மஹாலக்ஷ்மி தேவியை தேவர்கள் வழிபாடு செய்யும் போது சொல்லும் மகத்தான மகாலக்ஷ்மி ஸ்லோகம்.
இந்த ஸ்லோகத்தை கூறி மனம் உருக வேண்டுபவருக்கு சகல சௌபாக்கியங்கள் கிட்டும்.

லட்சுமி படத்தை கிழக்கு நோக்கி வைத்து, செந்தாமரை, செவ்வந்தி, முல்லை, பிச்சி, மல்லிகை இவற்றில் ஏதாவது மலர் மாலை சூட்டி தீபமேற்றி வழிபடுங்கள். காய்ச்சிய பாலை பிரசாதமாக படைத்து, லட்சுமி கவசம், அஷ்டோத்திரம், 108 போற்றி இதில் ஏதாவது ஒன்றை படிக்க வேண்டும். வெள்ளியன்று இந்த வழிபாடு செய்வோர் வீட்டில் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம்

பதவி உயர்வு கிடைக்க , வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் பெருக – மந்திரம், ஸ்தோத்திரம், வழிபாடு!

Mahalakshmi Slogam in Tamil:

நமோ லக்ஷ்ம்யை மஹாதேவ்யை பத்மாயை ஸததம் நம:

நமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம:

த்வம் ஸாக்ஷத் ஹரிவக்ஷஸ்தா ஸீர ஜ்யேஷ்டா வரோத்பவா

பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ

பரமானந்ததா அபாங்கி ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி

அருணா நந்தினீ லக்ஷ்மீ: மஹாலக்ஷ்மீ: திரிஸக்திகா

ஸாம்ராஜ்யா ஸர்வ ஸுகதா நிதிநாதா நிதிப்ரதா

நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்திய மகோந்நதி

ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ ஸுபகா ஸம்ஸ்து தேஸ்வரி

ரமா ரக்ஷ்கரீ ரம்யா ரமணீ மண்டலோத்தமா

 

உலகிலுள்ள அனைத்து செல்வங்களிலும் குடி கொண்டிருப்பவள் மகாலட்சுமி. அது மட்டுமின்றி தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், வைராக்யம், தைர்யம், வெற்றி, மன அமைதி … என அனைத்தையும் வழங்குபவள் அவள்.

அதாவது, பாற்கடலில் பிறந்த திருமகளை அஷ்டலட்சுமியாக வழிபடுவார்கள். தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, வீர லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, கஜ லட்சுமி இந்த எட்டு நிலைகளிலும் அருளும் அவளை வழிபடுவதால் அஷ்ட ஐஸ்வரியங்களும் நமக்கு கிட்டும்.

எனவே வீடு லட்சுமி கடாட்சத்துடன் நிறைந்திருக்க லட்சுமி தேவியை வரவேற்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். லட்சுமி தேவிக்கு விருப்பமான பொருட்களாக, நம்முன்னோர்கள் வலியுறுத்தும் பொருட்களை வீட்டில் வைத்தால், அதனால் லட்சுமி தேவி ஈர்க்கப்படுவார். அவர் நம் வீட்டில் தங்குவார் என நம்பப்படுகிறது. இதனால் வீட்டில்  செல்வம் பெருகும்.

மகாலட்சுமி

இனிப்பு (கல்கண்டு)

இனிப்பு பொருட்கள் மீது மிகுந்த பிரியத்துடன் வாசம் கொண்டிருப்பவள் லட்சுமி. கல்கண்டு உள்ளிட்ட இனிப்பு பொருட்களில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்.

மஞ்சள்… குங்குமம்

மஞ்சள், குங்குமம் மிகவும் மங்களகரமாகவும், லட்சுமிக்கு உகந்தாகவும் கருத்தப்படுகிறது.

கல் உப்பு

பாற்கடலில் பிறந்தவள் லட்சுமி அதுபோல கடலில் இருந்து கிடைக்கும் உப்பு மகாலட்சுமியின் வடிவமாக போற்றப்படுகிறது. அதனால் தான் பணத்தை போலவே உப்பையும் கடனாக கொடுக்க கூடாது என்பார்கள்.

தேன், நாணயங்கள்

பால், தேன், தாமரை, தானியக் கதிர், நாணயங்கள் ஆகிய ஐந்தும் பஞ்ச லட்சுமியின் அடையாளங்களாகும். குறிப்பாக வெள்ளிக்கிண்ணத்தில் நாணயங்கள் வீட்டில் வைத்திருந்தால் செல்வம் செழிக்கும். வியாபார இடங்களில் வைத்திருந்தால் தொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.

வில்வம் இலை

வில்வமரத்தில் லட்சுமி வசிப்பதால், அதற்கு ‘லட்சுமி வாசம்’ என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது சாதக நூல்களில் வில்வம் லட்சுமியின் இருப்பிடமாக கூறப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வில்வ இலையால் அர்ச்சிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் கிடைக்கும்.

தாமரை

வெள்ளிக்கிழமை மாலையில் தாமரை வடிவிலான லட்சுமி கோலம் போட்டு அதன் மீது ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி  வழிபட்டால், அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். இப்படி செய்தால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பதும் நம்பிக்கை.

கஜலட்சுமி

யானைகள் செல்வத்தின் அடையாளமாகும். யானையை லட்சுமியாக போற்றுகின்றனர். பூஜைகளின் தொடக்கத்தில் செய்யப்படும் கஜபூஜையால் மகிழும் மகாலட்சுமி, அவ்விடத்தில் பரிவாரங்களுடன் எழுந்தருள்கிறாள் என்பது நம்பிக்கை.

இது தவிர இல்லத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டு,  உள்ளத் தூய்மையுடன் காலை, மாலை ஆகிய நேரங்களில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் பூரண லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

வீட்டின் முற்றத்தில் சானத்தில் மெழுகுதல் கோலமிடுதல், அதில் பூக்களை வைத்தல் போன்றவையாவும், மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்கும் அமைப்பாகும். காலையில் தலைவாயிலைத் துய்மை படுத்தி படியில் கோலமிட்டு இரண்டு புறமும் பூக்களை வைத்து லட்சுமியைத் துதிக்க வேண்டும். இவற்றையெல்லாம்  தினசரி செய்து வந்தால் லட்சுமி கடாட்சம்  நிரந்தரமாகும்

Leave a Comment