ஸ்ரீ சுதர்சன அஷ்டோத்தரம் | sri sudarshana ashtothram lyrics in tamil

 

🌺🌀🌺ஸ்ரீ சுதர்சன அஷ்டோத்தரம்🌺🌀🌺 sri sudarshana ashtothram lyrics in tamil

⚛️பலன் தரும் ஸ்ரீ சுதர்சன அஷ்டோத்தரத்தை தினமும் சொல்லி சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்து வந்தால் நம் பாவங்கள் எல்லாம் பறந்தோடும்.
⚛️பானபத்திரம்,முஸலம், மழு,கதை,வஸ்ராயுதம்,அக்னி,குந்தம்,கேடயம்,ஹலம் போன்ற இன்னும் பற்பலவிதமான சிறந்த ஆயுதங்களை ஏந்தியவரும் ஆன சக்கரத்தாழ்வார்,வாக்கு,மனம்,புத்தி,அகங்காரம்,ஞானம்,அக்ஞானம் இவற்றால் ஜன்ம ஜன்மாந்திரங்களில் செய்த அநேக பாவங்களைப் போக்கி எங்கும் எப்போதும் பாதுகாக்க வேண்டுவோம்.

🙏🏻ஓம் உதய சூரியனுக்கு சமமானவரே போற்றி!
🙏🏻ஓம் உதாரமான புஜபலம் உள்ளவரே போற்றி!
🙏🏻ஓம் கோடி மன்மதனைப் போன்றவரே போற்றி!
🙏🏻ஓம் ஸ்ரீவிஷ்ணுவின் இதய ஆனந்தமே போற்றி!
🙏🏻ஓம் பக்தர்களின் கற்பத விருட்சமே போற்றி!
🙏🏻ஓம் அபய வரத ஹஸ்தம் உள்ளவரே போற்றி!
🙏🏻ஓம் சக்கரத்தாழ்வாரே போற்றி!
🙏🏻ஓம் அண்ட சராசரத்தை தாண்டுபவரே போற்றி!
🙏🏻ஓம் தசரதச் சக்கரவர்த்தியின் திருக்குமாரரே போற்றி!
🙏🏻ஓம் துக்க நெருப்பைத் தகிப்பவரே போற்றி!
🙏🏻ஓம் சிசுபாலனை வதைத்தவரே போற்றி!
🙏🏻ஓம் கைகேயியின் திருக்குமாரரே போற்றி!
🙏🏻ஓம் பாலசூரியனைப் போன்றவரே போற்றி!
🙏🏻ஓம் மிகச் சிறந்த நீதிமானே போற்றி!
🙏🏻ஓம் தேவர்களைக் காப்பவரே போற்றி!
🙏🏻ஓம் தேவ எதிரிகளை வதைப்பவரே போற்றி!
🙏🏻ஓம் மூம்மூர்த்திகளின் முதல்வரே போற்றி!
🙏🏻ஓம் மிகப்பெரும் கீர்த்தி உள்ளவரே போற்றி!
🙏🏻ஓம் திக்குகளைப் பிரகாசிக்க வைப்பவரே போற்றி!
🙏🏻ஓம் சுக்ரீவன் போன்ற வானரர்களுக்கு பிரியரே போற்றி!
🙏🏻ஓம் தத்துவ ஞான ஆசை கொண்டவரே போற்றி!
🙏🏻ஓம் உதய சூரியனைப் போன்ற விழியுடையவரே போற்றி!
🙏🏻ஓம் பட்டுப் பீதாம்பரம்அணிந்தவரே போற்றி!
🙏🏻ஓம் மஹா விஷ்ணுவிற்குப் பிரியமானவரே போற்றி!
🙏🏻ஓம் கோடி சூர்யப் பிரகாசம் உடையரே போற்றி!
🙏🏻ஓம் மௌஞ்சி தரித்திருப்பவரே போற்றி!
🙏🏻ஓம் யக்ஞோப வீதம் தரித்திருப்பவரே போற்றி!
🙏🏻ஓம் பல ஆபரணம் பூண்டவரே போற்றி!
🙏🏻ஓம் தெய்வீகக் களையுள்ளவரே போற்றி!
🙏🏻ஓம் குண்டலங்களை அணிபவரே போற்றி!
🙏🏻ஓம் பக்தர்களின் கோரிக்கையை ஏற்பவரே போற்றி=
🙏🏻ஓம் விரும்பியதைத் தருபவரே போற்றி!
🙏🏻ஓம் முனிவர்களாலும் வணங்கப்படுபவரே போற்றி!
🙏🏻ஓம் வேத த்வனிகளால் மகிழ்ச்சியடைபவரே போற்றி!
🙏🏻ஓம் வைரம் பாய்ந்த அங்கமுடையவரே போற்றி!
🙏🏻ஓம் பிங்கள வண்ண உரோமமுடையவரே போற்றி!
🙏🏻ஓம் ககன மார்க்கப் பிரயாணியே போற்றி!
🙏🏻ஓம் இரண்டு கைகளை யுடையவரே போற்றி!
🙏🏻ஓம் நான்கு கைகளைப் பெற்றவரே போற்றி!
🙏🏻ஓம் எட்டுக் கைகள் உடையவரே போற்றி!
