Viruchiga rasi Guru peyarchi palangal 2024-25
விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 – 2025
பணத்துக்கும் பகட்டான வாழ்க்கைக்கும் மயங்காதவர்களே…!
விருச்சிகம் குருப் பெயர்ச்சிபலன்கள் – 01.05.2024 முதல் 13.04.2025 வரை
குருபகவானின் நட்சத்திர பயணம்:
1.5.2024 முதல் 13.6.2024 வரை உங்களின் ஜீவனாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் சாதித்துக் காட்டுவீர்கள். தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்களெல்லாம் முடிவுக்கு வரும். எதிலும் வெற்றி கிடைக்கும். புது வேலை வாய்ப்புகள் அமையும்.
“அரசால் ஆதாயமடைவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். தள்ளிப்போன கல்யாணம் கூடி வரும். வீடு, மனை வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். முக்கிய பிரமுகர் களை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள்.
13.6.2024 முதல் 19.8.2024 வரை மற்றும் 28.11.2024 முதல் 10.4.2025 வரை உங்களின் பாக்யாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் பணவரவு அதிகரிக்கும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் குறையும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. நிரந்தர வருமானத்துக்கு வழி தேடுவீர்கள். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். புது வாகனம் அமையும்.
20.8.2024 முதல் 27.11.2024 வரை மற்றும் 10.4.2025 முதல் 13.4.2025 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். சொத்து வாங்குவீர்கள். ராஜ தந்திரத்தால் வெற்றியடைவீர்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மூத்த அதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். இந்த குரு மாற்றம் பிரச்சினைகளாலும், சிக்கல் களாலும் முனகிக் கொண்டிருந்த உங்களுக்கு இனி தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன், பணவரவையும் தருவதாக அமையும்.
சமூக அவலங்களைத் தட்டிக் கேட்க தயங்காதவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்து உங்களை பலவிதங்களிலும் பாடாய்படுத்தி, அடிமட்டத்துக்கு தள்ளிய குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை 7-ம் வீட்டுக்குள் வந்தமர்கிறார். உங்களுடைய ராசியை பார்க்க இருப்பதால் கவலை ரேகைகள் ஓடிக் கொண்டிருந்த உங்கள் முகத்தில் இனி மகிழ்ச்சி ரேகைகள் மலரத் தொடங்கும்.
சின்னச் சின்ன பிரச்சினைகளை பெரிதாக்கி அதனால் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். அடுக்கடுக்காக ஏற்பட்ட விபத்துகள், நஷ்டங்கள், அவமானங்கள், பிரச்சினைகள் இவற்றில் இருந்தெல்லாம் விடுபட்டு முன்னேறுவீர்கள். கணவருடன் இருந்து வந்த பகைமை நீங்கும். சந்தேகம் விலகும். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவீர்கள்.
அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்களை எதிர்த்துக் கொண்டிருந்த உறவினர், தோழிகளெல்லாம் அடங்குவார்கள். வளைந்து வந்துப் பேசுவார்கள். வருமானம் உயரும். வசதிகள் கூடும். வீடு, மனை வாங்குவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். தள்ளிப் போன திருமணம் முடியும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மாமனார், மாமியார் உங்கள் வார்த்தையை இனி மறுத்துப் பேச மாட்டார்கள். நாத்தனாரும் உங்கள் முடிவுக்கு கட்டுப்படுவார். மச்சினரும் மரியாதைத் தருவார். மருந்து, மாத்திரை நீங்கி ஆரோக்கியம், அழகு கூடும். குரு 3-ம் வீட்டை பார்ப்பதால் தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். கணவரும் உங்களுடைய புதிய திட்டங் களை ஆதரிப்பார். குரு லாப வீட்டை பார்ப்பதால் மூத்த சகோதர வகையில் ஆதாயம் உண்டு”
“உங்களின் திறமைக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களுடைய பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். சொந்த – பந்தங்களின் அன்புத் தொல்லைகள் குறையும். அக்கம் – பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்தில் சீரமைப்புப் பணிகள மேற்கொள்வீர்கள்.
சின்ன சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். எந்த விஷயமாக இருந்தாலும் நீங்களே நேரடியாக தலையிட்டு முடிப்பது நல்லது. சொத்து வாங்கும்போது முறையான பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் வழக்கறிஞரை வைத்து சரி பார்த்து வாங்குவது நல்லது.
நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. ஷேர் மூலம் பணம் வரும்.
எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். கோயில் திருவிழாக்கள், கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். புதுப் பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வேற்று மாநிலத்தவர்கள், மாற்று மதத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள்.
விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி பரிகாரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் – ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் ஏரையூர் எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள். வசதிகள் பெருகும்.”
குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-25
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்