அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில் Kanchipuram Athi Varadar Rising and complete history in tamil

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா.. காஞ்சியில் ஏற்பாடுகள் தீவிரம்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் திருவிழாவையொட்டி, முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காஞ்சிபுரத்தில் திவ்ய தேசங்களில் ஒன்றான 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருக்கும் அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.

இதற்கு முன் கடந்த 18.8.1854, 13.6.1892, 12.7.1937, 2.7.1979 ஆகிய தேதிகளில் அத்தி வரதரை தரிசனம் செய்யும் உற்சவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது
சராசரியாக 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அத்தி வரதர் நீரிலிருந்து வெளியே எடுத்து வரப்பட்டு காட்சியளிக்கிறார் என்பதால், ஒவ்வொருவரும் அவரது ஆயுள்காலத்திற்குள் ஒருமுறை, அல்லது அதிகபட்சம் இருமுறை மட்டுமே அத்தி வரதர் பெருமாளை தரிசிக்க முடியும்.

இதன்படி 40 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்களுக்கு அத்தி வரதர் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்

வரதராஜப் பெருமாள் கோயிலின் 100 கால் மண்டபத்தின் அருகில் தண்ணீருக்கு அடியில் உள்ள 4 கால் மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு பக்தர்களின் எண்ணத்தோடு அத்தி வரதர் அருள்பாலித்து வருகிறார். இக்குளத்தில் எப்போதும் நீர் வற்றுவதில்லை என்பதால் அத்தி வரதர் யார் கண்ணுக்கும் புலப்படமாட்டார்.

பெருமாளின் திருமேனி மிகப்பெரிய அத்தி மரத்தால் வடிவமைக்கப்பட்டு, பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அத்தி வரதப் பெருமாளை வெள்ளித்தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து, அனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்கள், அத்தி வரதர் திருவிழா நடைபெற உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பொன்னையா, பொதுமக்கள் தரிசனத்திற்கு கிழக்கு ராஜகோபுரம் வழியே வந்து, மேற்கு ராஜகோபுரம் வழியே தரிசனம் முடித்து விட்டு வெளியே செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

அத்தி வரதர் திருவிழாவையொட்டி காஞ்சி நகர் முழுவதும் சிசிடிவி கேமரா வளையத்திற்குள் கொண்டு வர நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. நகர்புற பகுதிகளில் உள்ள அனைத்து முக்கிய இடங்களையும் கண்காணிப்பு கேமரா வளையத்திற்குள் கொண்டு வர திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

அதே போல திருவிழா நடைபெற உள்ள 48 நாட்களுக்கும், பேருந்து நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் வர வாய்ப்பு உள்ளதால் காஞ்சிபுரத்தில் செயல்படும் பள்ளிகளின் நேரமும் மாற்றியமைக்கப்பட உள்ளது. காலை 8.30 முதல் 1.30 வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக, 5 மொழிகளில் அறிவிப்பு பலகைகளை வைக்க திட்டமிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

தல சிறப்பு:

பிரம்மா பிரதிஷ்டை செய்த அத்திவரதரை அனந்தசரஸ் தீர்த்தத்திற்குள் வைத்துள்ளனர். 40 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இவரைத் தரிசிக்க முடியும். அப்போது இச்சிலையை வெளியில் எடுத்து, 48 நாட்கள் விசேஷ பூஜைகள் செய்வர். 1938, 1979ம் வருடங்களில் வெளியில் எடுக்கப்பட்ட இவரை, மீண்டும் 2019ம் ஆண்டில் தரிசிக்கலாம். சக்கரத்தாழ்வார் : திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார். பிரம்மாவின் யாக அக்னியில் கிடைத்த மூர்த்தி, இங்கு முகத்தில் தழும்புடன் உற்சவராக இருக்கிறார். இதனால், இவருக்குப் படைக்கும் நைவேத்யத்தில் மிளகாய் சேர்ப்பதில்லை. இவரே இங்கு பிரதானம் பெற்றவர் என்பதால், பக்தர்கள் இவரைத் தரிசித்து விட்டே மூலவரைத் தரிசிக்கிறார்கள். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 44 வது திவ்ய தேசம்.

நாரத முனிவர்,பிருகு முனிவர், பிரம்மா, ஆதிசேசன் கஜேந்திரன் ஆகியோருக்கு பெருமாள் காட்சி தந்த முக்கிய தலம் . இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது. 2000 ஆண்டுகள் முந்தைய பழமையான தலம்.பல்லவ மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணிகள் நடைபெற்ற தலம்.

