாரம்:
பிள்ளையார்பட்டி சென்று விநாயகர் வழிபாடு செய்வது நன்மை தரும். ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள சந்தோஷ சனிபகவானை தரிசித்து வர நன்மைகள் பெருகும். அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு குறிப்பாக கற்பக விநாயகர் வழிபாடு நன்மையை தரும். திருவண்ணாமலை சென்று வருவது நல்லது. அவசரத்தை விட்டாலே அனைத்தும் நன்மை தரும்.
#கன்னி :
கன்னி: சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.12.2020 முதல் 19.12.2023 வரை)
சனி நிற்கும் ஸ்தானம் : 5 ஆம் இடம் – பூர்வ புண்ணிய ஸ்தானம்
சனி தேவரின் நாமம்: பஞ்சம சனி
சனீஸ்வரர் தாக்கங்கள்:அர்த்தாஷ்டமம் சனி முடிவு
நன்மை: 60%
தீமை: 40%
எளிய பரிகாரங்கள்: ஆஞ்சநேயருக்கு விரதம் இருந்து சனி காயத்ரி மந்திரம் 108 முறை சொல்லவும்
பரிகாரம்:
சனிக்கு சிறந்த பரிகாரமாக விநாயகரை வணங்குதல், அனுமனை வணங்குதல் மிகவும் சிறப்பானது. மாற்று திறனாளிகளுக்கு உதவுதல், தர்மமாக நடந்து கொள்ளுதல் நல்லது.
கடவுளை வணங்குவது, நியாயமாக நடந்து கொள்ளுதல், எந்த ஒரு வேலை செய்தாலும் முழு சிரத்தையுடன் செய்வது நல்லது.
#துலாம் :
துலாம்: சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.12.2020 முதல் 19.12.2023 வரை)
சனி நிற்கும் ஸ்தானம் : 4 ஆம் இடம் – அர்த்தாஷ்டம ஸ்தானம்
சனி தேவரின் நாமம்: அர்த்தாஷ்டம சனி
சனீஸ்வரர் தாக்கங்கள்:அர்த்தாஷ்டம சனி ஆரம்பம் – கவனம் தேவை
நன்மை: 40%
தீமை: 60%
எளிய பரிகாரங்கள்: துளசி செடி தானம் தரவும்… சனி ஹோரையில் எள் தீபம் ஏற்றி வழிபடவும்
பரிகாரம்:
சனிக்கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவதும். அனுமனை வழிபடுவதும், உங்கள் செயலுக்கு பல மடங்கு பலனைத் தரும்.
ஏழை பிள்ளைகளின் கல்விக்கு உதவி செய்வதும், ஏழை பெண்களின் திருமணத்திற்கு பொருளாதார உதவி செய்வதும் நல்லது.
ஞாயிற்றுக் கிழமைகளில் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவதால் உங்களின் நம்பிக்கையும், முயற்சியும் அதிகரிக்கும்
#விருச்சிகம் :
விருச்சிகம்: சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.12.2020 முதல் 19.12.2023 வரை)
சனி நிற்கும் ஸ்தானம் : 3 ஆம் இடம் – தைர்ய வீர ஸ்தானம்
சனி தேவரின் நாமம்: சகாய சனி
சனீஸ்வரர் தாக்கங்கள்: ஏழரை சனி முடிவு
நன்மை: 90%
தீமை:10%
எளிய பரிகாரங்கள்: இனிப்பு மாவு, சக்கரை, எறும்புகளுக்கு உணவு கொடுக்கவும்
பரிகாரம்:
வலம்புரி சங்கு பூஜை வைத்து பூஜை செய்வது நல்லது. சதுர்த்தி தினங்களில் சங்கடங்களைத் தீர்க்கக்கூடிய கணபதியை வழிபட்டு வரவும்.
பிரதோஷ நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் வழிபட்டு வர நீங்கள் விரும்பிய முன்னேற்றத்தைப் பெறலாம்.
