Benefits and uses of applying vibhuti (holy ash), Kumkum and sandal

இறைவழிப்பாட்டில் மிக முக்கியமானது (vibhuti benefits in tamil). எந்த கோயிலுக்கு சென்றாலும் திருநீறு, சந்தனம், குங்குமம் ஆகியவை நெற்றியில் இடுவதற்கு கொடுக்கப்படுகிறது. சரி, அவற்றை இடுவதற்கான காரணங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

Top benefits and uses of applying vibhuti (holy ash), Kumkum and sandal

*திருநீறு:*

திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்த வகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்து மதத்தவர்களிடம் காணப்படுகிறது.

இருபுருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகள் உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி, மனவசியம் லகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க இந்த இடத்தில் திருநீறு, சந்தனம், குங்குமம் போன்றவை இடப்படுகின்றன. இந்த உண்மையைச் சாதாரணமாகக் கூறி விளங்க வைக்க முடியாத மக்களுக்கு, நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கிறார்கள்.

Holy Ash Bhasma Meaning and Benefits:

The Sanskrit word bhasma literally means “disintegration”. Bha means bharatsanam (to destroy), while sma implies smaran (to remember). Bhasama is thus a reminder to us of the ephemeral nature of life. Also,if we wish to unite with God ( or the ‘ supreme self’ ) and remember him constantly, our ego or ‘little self’ has first to be disintegrated or burnt to ashes. Bhasma is a symbol of this process. It is also called raksha because it protects one from all fears. When appled to the forehead before sleep, it is said to keep away evil spirits or ghosts, whether external or those which manifest fro the depths of the mind in the from of nightmares.
Bhasma symbolishes the burning of our false identification with the mortal body, and freedom from the limitations of the painfully illusive cycle of birth and death. It also reminds us of the perishable quality of the body, which will one day be reduced to mere ashes.

When the holy ash is applied to the forehead, divine energy spreads everywhere

Negative energy are being dispelled

Vibhuthi should be taken with the right hand and applied on the forehead as three horizontal lines. The first line stands for removal of Ahankar (pride) the next stands for removal of Ignorance and the third stands for removal of bad karma (actions). The ash we apply indicates that we should burn false identification with the body and become free of the limitations of birth and death.

Benefits of applying Sandal:

*சந்தனம்:*

மூளைச்சோர்வை நீக்குகின்றது சந்தனம். இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது. மூளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் மூளைப் பின்புற மேடு என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு, மூளையின் முன் புறணி சிறப்பான முறையில் செயல்பட வைக்கிறது.

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும் படாமலும் சுண்டு விரலை நேராகப்புடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மன ஒருமைப்பாடு தோன்றும். சிந்தனை தெளிவு பெறும். எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க சந்தனம் சரியான மருந்து.

Benefits of applying kumkum:

On the forehead, between the two eyebrows, is a spot that is considered as a major nerve point in human body since ancient times. The Tilak is believed to prevent the loss of “energy”, the red energy in the human body and control the various levels of concentration. While applying kumkum the points on the mid-brow region and Adriya-chakra are automatically pressed. This also facilitates the blood supply to the face muscles

*குங்குமம்:*

மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பெருட்கள் ஆகும். இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள உள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும். மனிதன் அதிகமாக சிந்திக்கும் போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி தலைபாரம், தலைச்சுற்றல் ஏற்படும். இதை தடுக்க நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.

சந்தனம், திருநீறு, குங்குமம் இவைகளுக்குக் குளிர்ச்சியூட்டும் தன்மை இயல்பாகவே உண்டு. எனவே, அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சந்தனம் பூசி, சந்தனம் காயாமல் இருக்க குங்குமம் இடுகிறோம். இவற்றைத் தரித்தால் புத்துணர்வும், புதுத்தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன. நமது உடலும் மனதும் நிலைபெறவே இறைவழிபாட்டை மேற்கொள்கிறோம்…

Leave a Comment