இங்குள்ளபெருமாளை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும் சக்கரத்தாழ்வார் எனப் பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதியில் இருக்கும் பெருமானை வணங்கினால் திருமணத்தடை நீங்குகிறது.வழக்குகளில் வெற்றி கிடைக்கிறது.வாழ்வில் வளமும் நிம்மதியும் கிடைக்கிறது என அனுபவித்தவர்கள் கூறுகிறார்கள். தனி சன்னதியில் வீற்றிருக்கும் பெருந்தேவித் தாயாரை வணங்கினால் பெண்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் தீர்கின்றன.குழந்தை வரம் வேண்டுவோரும் தாயாரை வணங்குகின்றனர்

தங்கபல்லி: இவ்விடத்தில் தங்கபல்லி வெள்ளி பல்லிகளாக இருக்கும் சூரியன் சந்திரரை தரிசனம் செய்தால் நம்மீது பல்லி விழுவதால் உண்டாகும் தோசங்களும் கிரகண தோசங்களும் விலகி ஷேமம் உண்டாகும். நம் மனதில் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள்.

பெருமாள் நின்ற திருக்கோலமாக மேற்கு முக மண்டலமாக நின்று அருள் பாலிக்கிறார்.
பிரம்மா செய்த யாகத்திற்கு மகிழ்ந்து எம்பெருமான் வரம் தந்ததால் வரதராஜர் என அழைக்கப்படுகிறார்.
எம்பெருமானை அயிராவதமே மலை உருவில் தாங்கினதால் இதற்கு அத்திகிரி என பெயர் வந்ததாம்.
அத்திகிரி என வழங்கப்படும் பெருமாள் சந்நிதிக்கு செல்லும்போது 24 படிகளை கடந்துதான் செல்லவேண்டும்.இவை காயத்திரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துகிறது.

பல்லி வரலாறு : ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் என்னும் முனிவரின் இரு குமாரர்கள் கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்த போது பூஜைக்கு தீர்த்தம் கொண்டு வந்ததில் பல்லிகள் இறந்து கிடந்ததை கண்டு முனிவர் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும்படி சபித்துவிட்டார்.பிறகு சிஷ்யர்கள் வேண்டிக் கொண்டதால் காஞ்சி சென்றால் மன்னிப்பு உண்டு என கூறிவிட்டார்.பிறகு இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு வரதராஜ பெருமாளிடம் மோட்சம் கேட்டனர்.பெருமாள் உங்கள் ஆத்மா வைகுந்தம் செல்ல சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்க என்னை தரிசிக்க வருபவர்கள் உங்களை தரிசித்தால் சகல தோசம் நீங்கி ஷேமம் உண்டாகும். சூரியன் சந்திரன் இதற்கு சாட்சி என்று மோட்சம் அளித்தார்.ஆகையால் இத்தரிசனம் மிக முக்கியமானதாகும். தோஷ நிவர்த்தி பெற இந்த பல்லிகளை வணங்குகிறார்கள்.

அத்தி வரதர் : நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்கள் உள்ளன.தென்திசையில் உள்ள மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் ஒரு மண்டபம் உள்ளது.அதில் தான் மிகப்பெரும் அத்திமரத்தால் ஆன பழைய அத்திவரதராஜ பெருமாள் சயன நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பெருமானின் திருமேனியை வெளியே கொண்டு வந்து தரிசனத்திற்காக வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

வினாடிக்குள் தரிசனம்: வரதருக்கு எடுக்கப்படும் வைகாசி பிரம்மோற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இதை, “வையம் கண்ட வைகாசி திருநாள்’ என்பர். இவ்விழாவின் 3ம் நாளில் சுவாமி, கருடசேவை சாதிப்பார். இந்த கருட சேவையைக் குறிப்பிட்டு சங்கீத மூர்த்தி தியாகராஜர் கீர்த்தனையும் பாடியுள்ளார். சோளிங்கரில் வசித்த தொட்டாச்சாரியார் என்ற பக்தர், இந்த கருடசேவையை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசமயம் அவரால் இங்கு வரமுடியவில்லை. மனம் வருந்திய அவர் சோளிங்கரில் உள்ள தீர்த்தக்கரையில் நின்றபடி, சுவாமியை மனமுருகி வழிபட்டார். அப்போது ஒரு வினாடி மட்டும் சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார். இதன் அடிப்படையில் கருடசேவையின்போது, இப்போதும் சுவாமியை ஒரு வினாடி குடையால் மறைத்து எடுத்து விடுவர்.

