சந்திர கிரஹணம் 16/7/2019  Chandra Grahanam 2019 date and time

விகாரி வருஷம்,

ஆனிமாதம் 31ந் தேதி,

16.7.19. செவ்வாய்க்கிழமை, பவுர்ணமி அன்று

உத்ராட நக்ஷத்திரத்தில்,
இரவு 1.32க்கு ஆரம்பித்து அதிகாலை 4.30மணிக்கு சந்திரகிரஹணம் முடிவடைகிறது.

சாந்தி பரிகாரம் செய்ய வேண்டிய நக்ஷத்திரக்காரர்கள்

1. உத்ராடம், 2. திருவோணம். 3. பூராடம். 4. கிருத்திகை, 5. உத்திரம் ஆகிய நக்ஷத்திரக்காரர்கள் சாந்தி செய்து கொள்வது நல்லது.

இந்தியா மற்றும் தமிழ்நாட்டிற்கு சந்திர கிரகணம் தெரியும் – பொருந்தும்.

சாஸ்திரம் சம்பரதாயத்தில் நம்பிக்கையுடையவர்கள் நடைமுறைபடுத்துமாறு வேண்டுகிறேன்

.மதியம் 3 மணிக்குள் போஜனம் செய்யவேண்டும். தர்ப்பணம் செய்பவர்களள் 3. Am to 4:30 pm (17-7-19 )க்குள் செய்யவேண்டும் ஐந்து நக்ஷத்திரகார்களும் வெற்றிலை பாக்கு பழத்துடன் மட்டை தேங்காய் ₹ முடிந்து வைத்து அந்தணர்களிக்கலாம். ஒரு பேப்பரில் கீழ் காணும் ஸ்லோகத்தை எழுதி அதையும் ஜபிக்கணும் :::

யோஸௌ வஜ்ரதரோ தேவ: ஆதித்யானாம் ப்ரபூர் மதஹ ஸஹஸ்ர நயன: சந்த்ர: க்ரஹ #பீடாம்வ்யபோஹது#

இது காலங்காலமாக வேத தர்ம சாசாஸ்திரத்தின்படி நமது மடாதிபதிகள் – கோயில் அர்ச்சகர்கள்- பிராமணர்கள் – தெய்வ பக்தியுடையவர்கள் என்போர் கடைபிடிப்பது நம் பாரம்பரிய வழக்கமாகும்.

 

சந்திர கிரகணம்… என்ன செய்யலாம்?* *என்ன செய்யக்கூடாது?
சந்திர கிரகணம் !!

வரும் *செவ்வாய்க்கிழமை* *(16.07.2019)* தேதி நள்ளிரவில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தச் சந்திர கிரகணம், *புதன்கிழமை (17.07.2019) அதிகாலை வரை நீடிக்கிறது.*

இந்த *கிரகணம் திருக்கணித பஞ்சாங்கத்தின்* அடிப்படையில் :

*ஆரம்பம் – 01.32* யுஆ

*மத்யமம் – 3.03* யுஆ

*மோஷம் – 4.32* யுஆ

*சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும்* ஒரே நேர்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. *இதில் சந்திரன் மறைக்கப்படும்* போது *சந்திர கிரகணமும்,* சூரியன் மறைக்கப் படும்போது சூரியகிரகணமும் நிகழ்கிறது.

*பௌர்ணமி தினத்தன்று* சந்திர கிரகணமும், அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும்.

*சந்திர கிரகணம் என்பது* நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.

*சந்திர கிரகணம்* முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப் படுகிறது. சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும் பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் *என்றும் அழைக்கப் படுகிறது*.

*கிரகணம் எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தென்படாது.* மாறாக வௌ;வேறு நேரங்களிலேயே தென்படும். கிரகணத்தின் போது *புவி மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதை காணலாம்.*

*கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?*

*கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி* நேரத்திற்கு முன்னதாகவே எந்தவித *உணவும் உட்கொள்ளக் கூடாது.*

*கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது.*

*ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும்.* கிரகண நேரத்தில் ஆலய *தரிசனம் கூடாது.*

செய்து வைத்திருக்கும் *உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்.*

கிரகணத்தின் போது *நவகிரக துதியை பாராயணம் செய்யலாம்.* அதுபோலவே சந்திர கிரகணத்துக்கான *துதியையும் பாராயணம் செய்யலாம்.*

*கிரகண விமோசன* காலத்தில் அதாவது கிரகணம் முழுதும் முடிந்ததும் *ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.*

*ஆலய தரிசனம்* செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் *கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.*

கிரகணம் முடிந்ததும், *பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது* நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட *பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.*

சந்திர கிரகண காலத்தில் *வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து,* இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். *கிரகணம் முடிந்ததும், ஆலய வழிபாடு செய்வது* இன்னும் சிறப்புகளை கொடுக்கும்…!!!

*🐚 ஓம்*
*நமசிவாய🔱

Leave a Comment