Ashtalakshmi stotram in tamil

நம் அனைவருக்கும் செல்வத்தை மட்டுமல்லாது அனைத்து வகை ஐஸ்வர்யங்களை தருபவள் தேவி மகாலட்சுமி (ashtalakshmi stotram in tamil). மஹாலக்ஷ்மியின் அஷ்ட வடிவங்கள் ஆதி லட்சுமி, சந்தான லட்சுமி,  கஜ லட்சுமி,  தன லட்சுமி, தான்ய லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி மற்றும் தைரிய லட்சுமி

இந்த அஷ்டலக்ஷ்மிகளின் வழிபாட்டு ஸ்தோத்திரத்தை இங்கு பார்ப்போம். ஒவ்வொரு லஷ்மிக்கும் ஒவ்வொரு மந்திரங்கள் இருக்கு.. அதை  ஸ்மரிச்சு வழிபட்டாலே போறும் அஷ்டலஷ்மியின் அனுக்கிரகத்தை நாம் அடைஞ்சு துன்பமில்லாத, நோய் நொடி இல்லாத ஆரோக்ய வாழ்வை பெறலாம்..

அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்

1. ஆதி லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

ஸூமநஸ வந்தித ஸூந்தரி மாதவி
சந்த்ர சகோதரி ஹேமமயே
முநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயினி
மஞ்சுள பாக்ஷிணி வேதநுதே
பங்கஜ வாஸினி தேவஸூ பூஜித
ஸத்குண வர்ஷினி சாந்தியுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
ஆதிலெக்ஷ்மி ஸதா பாலயமாம்

2. சந்தான லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

அயிதக வாஹினி மோஹினி சக்ரிணி
ராக விவர்த்தினி ஞானமயே
குணகண வாரிதி லோக ஹிதைஷினி
ஸ்வர ஸப்த பூஷித கானறுதே
சகல ஸூராஸூர தேவ முநீஸ்வர
மாநவ வந்தித பாத யுதே
ஜெய ஜெய ஹே மது ஸூதன காமினி
சந்தான லக்ஷ்மி பாலயமாம்

3. கஜ லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

ஜய ஜய துர்கதி நாசினி காமினி
சர்வ பலப்ரத சாஸ்த்ரமயே
ரதகஜ துரசு பதாதி சமாவ்ருத
பரிஜன மண்டித லோகநுதே
ஹரிஹர ப்ரம்ம ஸூ பூஜித சேவித
தாப நிவாரிணி பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
கஜலக்ஷ்மி ரூபணே பாலயமாம்

4. தன லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி
துந்துபி நாத ஸூ பூர்ண மயே
கும கும குங்கும குங்கும குங்கும
சங்க நிநாத ஸூவாத் ய நுதே
வேத புராணே திஹாச ஸூ பூஜித
வைதிக மார்க ப்ரதச்ச யுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தனலக்ஷ்மி ரூபணே பாலயமாம்

5. தான்ய லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

அபிகலி கல்மஷ நாசினி காமினி
வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீர சமுத்பவ மங்கள ரூபிணி
மந்த்ர நிவாஸினி மந்த்ரநுதே
மங்கள தாயிணி அம்புஜ வாஷினி
தேவ கணார்ச்சித பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தான்யலக்ஷ்மி ஸதா பாலயமாம்

6. விஜய லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

ஜய கமலாசனி சத்கதி தாயினி
ஞான விகாஸினி கானமயே
அனுதின மர்ச்சித குங்கும தூசர
பூஷித வாஸித வாத்ய நுதே
கனகதாரா ஸ்துதி வைபவ வந்தித
சங்கர தேசித மான்யபதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
விஜயலக்ஷ்மி ஸதா பாலயமாம்

7. வித்யா லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

ப்ரணத ஸூரேஸ்வரி பாரதி பார்வதி
சோக விநாசினி ரத்னமயே
மணிமய பூக்ஷித கர்ண விபூஷண
சாந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே
நவநிதி தாயினி கலிகல ஹாரிணி
காமித பலப்ரத ஹஸ்தயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
வித்யாலக்ஷ்மி ஸதா பாலயமாம்

8. தைரிய லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

ஜயவர வர்ணனி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே
ஸூரகண பூஜிய சீ க்ர பலப்ரத
ஞான விகாஸினி சாஸ்த்ர நுதே
பவபய ஹாரிணி பாப விமோசனி
சாது ஜநாச்ரித பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தைர்யலக்ஷ்மி ஸதா பாலயமாம்

தினமும் தவறாது சொல்ல வேண்டிய ஸ்ஸோஸ்த்ரம்

அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே
த்வமித முத்தா பித பத்மயோனிஹி
அனந்த பூமா மம ரோக ராஷிம்
நிருந்தி வாதாலய வாச விஷ்ணோ)

 

அஷ்ட லட்சுமி துதிகள்

மகாலட்சுமி வசிக்கும் 108 அபூர்வ இடங்கள்

மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்!

1 Comment

Leave a Comment

Enable Notifications Allow Miss notifications