தாயாருக்குரிய உற்சவங்கள்: பிருகு மகரிஷி செய்த புத்ரகாமேஷ்டி யாகத்தில் தோன்றிய மகாலட்சுமி, பெருந்தேவி தாயார் என்று பெயர் பெற்றாள். சரஸ்வதி பூஜை, வைகாசி திருவிழாவில் ஒருநாள், பங்குனி உத்திரம் என ஆண்டில் மூன்று முறை மட்டும் வரதராஜர் இவளுடன் சேர்த்திக்காட்சி தருகிறார். வைகாசி முதல் வெள்ளியன்று இவளுக்கு விசேஷ திருமஞ்சனத்துடன் பூஜை நடக்கும்.

மலையாளன்: இந்திரனுக்கு அருளிய யோகநரசிம்மர், இத்தலத்தில் குடவறை மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இவருக்கான தாயார், ஹரித்ராதேவி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளை மலையாள நாச்சியார் என்றும் அழைப்பர். சிறிய மலையின் மீது காட்சி தருவதால் வரதராஜருக்கு, “மலையாளன்’ என்றும் பெயருண்டு.

தங்கத்தாயார்: வேதாந்த தேசிகர் இங்கு சுவாமியைத் தரிசிக்க வந்தபோது, ஒரு ஏழை அவரிடம் பொருள் வேண்டினான். அவர் அந்த ஏழைக்காக பொருள் கேட்டு, பெருந்தேவி தாயாரை வேண்டி பாடல் பாடினார். அவருக்கு இரங்கிய தாயார், தங்கமழையை பெய்வித்தாள். இதனால் இவளை பக்தர்கள், “தங்கத்தாயார்’ என்று அழைக்கிறார்கள்.

கிணற்றுக்குள் வலம் வரும் சுவாமி: சித்ரா பவுர்ணமியன்று சுவாமிக்கு பாலாற்றில் திருமஞ்சனத்துடன் பூஜை நடக்கும். பின்பு, சுவாமி அருகிலுள்ள நடவாவி கிணற்றிற்கு எழுந்தருளுவார். மண்டபம் போன்ற உள்கட்டமைப்பைக் கொண்ட வித்தியாசமான கிணறு இது. இந்நாளில் மட்டும் கிணற்று நீரை வெளியேற்றிவிடுவர். கிணற்றுக்குள்ளேயே சுவாமி வலம் வருவார்.

வித்தியாசமான நம்மாழ்வார்: பெருமாள் கோயில்களில், பொதுவாக சின்முத்திரை காட்டியபடி இருக்கும் நம்மாழ்வாரை, இத்தலத்தில் மார்பில் கை வைத்த நிலையில் தரிசிக்கலாம். இவர் வரதராஜரை, “தேவர்களுக்கெல்லாம் தலைவன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் சுவாமிக்கு, “தேவராஜன்’ என்ற பெயரும் பெயருண்டு.

வேடர் பெருமாள்: ராமானுஜர் மீது பொறாமை கொண்ட அவரது குரு யாதவப்பிரகாசர், அவரை கங்கையில் தள்ளிவிட வஞ்சகமாக அழைத்துச் சென்றார். இதை, தனது சித்தி மகன் கோவிந்தர்(எம்பார்) மூலமாக அறிந்த ராமானுஜர், பாதியிலேயே திரும்பிவிட்டார். வழி தெரியாத அவர் காட்டுவழியில் கலங்கி நின்றபோது, வரதராஜரும், தாயாரும் வேடர் வடிவில் சென்று குடிக்க தண்ணீர் கேட்டனர். ராமானுஜர் அருகிலுள்ள சாலக்கிணற்றில் நீர் எடுத்து அவர்களுக்கு கொடுத்தார். அதைப் பருகியவர்கள் மறைந்து விட்டனர். சுவாமியே வேடனாக வந்ததை ராமானுஜர் அறிந்தார். இதன் அடிப்படையில் சுவாமி நீர் பருகிய கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து காலை 6மணிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது.

மார்கழியில் சொர்க்கவாசல் விழா முடிந்த 12ம் நாளில் சுவாமி, தாயார், ராமானுஜர் மூவரும் இந்த கிணற்றிற்கு எழுந்தருளுவர். இவ்வேளையில் சுவாமியின் பரிவட்டமும், மாலையும் ராமானுஜருக்கு அணிவிக்கப்படும். சுவாமிகளுக்கு வேடர் அலங்காரம் செய்யப்படும். பின், ராமானுஜர் சுவாமிக்கு தீர்த்தம் கொடுக்கும் வைபவம் நடக்கும். இதன்பின்பு சுவாமியும் தாயாரும், கிழக்கு கோபுரம் அருகிலுள்ள ராமானுஜர் வாழ்ந்த வீட்டிற்கு (திருமாளிகை) எழுந்தருளுவர்.

