Kadaga rasi guru peyarchi palangal 2017-18

கடக இராசி அன்பர்களே…

உங்கள் இராசிக்கு குரு பகவான் 4-ம் இடத்திற்கு 02.09.2017 அன்று பெயர்ச்சி ஆகி வருகிறார். 5, 10-க்குரிய செவ்வாய் சாரத்தில் பெயர்ச்சி பெறுவதால் இனி நற்பலன்கள் தேடி வரும். சிலர் 4-ம் இடத்தில் குரு அமர்வது நன்மை தராது என்பார்கள். திரிகோணதிபதி, கேந்திரத்தில் அமர்ந்தால் நன்மைகளை வாரி வழங்குவார். 8, 10, 12-ம் இடங்களை குரு பார்வை செய்வார். புதிய தொழில் துவங்க வாய்ப்பு வரும். குடும்பத்தில் சுபசெலவுகள் தரும். இத்தனை நாட்கள் பீடித்திருந்த நோய் விலகும். குழப்பங்கள் தீர வழி பிறக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். பழைய வீட்டை புதுமைப்படுத்துவீர்கள். நலிந்த தொழில் புத்துயிர் பெரும். அயல்நாட்டில் இருப்பவர்களின் உதவிகள் பெரிய அளவில் வரும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். மற்றபடி, எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன? உடலந்லனில் அக்கரை செலுத்துங்கள். செலவு செய்வதில் கவனம் தேவை. வாகன விஷயத்தில் நிதானம் அவசியம் வேண்டும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்கவும். கொடுக்கல்-வாங்கலில் கவனமாக இருங்கள். பொதுவாக, இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் நன்மைகளையே தருவார். நல்வாழ்த்துக்கள்.

 

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்
Guru

யாருக்கும் அஞ்சாத குணமும் மற்றவர்களை கவரக்கூடிய உடலமைப்பும் கொண்ட கடக ராசி நேயர்களே!

உங்கள் ஜென்ம ராசிக்கு 6,9-க்கு அதிபதியான ஆண்டுக்கோளான குரு பகவான் வாக்கியப்படி 2-9-2017 முதல் 4-10-2018 வரை சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இது சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அசையா சொத்துகளால் வீண்விரயங்கள் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். பணவரவுகளும் சுமாராகவே இருக்கும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். உற்றார்- உறவினர்கள் மற்றும் நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் சில நேரங்களில் உங்களுக்கே தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்னே அனுகூலப்பலனை அடையமுடியும்.

19-12-2017 முதல் சனி பகவான் ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எதையும் சமாளித்து ஏற்றமிகு பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். பயணங்களால் அனுகூலம் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளு குறையும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும். கடன்களும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்துவிடமுடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமானநிலை இருக்கும் என்றாலும் முடிந்தவரை பெரிய தொகையைப் பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் அடிக்கடி உடல்நிலை பாதிப்புகளை எதிர்கொள்வார்கள். தூக்கமின்மை, உடல்நிலையில் சோர்வு, ஞாபக மறதி, மந்தமான நிலைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தால் மனஉளைச்சல்கள் ஏற்படாமல் இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை
குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகி ஒற்றுமைக் குறைவுகளை ஏற்படுத்தும். சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். பொருளாதாரநிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகளையும் எதிர்கொள்ள நேரிடும். உற்றார்- உறவினர்களின் வருகையால் சில மனசஞ்சலங்கள் உண்டாகும். முயற்சிகள் அனைத்திலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது.

கொடுக்கல்வாங்கல்
கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் எதிர்பார்க்கும் லாபத்தை அடையமுடியாது. கொடுக்கல்-வாங்கலிலும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல்போகும். கடன் தொகைகளை வசூலிப்பதில் தடைகள் உண்டாகும். வம்பு வழக்குகள் சாதகமாக இருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கையிலிருக்கும் ஆர்டர்களைக்கூட முடித்துக்கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்படும். அரசுவழிகளில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல், டென்ஷனைக் குறைத்துக்கொள்ள முடியும்.

உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் தங்கள் உழைப்பிற்கான முழுப்பலனை அடையமுடியும். அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் சில நேரங்களில் அதிகநேரம் உழைக்க வேண்டியிருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்துவதுடன் குடும்பத்தைவிட்டும் பிரியநேரிடும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தகுதிக்கேற்றபடி அமையும்.

பெண்கள்
குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை நீடிக்கும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். அசையா சொத்துகளாலும், வண்டி, வாகனங்களாலும் வீண்செலவுகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புத்திரவழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம்.

அரசியல்
அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது உத்தமம். அமைச்சர்களின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் கட்சி மாறக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். எந்தவொரு காரியத்திலும் வெற்றி கிட்டும்.

விவசாயிகள்
விளைச்சல் சிறப்பாக இருக்கும். நவீனமுறைகளைக் கையாண்டு விளைச்சலைப் பெருக்கமுடியும் என்றாலும் வேலைக்குத் தக்கசமயத்திற்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். இதனால் தொழிலில் சுணக்கம் ஏற்படும். அரசுவழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். நீர்வரத்து சிறப்பாகவே இருக்கும்.

கலைஞர்கள்
கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றிக் கிட்டும். வரவேண்டிய பணத்தொகைகளும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும். சக கலைஞர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும்.

