Magara rasi guru peyarchi palangal 2021-22

மகரம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Magara rasi guru peyarchi palangal 2021-22

மன உறுதி அதிகம் கொண்ட மகர ராசி அன்பர்களே..!!

மகர ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசியில் இருந்து வந்த குரு பகவான் ராசிக்கு 2ம் இடமான கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார். இது மிகவும் சிறப்பான இடம். தனஸ்தானம், வாக்குஸ்தானம், குடும்பஸ்தானம் ஆகியவற்றில் குரு இருப்பது சிறப்பான பலனை தரும். மன உறுதியுடன் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். உங்களின் பேச்சுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கும். குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை இருக்கும். காதல் விவகாரங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. திருமணத்தில் இருந்த தடை நீங்கி திருமணம் கைகூடும். குரு 2ம் இடத்தில் இருந்து 6, 8, 10ம் பாவத்தை பார்ப்பார். 6ம் இடத்தை பார்ப்பதால் பகைமை விலகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். கடன்கள் நிவர்த்தியாகும். 8ம் இடத்தை பார்ப்பதால் ஆயுள் பலம் கூடும். ஆரோக்கியம் மேம்படும். தடைகள் விலகி காரியம் கைகூடும். எப்படி பார்த்தாலும் 2ம் இடத்தில் இருக்கும் குரு நல்லதையே செய்வார் என உறுதியாக நம்பலாம்.

இந்தப் பெயர்ச்சியில் குரு 2 ஆம் வீட்டிற்கு படை எடுக்கின்றார். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், மகிழ்ச்சி கூடும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவர். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவர். சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட, உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். குடும்பத்தினர் நல்ல ஒத்துழைப்பு தருவர். ஏதாவது பிரச்சனை எழுந்தாலும், அதைத், திறமையாக சமாளிக்க முடியும்.

திடீர் ஆதாயங்கள், எதிர்பாராத பணவரவு போன்றவற்றுக்கும் வாய்ப்பு உள்ளது. இந்தப் பெயர்ச்சி காலத்தில் பூர்விக சொத்து கைக்கு வர வாய்ப்பு உள்ளது. வாகனம், வீடு, நிலம் வாங்குவது, விற்பது போன்றவற்றல் நஷ்டம் ஏற்படக்கூடும். நீங்கள் குடியிருக்கும் வீட்டை புதுப்பிக்க வேண்டிவரும். வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உங்கள் வருமானம் குறைவாக இருக்கும் என்பதால் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். குடும்ப வரவு செலவுகளில் கவனமாகக் இருந்தால் பணப் பற்றாக்குறையை எதிர்கொள்ள முடியும். வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகம் ஏற்படும்.

நீங்கள் தேவையற்ற வாக்கு வாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். குடும்ப உறவுகள் சுமுகமாக இருக்கும். வயதில் முதிந்தவர்களிடம் சிறிது கவனமாகப் பழக வேண்டும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். காதல் கைகூடி திருமணத்தில் முடியும். திருமண வரன் அமைய அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புதிதாக திருமணமான தம்பதிகள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நலன் தரும். இந்தப் பெயர்ச்சி காலக் கட்டத்தில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். குடும்ப நபர்கள் ஆதரவாகவும் உதவியாகவும் இருப்பர். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.

வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசு உத்தியோகம் கிடைக்க வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் வளர்ச்சி அடையும். உத்யோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சுமாரான பலன்களே கிட்டும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகம் இருக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, உதிய உயர்வு, விரும்பிய இடமாற்றம் போன்ற வாய்ப்புகள் வரும். பணியில் வேலை பளு இருந்தாலும் நற்பலன்கள் கண்டிப்பாகக் கிடைக்கும். பொது இடங்களில் உங்கள் கௌரவம், புகழ், அதிகாரம் ஆகியவை உயரக்கூடும். உங்கள் செயல்களுக்கு குறுகிய காலத்திலேயே பலன் கிடைக்கக் கூடும்.

பரிகாரம் : சனிக்கிழமையில் அனுமனை விரதம் இருந்து வழிப்படவும்

திருவிடைமருதூருக்கு அருகிலுள்ள திருக்கஞ்சனூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஅக்னீஸ்வரரை வணங்குங்கள். வாரிசு இல்லாத வயதான தம்பதியருக்கு உதவுங்கள். நிம்மதி பெருகும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Leave a Comment