வெள்ளையர் கொடுத்த ஆபரணம்: ராபர்ட் கிளைவ் என்ற வெள்ளையர், வரதராஜர் மீது கொண்ட பக்தியால் மகர கண்டி (கழுத்தில் அணியும் மாலை) கொடுத்தார். இதேபோல், வெள்ளைக்கார கலெக்டர் பிளேஸ் துரை, சுவாமிக்கு பல ஆபரணங்களைக் கொடுத்துள்ளார். விழாக்காலங்களில் சுவாமி இந்த ஆபரணங்களை அணிந்து உலா செல்வார்.

அபூர்வ சக்கரத்தாழ்வார்: அனந்தசரஸ் தீர்த்தக்கரையில் சக்கரத் தாழ்வார் சன்னதி இருக்கிறது. இங்குள்ள உற்சவர் சக்கரத்தாழ்வார் மிகவும் விசேஷமானவர். இவரைச் சுற்றியுள்ள அலங்கார வளைவில் 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் இட்லி: வல்லபாச்சாரியார் என்ற பக்தர் இங்கு சுவாமிக்கு, மூங்கில் குழாய் கொண்டு தயாரித்த இட்லியை படைத்து வழிபட்டார். இதுவே, “காஞ்சிபுரம் இட்லி’ எனப் பெயர் பெற்றது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், சுக்கு, உப்பு மற்றும் நெய் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த இட்லியை காலை 6 மணி பூஜையின்போது நைவேத்யம் செய்கின்றனர்.

மாந்துளிர் உற்சவம்: பங்குனியில் பல்லவ உற்சவம் 7 நாள் நடக்கும். இந்நாளில் சுவாமியை நூறு கால் மண்டபத்தில் எழச்செய்து, குங்குமப்பூ தீர்த்தம், சந்தனம் சேர்ந்த கலவையைப் பூசி, ஈரத்துணியை அணிவிப்பர். பின்பு, சுவாமியை மாந்தளிர் மீது சயனிக்கச் செய்து, 7 திரைகளைக் கட்டி பூஜை செய்வர். சுவாமிக்கு கோடை வெப்பத்தின் தாக்கம் இல்லாதிருக்க, அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக இவ்வாறு செய்கிறார்கள்.

சிறப்புக்கள் சில…

* உற்சவருக்கு, “அழைத்து வாழ வைத்த பெருமாள்’ என்ற வித்தியாசமான பெயர் இருக்கிறது.

* கீதையில் கிருஷ்ண பகவான், தனது வடிவமாகக் குறிப்பிட்ட அரச மரமே இத்தலத்தின் விருட்சம். மரத்தின் எதிரே கரியமாணிக்க வரதர் சன்னதி உள்ளது. புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள்.

* வைகாசி பிரம்மோற்ஸவம், ஆனி சுவாதி மற்றும் ஆடி கஜேந்திர மோட்ச நாட்களில் சுவாமி கருடசேவை காண்கிறார்.

* ராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வார், பார்வை பெற்ற தலம் என்பதால், கண் நோய் நீங்க இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.

* காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களைக் குறிக்கும் விதமாக மூலஸ்தான படிகள், மதிலில் பதிக்கப்பட்ட கற்கள், தீர்த்தக்கரை படிகள் ஆகியவை 24 என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன.

பிரம்மா தன்மனம் பரிசுத்தமாவதற்கு காஞ்சியில் யாகம் செய்தார்.அவ்வமயம் அவருடைய பத்தினியாகிய சரஸ்வதியை விடுத்து மற்ற இரு மனைவியராகிய சாவித்திரி, காயத்திரி ஆகியோருடன் இருந்து யாகம் செய்யத் தொடங்கினர்.அதனை அறிந்த சரஸ்வதி மிகவும் கோபம் கொண்டு வேகவதி என்ற ஆறாய் வந்து யாகத்தை அழிக்க முயற்சி செய்தாள். பிரம்மாவின் வேண்டுகோளின் படி மகாவிஷ்ணு யதோத்தகாரியாக வந்து பிறந்த மேனியாக குறுக்கே சயனித்துக் கொண்டார்.பிரம்மாவின் யாகம் பூர்த்தியான உடனே யாக குண்டத்திலிருந்து புண்ணியகோடி விமானத்துடன் பெருமாள் தோன்றினார். பின்பு, பிரம்மா அத்திமரத்தில் ஒரு சிலை வடித்து இங்கே பிரதிஷ்டை செய்தார். வேண்டும் வரம் தருபவர் என்பதால் இவர், “வரதராஜர்’ எனப் பெயர் பெற்றார். வரதராஜ பெருமாளின் தேவிக்கு பெருந்தேவி என்றுபெயர். 24 நான்கு படிகள் ஏறி அத்திகிரியை அடைய வேண்டும்.

