Roga nivarana ashtakam lyrics in tamil
ரோக நிவாரண அஷ்டகம் பாடல் வரிகள் (Roga nivarana ashtakam)
பகவதி தேவி பர்வத தேவி
பலமிகு துர்க்கையளே
ஜெகமது யாவும் ஜெய ஜெய வெனவே சங்கரி யுன்னைப்
பாடி டுமே
ஹந ஹந தகதக பசபச வெனவே தளிர்த்திடு ஜோதி யானவளே ரோகதி வாரணி சோக நிவாரணி தாபதி வாரணி ஜெய துர்க்கா
தண்டினி தேவி தக்ஷிணி தேவி கட்கினி தேவி துர்க்கையளே தந்தன தான தனதன தான தாண்டவ நடன ஈச்வரியே முண்டினி தேவி முனையொளி சூலி முனிவர்கள் தேவி மணித் தீலி
ரோகநி வாரணி சோக நிவாரணி தாபநி வாரணி ஜெய துர்க்கா
காளினி நீயே காமினி நீயே கார்த்திகை நீயே துர்க்கையளே நீலினி நீயே நீதினி நீயே நீர்நிதி நீயே நீர் ஒளியே
மாலினி நீயே மாதினி நீயே
மாதவி நீயே மான் விழியே ரோகநி வாரணி சோக நிவாரணி தாபநி வாரணி ஜெய துர்க்கா
நாரணி மாயே நான்முகன் தாயே நாகினியாயே துர்க்கையளே ஊரணி மாயே ஊற்றுத் தாயே
ஊர்த்துவ யாயே ஊர் ஒளியே காரணி மாயே காருணி தாயே கானக யாயே காசி னியே ரோகநி வாரணி சோக நிவாரணி தாபநி வாரணி ஜெய துர்க்கா
திருமகளானாய் கலைமகளானாய்
மலைமகளானாய் துர்க்கையளே பெருநிதி யானாய் பேரறிவானாய்
பெருவலி வானாய் பெண் மையளே
நறுமல ரானாய் நல்லவ ளானாய் நந்தினி யானாய் நங்கையளே ரோகநி வாரணி சோக நிவாரணி தாபநி வாரணி ஜெய துர்க்கா
வேதமும் நீயே வேதியள் நீயே வேகமும் நீயே துர்க்கையளே நாதமும் நீயே நாற்றிசை நீயே நாணமும் நீயே நாயகியே
மாதமும் நீயே மாதவம் நீயே மானமும் நீயே மாயவளே ரோகநி வாரணி சோக நிவாரணி தாபநி வாரணி ஜெய துர்க்கா
கோவுரை ஜோதி கோமள ஜோதி கோமதி ஜோதி துர்க்கையளே நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி நாட்டிய ஜோதி நாச்சியளே
பூவுறை ஜோதி பூரண ஜோதி பூதநற் ஜோதி பூர ணையே ரோகநி வாரணி சோக நிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா
ஜெய ஜெய சைல புத்திரி ப்ரஹ்ம சாரணி சந்த்ர கண்டி னியே ஜெய ஜெய சூஷ் மாண்டினி ஸ்கந்த மாதினி காத்யா யன்யயளே ஜெய ஜெய கால ராத்திரி கௌரி ஸித்திதா ஸ்ரீ நவ துர்க்கையளே ரோகநி வாரணி சோக நிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா