தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலும் ஒன்றாகும். திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய இத்தலம் பாண்டியர் கால சிவாலயங்களில் பழமையானது. 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. சுவாமி வெண்பட்டும், அம்பாள் சிவப்பு நிற கரைபோட்ட பச்சை நிற பட்டும் உடுத்தி இருந்தனர். தாமரை மலர் மாலை உள்ளிட்ட மாலைகள் சுவாமி, அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன. தேரோட்டத்தை காண காலை 6 மணி முதலே பக்தர்கள் நெல்லை டவுன் ரத வீதிகளில் குவிய தொடங்கினார்கள்.

அருள்மிகு சுவாமி நெல்லையப்பர்
அருள்தரும் காந்திமதி அம்பாள்
திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா – 2017
நாள் : 07.07.2017


காலை 8.45 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் சந்தீப் நந்தூரி, விஜிலா சத்தியானந்த் எம்.பி. ஆகியோர் சுவாமி தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். “ஓம் நமசிவாய, தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி” என்று பக்தர்கள் பக்தி கோ‌ஷங்கள் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

The temple of Arulmigu Swami Nellaiappar and Arultharum Kanthimathi Ambal is situated in the heart of the city. The river Tamirabharani referred to by poets as “Porunai” flows round the town. In the distant past the town was a bamboo forest; hence it was known in those days as “venuvanam”. One of the famous temples in Tamil Nadu steeped in tradition and history and also known for its Musical Pillars and other Brilliant Sculptural Splendours, this is one of the largest temples in South India.

Car festival is the most auspicious festival of this temple that is celebrated during Aani (June- July). Temple has 5 cars for Vinayakar, Murugan, Nellaiappar, Kanthimathi, Sandikaeswarar. Weighing 400 ton and having steel wheels, Nellaiyappar car is the 3rd largest car in Tamil Nadu and is the first car to be driven fully automatically.

Leave a Comment