அதிசயத்தின் அடிப்படையில்: மிகப்பெரும் அத்திமரத்தால் ஆன பழைய அத்திவரதராஜ பெருமாள் சயன நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பெருமானின் திருமேனியை வெளியே கொண்டு வந்து தரிசனத்திற்காக வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

சக்கரத்தாழ்வார் : திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சன்னதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தல், தாயாருக்கு புடவை சாத்துதல், மற்றும் சர்க்கரைப் பொங்கல் பெருமாளுக்கு படைத்தல் ஆகியவை இங்கு நேர்த்திகடன்களாக இருக்கின்றன.

500 ரூபாய் சிறப்பு தரிசனம் டிக்கெட் ஆன்லைன் மூலம் பெற www.tnhrce.org என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்…

#நீருக்குள்_அத்திவரதர்
#அத்திகிரி_வரதர் 🙏

நம் வாழ்விற்குப் பின்னர் மோட்சப் பதவிக் கிடைக்க வேண்டுமானால், அயோத்தி, மதுரா, துவாரகா, காசி, மாயா, அவந்தி, காஞ்சிபுரம் ஆகிய நகரங்களில் வசித்திருக்க வேண்டும்! அல்லது இங்கெல்லாம் கோயில் கொண்டிருக்கும் பெருமாளைத் தரிசித்திருக்க வேண்டும்! என நம் புராணங்கள் சொல்கின்றன. “நகரேஸு காஞ்சி” (நகரென்றால் அது காஞ்சியே) எனப் புகழப்பட்ட #காஞ்சிபுரம் கோயில் நகரமாகும். பெருமாளின 108 திருப்பதிகளுள் 14 காஞ்சிபுரத்திலேயே உள்ளதன. பட்டுப் பீதாம்பரத்தோடு எப்பொழுதும் அலங்காரப் பிரியனாகவே இருக்கும் #பெருமாள் மகிழ்துறையும் தலமாதலால் தான் காஞ்சி, #பட்டு
உற்பத்தியிலும் தலைசிறந்து விளங்குகிறது போலும்.
காஞ்சிபுரத்திலுள்ள பதினான்கு திருப்பதிகளுள் முதன்மையானது, சின்ன காஞ்சிபுரத்திலுள்ள #திருக்கச்சி என்னும் #அத்திகிரி.
பிரம்மா, உலகைப் படைப்பதற்கு முன்னர், வேள்வி இயற்றி, திருமாலை வணங்கி, அருள் பெற்ற #சத்யவிரத_ஷேத்திரம் இந்த அத்திகிரியே. சரஸ்வதி தேவியை மதிக்காது பிரம்மா வேள்வியைத் தொடங்கியதால், கோபங்கொண்ட சரஸ்வதிதேவி, நதியாகப் பெருக்கெடுத்து, பிரம்மா வளர்த்த வேள்வித் தீயை அணைக்க முயன்றாள். பிரம்மா, திருமாலை வேண்ட, கரைபுரண்டோடி வரும் நதி, வேள்விச்சாலையை நெருங்காதபடி, நீரின் குறுக்கே ஓர் அணையெனப் படுத்துக் கொண்டார்! பரந்தாமன். பெருமாளே மீறிச் செல்ல முடியாத சரஸ்வதி நதி, பெருமாளை வணங்கி, தன் சினம் தவிர்த்தாள்! பிரம்மாவுடன் இணைந்து வேள்வியையும் நடத்தினாள்.
வேள்வியில் இடப்பட்டவைகளைப் பெருமாளே ஏற்றுக்கொள்ள வேண்டுமென பிரம்மா வேண்ட, அவ்வாறே ஏற்றார்! திருமால். பெருமாள் இங்கே அக்னிப் பிழம்பாக அத்திகிரி என்ற திருத்தலத்தில் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ராம்! எனவே இஙகுள்ள உற்சவரின் திருமுகத்தில் அக்னியால் ஏற்பட்ட வடுக்கள் போன்ற புள்ளிகளை இன்றும் நாம் காணலாம். வேள்வியால் பங்கேற்ற தேவர்கள் அனைவருக்கும் கேட்ட வரங்களை எல்லாம் திருமால் கொடுத்தார்ம்! எனவே பெருமாளுக்கு இங்கே #வரதர் (கேட்கும் வரங்களைத் தருபவர்) எனப் பெயர் வந்தது.
திருமால் இங்கே என்றென்றும் தங்கியிருப்பதற்காக(நித்யவாசம்) தேவலோக யானை #ஐராவதம் மலையின் வடிவெடுத்து, திருமாலைத் தாங்கி நின்றது. #அத்தி என்றால் சமஸ்கிருதத்தில் #யானை என்று பொருள். #கிரி என்றால் #மலை என்று பொருள். அத்தியே கிரியானதால் (யானையே மலையானதால்) இவ்விடம் #அத்திகிரி என்றானது.
அத்திகிரி, அத்தியூர்,வாரணகிரி (வாரணம் = யானை) என்றெல்லாம் அழைக்கப்படும் இக் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலிலுள்ள #அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் தான் ஓர் அதிசயம் மறைந்துக் கிடக்கிறது.

