Viruchigam rasi sani peyarchi palangal 2020-23

விருச்சிகம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்(Viruchigam sani peyarchi palangal 2020)

ஏழரை சனியிருந்து விடுபடும் யோகக்காரர்கள்

செவ்வாயின் ராசியில் பிறந்த நீங்கள் செவ்வாயின் குணங்களை பிரதிபலிப்பீர்கள்.. முன் கோபம் இருக்கும். முரட்டுத்தனம் இருக்கும். திடீரென அசுர வேகம் எடுத்து எடுத்த காரியத்தை முடித்து விடுவீர்கள்.. சோம்பேறித்தனம் உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. சோம்பேறிகளை கண்டால் ,சும்மா இருப்பவர்களை கண்டால் இவர்களெல்லாரையும் அரசாங்கம் நாடு கடத்தி விட வேண்டும். என்றெல்லாம் யோசிப்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

காட்டுத் தீயின் குணத்தை ஒத்த மேஷ ராசிக்காரர்கள் எதையும் யோசிக்க மாட்டார்கள் …யோசிக்காமல் ஒரு செயலை செய்துவிட்டு பின்பு வருத்தப்படுவார்கள்… யாரு?? மேஷராசிக்காரர்கள்.. ஆனால் விருச்சிக ராசிக்காரர்கள் கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவர்கள் ஏனென்றால் விருச்சிகம் நீர் ராசி என்பதால் விருச்சிக ராசியினர் கோவப்பட்டு பேசிவிட்டு பின்னர் வருத்தப்படுவார்கள்.. கொஞ்சம் யோசித்து முடிவெடுப்பார்கள் மேஷராசிக்காரர்கள் போல எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இருக்கமாட்டார்கள்..

இவர்களுடைய ராசியின் சின்னம் தேள் என்பதால் இவர்களுக்கு பழிவாங்கும் உணர்வு இருக்கும்.. அதுவும் குறிப்பாக இந்த ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்துவிட்டால் சொல்லவே வேண்டியதில்லை…இவர்களின் நாக்கில் விஷம்தான் உள்ளதோ என்று எண்ணவைக்கும்..தேளுக்கு கொடுக்கில் விஷம்.இவர்களுக்கு நாக்கில் விஷம். பொதுவாக விருச்சிக ராசி கால புருஷனின் எட்டாமிடம் என்பதால் மறைவிடத்தை குறிக்கக்கூடிய ஸ்தானமாகும். எனவே இந்த ராசியில் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் அமரக்கூடாது. குருவின் பார்வை தோசங்களை விலக்கும்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு, பெயர்ச்சி ஆக உள்ளார். இதனடிப்படையில் ஏழரை சனியிலிருந்து விடுபடும் விருச்சிக ராசிக்கும், அதில் இருக்கும் விசாகம், அனுஷம், கேட்டைநட்சத்திரங்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 – 2023 எப்படி இருக்கும் என்பதை விரிவாக பார்ப்போம் 🙏🏼

அந்த வகையில் அடுத்த இரண்டரை ஆண்டு என்ற நீண்ட காலத்திற்கான சனிப் பெயர்ச்சி பலன்களைப் பார்க்கும் போது, நாம் வாழ்க்கையில் வர உள்ள நல்லது, கெட்டதிற்குரிய திட்டமிட்டு செய்து வாழ்வில் சிறப்பாக வாழ முடியும்.

முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி (அடுத்த இரண்டரை ஆண்டுகளில்)

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு, 2020 ஜனவரி 24ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 26ம் தேதியும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.

இங்கு திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப் பெயர்ச்சி பலன்களை விரிவாக பார்ப்போம்…

ஏழரை சனி முடிவு:

கடந்த ஏழரை வருடங்கள் சனி ஆட்டிப்படைத்து, உங்களின் மன நிம்மதி குலைத்து, வேலை, பணி இடங்களில் நிம்மதியை பறித்து, கடன் பிரச்சினை, உடல் ஆரோக்கிய பிரச்னைகளை கொடுத்து பல சிக்கல்களை கொடுத்தவர், தற்போது உங்கள் ராசியை விட்டு விலகும் நேரம், 2020 ஜனவரி 24ஆம் தேதி.

 

இனி சங்கடங்கள் குறைந்து, சகாயங்கள் படிப்படியாக அதிகரிக்கும். உங்களுக்கு நல்ல நட்புகள் கிடைக்கும். அதன் மூலம் பலரின் நன்மை தரக் கூடிய தொடர்புகள் கிடைக்கும். இதனால் உத்தியோகத்தில், தொழிலில் முன்னேற்றமும், விரிவாக்கமும் உண்டாகும்.