#தனுசு :
தனுசு: சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.12.2020 முதல் 19.12.2023 வரை)
சனி நிற்கும் ஸ்தானம் : 2 ஆம் இடம் – தன வாக்கு குடும்ப ஸ்தானம்
சனி தேவரின் நாமம்: பாத சனி
சனீஸ்வரர் தாக்கங்கள்:ஏழரை சனி கடைசி பகுதி கவனம் தேவை
நன்மை: 20%
தீமை: 80%
எளிய பரிகாரங்கள் : சனிக்கிழமை தோறும் வயதானவர்களுக்கு வயிறு நிறைய உணவு அளிக்க வேண்டும்
பரிகாரம்:
சனிக்கிழமை தோறும் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு காலையில் வைப்பது நல்ல பலனைக் கொடுக்கும். உங்களால் முடிந்தால் ஏழை பெண் குழந்தைகளுக்கு படிப்பதற்கான சிறு சிறு உதவிகளை செய்து வரலாம்.
#மகரம் :
மகரம்: சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.12.2020 முதல் 19.12.2023 வரை)
சனி நிற்கும் ஸ்தானம் : 1 ஆம் இடம் – ஜென்ம ஸ்தானம்
சனி தேவரின் நாமம்: ஜென்ம சனி
சனீஸ்வரர் தாக்கங்கள்: ஏழரை சனி மத்திம பகுதி – கவனம் தேவை
நன்மை: 25%
தீமை: 75%
எளிய பரிகாரங்கள் : சனீஸ்வர சன்னதியில் ஓம் ஷ சனீஸ்வராய நமஹ என 108 முறை சொல்லவும்
பரிகாரம்:
சனிக்கிழமைகளில் பெருமாளையும் செவ்வாய்க்கிழமைகளில் முருகனை வழிபடுவது நன்மை தரும். உங்களால் முடிந்தால் சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கை துணியையும், சிறிய குழந்தைகளுக்கும் வளையல், பொட்டு, ரிப்பன் போன்ற அழகு சாதனப் பொருட்களை தானமாக கொடுக்கலாம்
கும்பம்: சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.12.2020 முதல் 19.12.2023 வரை)
சனி நிற்கும் ஸ்தானம் : அயன சயன போக ஸ்தானம்
சனி தேவரின் நாமம்: விரய சனி
சனீஸ்வரர் தாக்கங்கள்: ஏழரை சனி ஆரம்பம் – கவனம் தேவை
நன்மை: 30%
தீமை: 70%
எளிய பரிகாரங்கள் : உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் விதவைகளுக்கு உதவி செய்யவும்
பரிகாரம்:
பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கலை தரும். போட்ட முதலீடு ,கொடுத்த பணம் திரும்பி வருதல் கடினம் என்பதால் நிதானித்து செயல்படவும். அகலக்கால் வைக்க வேண்டாம். சிபாரிசு யாருக்கும் செய்ய வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலால் உறவுகள்,நட்புகள் பகையாகும். மருத்துவ செலவுகள் புதிதாக வருகிறது. தவறுகள் அதிகமாகின்றன. அலைச்சல் அதிகரிக்கும். தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு வைக்கும் என்பதால் அவர்களை நன்கு கவனித்துக்கொள்ளவும். கும்பகோணம் அருகில் திருக்கோடிக்காவலில் சனிபகவான் பால சனியாக இருக்கிறார். அவரை வணங்கினால் நன்மை நடைபெறும்
மீனம் :
மீனம்: சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.12.2020 முதல் 19.12.2023 வரை)
சனி நிற்கும் ஸ்தானம் : 11 ஆம் இடம் – லாப ஸ்தானம்
சனி தேவரின் நாமம்: லாப சனி
சனீஸ்வரர் தாக்கங்கள்: மிகவும் நன்மை
நன்மை: 100%
தீமை:0%
எளிய பரிகாரங்கள்: சனிக்கிழமை தயிர் சாதம் தானம் தருவது நல்லது…
பரிகாரம்:
அடிக்கடி சிவாலயத்திற்கு சென்று ஈசனை வழிபடுவதும், நவகிரகங்களில் சனி பகவானை வழிபட்டு வருவதாலும், மிக நல்ல பலன்களை கூடுதலாக பெறலாம்.
மதுரையில் உள்ள இன்மையில் நன்மை தருவார் சிவன் கோயிலுக்கு சென்று வருவது நல்லது. முடியாதவர்கள் அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று வருவது நல்லது.
உங்களால் முடிந்தளவிற்கு ஏழைகள், ஆதரவற்றோருக்கு உணவு, உடை தானம் வழங்குங்கள்.
சனிஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்