#நீருக்குள்_வாசம்_செய்யும்_வரதர் 🙏

அத்திகிரி என்ற திருத்தலத்தில் நூற்றுக்கால் மண்டபத்தின் பின்னால், #அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் எப்பொழுதும் தண்ணீர் நிரம்பிக் காட்சியளிக்கிறது. இக்குளத்து நீரை நம் தலையில் தெளித்துக் கொண்டாலே பெருமாளின் அபிஷேக நீரைத் தெளித்துக் கொண்டதற்குச் சமமாகும். இக்குளத்தின் நடுவிலுள்ள மண்டபத்தில் தண்ணீருக்கடியில் #அத்திவரதர் எழுந்தருளியுள்ளார். பாற்கடலில் பாம்பணையில் பள்ளிக்கொண்ட திருமாலுக்கு எப்பொழுதுமே தண்ணீரின் மீது பள்ளிக் கொள்வது பிரியமானதே! ஆனால் இங்கோ, தண்ணீருக்கடியில் வாசம் செய்கிறார்.
கேட்பவர்களுக்குக் கேட்கும் வரங்களை அளித்து #வரதர் எனப் பெயர் பெற்ற பரந்தாமன், உலகம் உய்ய இங்கே தீர்த்தவாசம் செய்கிறார். தமிழர்களின் #முல்லை_நிலக்கடவுளான_திருமால் நீளாதேவியின் மணாளர்! என்பதும், நீர்நிலைகளின் அம்சமே அன்னை நீளாதேவி என்பதும், பெருமாள் நீரின் மீது மகிழ்துறைய ஒரு முக்கிய காரணமாகும். எனவேதான் நீர்நிலைகளைக் காக்கக் காக்கும் கடவுளான திருமாலுக்கு நீர் நிலைகளின் அருகே கோயில்களைக் கட்டி வைத்தனர்! நம் முன்னோர்கள்.
எனவே தான் மழையின் வருகையைக்கூட #நாரணன்_வருகை என நம் முன்னோர்கள் போற்றினர்.
ஆனால் இங்கே ஜலவாசம் செய்யும் பெருமாள், நாற்பது வருடங்களுக்கு ஒரு முறையே திருக்குளத்திற்கு வெளியே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முன்பு 1979 ல் இந்த #அத்திவரதர் நீருக்கு வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இப்பொழுது நம் பிறவிப்பயனின் காரணமாக வரும் ஆனி மாதம்__26 (ஜுலை __1) ஆம் தேதி முதல் 48 நாட்களுக்கு பக்தர்களுக்குத் தரிசனம் தந்து நல்லருள் புரிவார்! அத்திவரதர்.

#தண்ணீருக்குள்_வரதர்_ஏன் ?
இதற்குப் பலவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.
1. பிரம்மாவின் வேள்வியின்போது ஏதோவொரு காரணத்தால் அத்திவரதரின் திருமேனியில் சிறு பின்னம்( குறை) ஏற்பட்டுவிட்டதாம். இதனால் பதறிப்போன பிரம்மா, பெருமாளைப் பணிந்து வேண்ட, அஞ்சவேண்டாம்! பிரம்மதேவரே! பின்னமான திருமேனியை வெள்ளிப் பேழையில் வைத்து, அனந்தசரஸில் அமிழ்த்தி வையுங்கள்! என்றாராம். அதனாலேயே இவ்வாறு நீருக்கடியில் வரதரை வைத்திருப்பபதாகக் கூறுகின்றனர்! ஆன்மிகப் பெரியோர்கள்.

2. இந்த வரதர் அத்தி மரத்தால் ஆனவர்! தண்ணீரில் மூழ்கியிருந்தால் அத்தி மரத்தின் வலு மேலும் அதிகரிக்கும்! என்பதாலும் இவ்வாறு செய்திருக்கலாம்! எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

3. முற்காலத்தில் இத்தலத்தில் #வரதராஜராக, மூலவராக இருந்தவர் இந்த வரதரே! என்றும், அச்சிலை இலேசாகப் பின்னமடைந்து விட்டதால், மேலும் பாதிப்படையாமல் இருக்க, இவ் வரதரை நீருக்குள் வைத்தனர்! (அத்திமரத்தால் ஆனவர் என்பதால் மேலும் வலுவேறும் என்று…)
என்றும் கூறுகிறார்கள்.