மாணவமாணவியர்
கல்வியில் நல்ல முன்னேற்றமுடன் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெறமுடியும். அடிக்கடி ஞாபகமறதி ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. தேவையற்ற பொழுதுபோக்குகளையும், நண்பர்களின் சகவாசத்தையும் தவிர்ப்பது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது வேகத்தைக் குறைத்துக்கொள்வது சிறப்பு.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 2-9-2017 முதல் 5-10-2017 வரை
குரு பகவான் 4-ல் சஞ்சரித்தாலும் ராசியாதிபதி சந்திரனுக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல்நிலையில் சிறுசிறு மருத்துவச்செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. குடும்பத்தில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதால் நிம்மதியும், ஒற்றுமையும் உண்டாகும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்குக் கௌரவமான பதவி உயர்வுகள் உண்டாகும். வேலைப்பளு சற்றே அதிகரித்துக் காணப்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறமுடியும் என்றாலும் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் மிகவும் அனுசரித்துச்செல்ல வேண்டி இருக்கும். தேவையற்ற பயணங்களைக் குறைத்துக்கொள்வதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தைத் தவிர்ப்பது நல்லது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். ராகு-கேதுவுக்குப் பரிகாரம் செய்வது, துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

குரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 6-10-2017 முதல் 7-12-2017 வரை
குரு பகவான் 4-ல் ராகுவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகும். உற்றார்-உறவினர்களிடையே வீண் கருத்துவேறுபாடுகளும், முயற்சிகளில் தடைகளும் உண்டாகும். நினைத்த காரியங்களை நிறைவேற்றமுடியாது. பணவரவுகளிலும் தடை ஏற்படுவதால் குடும்பத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழநிலையும் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பணவிஷயங்களில் பிறரைநம்பி வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் முழுஈடுபாட்டுடன் செயல்பட்டாலும் ஞாபக மறதி, மந்தநிலை ஏற்படும். இதனால் பெற்றோர், ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். கலைஞர்களுக்கு இது சோதனையான காலமாகும். நடித்த படங்கள் நன்றாக ஓடாத காரணத்தால் பட வாய்ப்புகளும் ரசிகர்களின் ஆதரவுகளும் குறையும். அரசியல்வாதிகள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய காலமிது. எனவே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாணவர்கள் எதிலும் சுறுசுறுப்பு இல்லாது இருப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 8-12-2017 முதல் 13-2-2018 வரை
குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். 19-12-2017 முதல் சனி ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சாதகமாக சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதிலும் முன்னேற்றம் கொடுக்கும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நெருங்கியவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள் என்றாலும் உங்களைச் சுற்றியிருக்கும் கூட்டத்தை முழுவதும் நம்பிவிடாமல் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. கொடுக்கல்-வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் தக்க சமயத்தில் அமையும். திருமண சுபகாரியங்கள்கூட கைகூடும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் குறையும். உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் வேலைப்பளுவையும் குறைத்துக்கொள்ள முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். அரசியல்வாதிகளுக்குக் கௌரவமான பதவிகள் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் அதிசாரமாக விருச்சிக ராசியில் 14-2-2018 முதல் 6-3-2018 வரை
குரு பகவான் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். தொழிலாளர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வற்றால் நல்ல மேன்மை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். பெரிய தொகையைக்கூட எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பணவரவுகளால் உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொன், பொருள் சேரும். மங்களகரமான சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்கூட அனுகூலப்பலனை அடையமுடியும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளில் தாமதநிலை ஏற்பட்டாலும் விரும்பிய பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டுப்போட்டிகளிலும் சாதனை படைப்பார்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவந்து கதவைத்தட்டும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரும். குருப்ரீதியாக தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் வக்ரகதியில் 7-3-2018 முதல் 3-7-2018 வரை
குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் எடுக்கும் காரியங்களில் ஓரளவுக்கு அனுகூலமான பலனைப் பெறுவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் சற்றே விலகி கடன்கள் படிப்படியாகக் குறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில்கூட அனுகூலமான பலனை அடையமுடியும்.கணவன்-மனைவி இடையே ஒற்றுமை நிலவும். உற்றார்-உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஓரளவுக்கு அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். கொடுக்கல்- வாங்கல்களிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் சிறப்பான லாபங்கள் உண்டாகும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கப்பெறும். கூட்டாளிகள் சாதகமாக செயல்படுவதால் அபிவிருத்தியும் பெருகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவையும் ஏற்றத்தை ஏற்படுத்தும். சிந்தித்து சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிலும் நற்பலனை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் இருந்த கெடுபிடிகள் குறைந்து நிம்மதியானநிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடைவார்கள். சர்ப்ப சாந்தி செய்வது நல்லது.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 4-7-2018 முதல் 4-10-2018 வரை
குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சனி 6-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்ததில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். உங்களின் பலமும் வளமும் கூடக்கூடிய காலமாக அமையும். கடந்தகால கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் சுபிட்சமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். கணவன்-மனைவி சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு அரசுவழியில் கடனுதவிகள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் நோக்கம் பலனளிக்கும். பெரிய தொகையை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று நிதானமாக இருப்பது உத்தமம். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நல்ல லாபம் அமையும். எந்தவொரு செயலையும் காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ் உயரும். வருவாய் அதிகரிக்கும். மக்களின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்துவழியில் அனுகூலமான பலன்கள் அமையும். புதிய சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

பரிகாரம்
கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 4-ல் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, குருப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டைக் கடலை மாலை சாற்றுவது நல்லது. ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-லும் சஞ்சரிப்பதால் துர்க்கை,சரபேஸ்வரர் , தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 1, 2, 3, 9.
நிறம்: வெள்ளை, சிவப்பு.
கிழமை: திங்கள், வியாழன்.
கல்: முத்து.
திசை: வடகிழக்கு.
தெய்வம்: வேங்கடாசலபதி.

Leave a Comment