🙏🏻ஓம் பதினெட்டுக் கைகள் உடையவரே போற்றி!
🙏🏻ஓம் தங்கக் குண்டலமணிந்தவரே போற்றி!
🙏🏻ஓம் அம்பரிஷனைக் காத்தவரே போற்றி!
🙏🏻ஓம் கூப்பிய கைகள் உடையவரே போற்றி!
🙏🏻ஓம் மஹாவிஷ்ணு முன் நிற்பவரே போற்றி!
🙏🏻ஓம் ஆனந்தக் கண்ணீர் சொரிபவரே போற்றி!
🙏🏻ஓம் கதாயுதம் தரித்தவரே போற்றி!
🙏🏻ஓம் சங்காயுதத்தைப் பெற்றவரே போற்றி!
🙏🏻ஓம் சக்கராயுதத்தை அடைந்தவரே போற்றி!
🙏🏻ஓம் வாள் ஆயுதம் உடையவரே போற்றி!
🙏🏻ஓம் எமனின் பாசாயுதம் கொண்டவரே போற்றி!
🙏🏻ஓம் பிரளய காலர்க்னி ஏந்தியவரே போற்றி!
🙏🏻ஓம் விரலாயுதத்தை உடையவரே போற்றி!
🙏🏻ஓம் வஜ்ராயுதம் தரித்தவரே போற்றி!
🙏🏻ஓம் சூலாயுதம் ஏந்தியவரே போற்றி!
🙏🏻ஓம் பராசக்தியின் திரிசூலம் ஏந்தியவரே போற்றி!
🙏🏻ஓம் குந்தாயுதத்தைப் தரித்தவரே போற்றி!
🙏🏻ஓம் முஸலத்தைக் கையில் பெற்றவரே போற்றி!
🙏🏻ஓம் பரசுவைக் கையில் ஏந்தியவரே போற்றி!
🙏🏻ஓம் கேடயத்தைத் தரித்தவரே போற்றி!
🙏🏻ஓம் பிரகாசிக்கும் கேசத்தை உடையவரே போற்றி!
🙏🏻ஓம் முக்கண்களை உடையவரே போற்றி!
🙏🏻ஓம் உறுதி வாய்ந்த தோள் வலிமையரே போற்றி!
🙏🏻ஓம் தண்டம் போன்ற கையரே போற்றி!
🙏🏻ஓம் ராட்சச சம்ஹாரியே போற்றி!
🙏🏻ஓம் விஷ்ணு பக்தரே போற்றி!
🙏🏻ஓம் ருத்ரப் பிரியரே போற்றி!
🙏🏻ஓம் பிங்கள வர்ணக் கண்கள் உடையவரே போற்றி!
🙏🏻ஓம் மஹா வீரரே போற்றி!
🙏🏻ஓம் அசுரர்களின் கொழுப்பகற்றுபவரே போற்றி!
🙏🏻ஓம் தேவர்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
🙏🏻ஓம் மஹா தேஜஸ்வீயே போற்றி!
🙏🏻ஓம் புஜங்களை ஆயுதமாக உடையவரே போற்றி!
🙏🏻ஓம் மஹா ப்ரபஞ்சரே போற்றி!
🙏🏻ஓம் சிவப்ரியரே போற்றி!
🙏🏻ஓம் மஹா பலரே போற்றி!
🙏🏻ஓம் சூரியனுக்கு இணையானவரே போற்றி!
🙏🏻ஓம் அளவில்லா ஆற்றல் உடையவரே போற்றி!
🙏🏻ஓம் மஹா சூரரே போற்றி!
🙏🏻ஓம் ஆத்ம ஸ்வரூபியே போற்றி!
🙏🏻ஓம் தர்மத்தை ஆராதனை செய்பவரே போற்றி!
🙏🏻ஓம் தர்மராஜரே போற்றி!
🙏🏻ஓம் சமத்துவமுடையவரே போற்றி!
🙏🏻ஓம் தண்டதரரே போற்றி!
🙏🏻ஓம் தபஸ்வியே போற்றி!
🙏🏻ஓம் ஜிதேந்த்ரியரே போற்றி!
🙏🏻ஓம் சர்வக்ஞரே போற்றி!
🙏🏻ஓம் புண்ணிய மித்திரரே போற்றி!
🙏🏻ஓம் பிரும்ம அம்சமுடையவரே போற்றி!
🙏🏻ஓம் மிக பயங்கர வாதியே போற்றி!
🙏🏻ஓம் சம்ஹா மூர்த்தியே போற்றி!
🙏🏻ஓம் நம்பினோர்க்கு உபகாரியே போற்றி!
🙏🏻ஓம் பாவிகளின் எமனே போற்றி!
🙏🏻ஓம் விசாலமான கண்கள் உள்ளவரே போற்றி!
🙏🏻ஓம் சுலபமாய் தரிசிக்க முடியாதவரே போற்றி!
🙏🏻ஓம் காலத்தை கண்காணிப்பவரே போற்றி!
🙏🏻ஓம் கோரமானவரே போற்றி!
🙏🏻ஓம் பயங்கரரே போற்றி!
🙏🏻ஓம் திருப்தியுற்றவரே போற்றி!
🙏🏻ஓம் ஸம்ஹாரியே போற்றி!
🙏🏻ஓம் குளிரச் செய்பவரே போற்றி!
🙏🏻ஓம் சந்தோஷத்தைத் தருபவரே போற்றி!
🙏🏻ஓம் அமைதி நிறைந்த ஞானியே போற்றி!

🙏🌀ஓம் வேண்டிய வரம் தரும் #சுதர்ஸனரே போற்றி!!போற்றி!!🌀🙏

Leave a Comment