4. கோயிலைப் புனரமைத்து, கும்பாபிஷேகம் செய்யும்போது, மூலவரின் சக்தியை அத்திமர விக்ரஹத்தில் ஆவாஹனம் செய்து கருவறையில் வைத்துவிட்டு, மூலவரை நகர்த்தி வைப்பது மரபு. கும்பாபிஷேகத்தின் போது அத்திமர விக்ரஹத்தை எடுத்துவிட்டு, மூலவரைப் பிரதிஷ்டை செய்வார்கள். அவ்வாறே ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மூலவராக இருந்த அத்திமரத் திருமேனியே, பெருமாளின் உத்தரவின்படி, (உலகம் செழிப்பாக இருக்கப் பகவான் இவ்வாறு திருவருள் புரிந்திருக்கலாம்) திருக்குளத்தில் நீருக்கடியில் வைக்கப்பட்டுள்ளது! என்றும் கூறுகின்றனர்.

எது எவ்வாறானாலும், அனந்தசரஸைப் பாற்கடலாகப் பாவித்து, பெருமாள் குளிர்ச்சியான நீரில் எப்பொழுதும் ஆழ்ந்திருந்தப்படி, தன்னை வழிபடும் பக்தர்களையும், நேரில் வர இயலாவிட்டாலும், எங்கிருந்தும் மானசீகமாக வழிபடும் பக்தர்களின் வாழ்விலும் நிம்மதியையும், வளத்தையும், மகிழ்ச்சியையும் வாரி வழங்குகிறார்! #அத்திவரதர்.

திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் ஜுலை 1.7.19__ முதல் சேவை சாதிப்பார். 24 நாட்களுக்குச் சயனத் திருக்கோலத்திலும், மீதி 24 நாட்களுக்கு நின்ற திருக்கோலத்திலுமாக மொத்தம் 48 நாட்கள் அத்திவரதரின் அரிய தரிசனத்தை ஆனந்தமாகப் பக்தர்கள் கண்டு மகிழலாம். பெருமாளோடு, பெருந்தேவித் தாயாரையும் வழிபட்டு, அருளைப் பெற்றிடுவோம்.

🙏 நாற்பது வருடங்களுக்கு ஒருமுறேயே அத்திவரதரின் தரிசனம் என்பதால் மீண்டும் அத்திவரதரை 2059 ல் தான் நாம் தரிசிக்க இயலும். நீண்ட ஆயுள் உள்ளவர் மட்டுமே தன் வாழ்நாளில் முயன்றால்,
*கேட்கும் வரங்களைக் கேட்டபடியே அருளும் அத்திவரதரை* இருமுறைகள் தரிசிக்கும் பேற்றை அடைவார்.🙏
🙏அத்திவரதரே! காக்க வேண்டும்! இவ்வையகத்தை! 🙏
#ஓம்நமோநாராயணா 🙏

*அத்தி வரதர்*

நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ‘அத்திவரதர் வைபவம்’ வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அனந்த சரஸ் தீர்த்தத்தில் இருக்கும் அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக எழுந்தருளச் செய்யப்படுவார். முதல் 24 நாள்கள் சயன நிலையிலும், அடுத்த 24 நாள்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த வைபவத்தில் கலந்துகொண்டு வரதரை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்!

1. குளத்தில் இருந்து அத்திவரதரை வெளியில் எடுப்பதை யாரும் பார்க்க முடியாது. அத்திவரதர் வெளிவரும்போது பக்தர்கள், பத்திரிகையாளர்கள், வி.ஐ.பி-க்கள் என யாருக்கும் தரிசிக்க அனுமதி இல்லை. ஆகவே, முதல்நாள் அன்றே அத்திவரதரை பார்க்க வேண்டும் என்று திட்டமிட வேண்டாம். வெளியூர் பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, விழா தொடங்கிய சில நாள்கள் கழித்து அத்திவரதரை தரிசிக்க திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

2. 48 நாள்களிலும் அத்திவரதர் தரிசனம் மட்டுமே நடைபெறும். வேறு எந்த சிறப்பு பூஜையும் நடைபெறாது.

3. காலை 6 முதல் 2 மணி வரை, பிற்பகல் 3 முதல் 8 மணி வரை என தரிசனத்துக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

4. அத்திவரதர் தரிசனத்தைக் காண வரும் பக்தர்கள் கிழக்கு ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். தேசிகர் சந்நிதி வழியாக வசந்த மண்டபத்தை அடைந்ததும் அத்திவரதரை தரிசனம் செய்யலாம். தரிசனம் முடிந்த பின்பு மேற்கு ராஜகோபுரம் வழியாக வெளியேற வேண்டும்.

5. பொது தரிசனம், சிறப்பு தரிசனம் என இரண்டு வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பொதுதரிசனத்துக்கு எவ்விதக் கட்டணமும் இல்லை. சிறப்பு தரிசனத்துக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். வி.ஐ.பி-க்கள் மேற்கு கோபுரம் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். வி.ஐ.பி தரிசனத்துக்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

6. ஸ்ரீதேவராஜர் மற்றும் தாயார் சந்நிதிகளுக்குச் செல்வதற்காக மேற்கு ராஜகோபுரத்திலிருந்து தனியாக ஒரு வரிசை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்தவழியாக மூலவர் மற்றும் தாயாரை தடையின்றி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

7. வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன. தற்காலிகப் பேருந்து நிறுத்தம், மருத்துவ முகாம், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் பக்தர்களுக்குச் செய்யப்பட்டுள்ளன.

8. காஞ்சிபுரம் நகரத்தில் தற்காலிகப் பேருந்து நிலையங்களை ஓரிக்கை, ஒலிமுகமதுப்பேட்டை, பச்சையப்பன் கல்லூரி வளாகம் ஆகிய மூன்று இடங்களில் அமைத்திருக்கிறார்கள். மேலும், தனியார் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காகப் பச்சையப்பன் கல்லூரி (நசரத்பேட்டை), திருவீதிபள்ளம், லாலா தோட்டம் (நகரம்), ஒலிமுகமதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் வாகன நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

9. சென்னை, திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, திருப்பதி, பெங்களூரு போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஒலிமுகமதுப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். உத்தரமேரூர், வந்தவாசி, திண்டிவனம், திருச்சி, புதுச்சேரி மற்றும் செய்யாறு, திருவண்ணாமலை போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஓரிக்கை பேருந்து நிலையத்திலிருந்தும் தாம்பரம், செங்கல்பட்டு, கல்பாக்கம், மாமல்லபுரம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் நத்தப்பேட்டை, வையாவூர் வழியாக மாற்றுவழியில் மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்து புறப்படும்.

10. தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து கோயில் பகுதிக்குச் செல்லும் போக்குவரத்திற்கென நிமிடத்துக்கு 20 அரசுப் பேருந்துகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

11. காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதியில் 70 கழிப்பிடங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், கோயிலைச் சுற்றியுள்ள 4 மாட வீதிகளிலும் இருபாலருக்கும் தலா 11 வீதம் 22 தற்காலிகக் கழிப்பிடம் கூடுதலாக அமைக்க திட்டமிட்டுள்ளார்கள். சின்ன காஞ்சிபுரம் பகுதியில் 36 கழிப்பிடங்களும் , பெரிய காஞ்சிபுரம் பகுதியில் 92 கழிப்பிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தற்காலிகப் பேருந்து மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் உட்புறத்தில் 2 சுத்திகரிப்பு இயந்திரங்களும், வெளிப்புறத்தில் 4 சுத்திகரிப்பு இயந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் 6 புதிய சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கக் குடிநீர்த் தொட்டி கோயிலுக்குள் ஒன்றும், கோயிலுக்கு வெளிப்புறத்தில் 10 இடங்களிலும் அமைக்கப்படவுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் 85 இடங்களில் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன.

12. குற்றம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 100 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டக் காவல் கண்காணிப்பு அலுவலகம் மூலமாக கண்காணிப்புப் பணிகள் நடைபெறும். சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.

13. சுகாதாரத் துறையின் மூலமாகக் கோயிலுக்கு உள்பகுதியில் 5 மருத்துவக் குழுக்களும், கோயிலுக்கு வெளியில் 4 மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட உள்ளன. முக்கிய பகுதிகளில் 108 ஆம்புலன்ஸுடன் கூடிய தற்காலிக மருத்துவ அறைகள் அமைத்து 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

14. அத்திவரதர் வைபவம் நடைபெறும் நாள்களில் உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அன்னதானம் வழங்க முடியும். உணவின் மாதிரி எடுத்துப் பரிசோதனை செய்யப்படும். அதுபோல் காஞ்சிபுரத்தில் உள்ள சுமார் 300 உணவகங்களிலும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளார்கள். அந்த உணவகங்களில் இருந்து வரும் உணவுகள் தினமும் பரிசோதனை செய்யப்படும்.

15. பெரும்பாலான விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. ஆகவே, வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களை திருமண மண்டபங்களில் தங்க வைப்பதற்குத் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது…..

Leave a Comment