தொழில் முன்னேற்றம்

தொழிலில் நல்ல முன்னேற்றமும், சாதனையும் செய்வீர்கள். எங்கெல்லாம் நீங்கள் பணம் கொடுத்து திரும்பி வரவில்லை என கவலையில் இருந்தீர்களோ. அவர்களிடமிருந்து பணம் திரும்பி கிடைக்கக் கூடிய, திருப்பி பெறக்கூடிய நல்ல காலம்.

 

சகோதர, சகோதரிகள் இதுவரை உங்களுக்கு உதவாமல் இருந்திருந்தாலும், தற்போது தேடி வந்து உதவி செய்ய தேடி வரக் கூடிய காலமாக அமையும். நட்புறவு நல்ல படியாக அமையும்.

 

உங்களின் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தி அடையும். அதற்கான குடும்ப, உறவினர், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். இதெல்லாம் விருச்சிக ராசிக்கு அடிப்படையாக நடக்கக் கூடிய பலனாக இருக்கும்.

 

விருச்சிக ராசியிலிருந்து 3வது, 4வது இடத்திற்கு அதிபதியான சனி, சொந்த வீட்டில் ஆட்சி பெற்று இருப்பதால் பயணங்கள் வெற்றியை தரும்

 

7ஆம் பார்வை பலன்

சனியின் 7ஆம் பாரவையாக, பாக்கிய வீடான கடக ராசியின் மீது விழுகிறது. சந்திரனின் வீடான கடகத்தில் நேராக விழுவதால் பாக்கியங்கள், வரவுகள், தடைகள் விலக்கி கொடுப்பார்.

திருமண பாக்கியங்கள் கொடுப்பார்.திருமண உறவில் இருந்த கசப்புகள், பிரிவுகள், வெறுப்புக்கள் விலகி, குடும்ப பாவத்திலிருந்து சனி விலகுவதால், குடும்ப பிரச்னைகள் தீர ஒரு வழியை செய்துவிடுவார்.

பிரிவில் இருந்தவர்கள் பேச்சு வார்த்தைகள் மூலம் மனம் மாறி, மீண்டும் சேரும் பாக்கியம் பெறுவர். நிம்மதியை தருவார்.

இதுவரை உடல் உபாதைகள், விபத்துக்கள் ஏற்பட்டிருந்திருக்கலாம். குறிப்பாக காலில் பிரச்னை, விபத்துக்கள் இருந்திருக்கலாம். அதனால் ஏற்பட்ட கஷ்டங்கள் விலகும். முழு உடல் நலத்தைப் பெறுவீர்கள்.

இதுவரை இருந்த தொல்லைகள், கஷ்டங்கள் விலகி நிம்மதி கொடுக்கும். அதிலும் குறிப்பாக 30 வயதிற்கு மேல் உள்ள இளைஞர்களுக்கு சரியான வேலை இல்லமால் கஷ்டப்பட்டவர்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும்.

​தன வரவு

இதுவரை தன வரவில் இருந்த தடை, பொருளாதார தடைகள் நீங்கி, பல்வேறு இடங்களிலிருந்து தன வரவு உண்டாகும். தொழிலில் பல இடங்களில் சிக்கி இருந்த பணம் திரும்ப வரும்.

விருச்சிகத்திலிருந்து சனி விலகுவதால் தொழில், ஆலோசனை துறை, சீருடை பணியாளர்களுக்கு பல விஷயங்களில் தடை, தோல்விகள் நீங்கி அனைத்திலும் நன்மையும், சுகமும் உண்டாகும் காலம் தான் இந்த 2020.

சனி விருச்சிகத்திற்கு அதிக நன்மைகளை கொடுக்கக் கூடிய இடத்திற்கு செல்லக் கூடிய காலமாக இந்த சனிப் பெயர்ச்சி அமைகிறது.

3ஆம் பார்வை பலன்

சனியின் 3ஆம் பார்வையாக மீன ராசியில் விழுவதால், பூர்வ ஜென்மத்தில் இருக்கும் புண்ணியங்கள், அப்போது விதைத்த நல் விதைகளுக்கு உண்டான அறுவடை செய்யக் கூடிய காலம். இதனால் நல்ல மனிதர்கள் மூலமாக நல்ல ஆலோசனை மற்றும் நன்மைகள் தரும்.

பிரயாணங்கள் வெற்றியை தரும். பரம்பரை சொத்துக்கள் சுமூகமாக கிடைக்கும். இதுவரை வராத பலன் தேடி வரும். தொழிலில் முன்னேற்றம் வேண்டுமென்றால் அதற்கான வழிகள் கொடுத்து லாபம் கிடைக்கும்.

சனியின் 7ஆம் பார்வை பலன்

7ஆம் பார்வையாக சனி துலாம் ராசியைப் பார்ப்பதால் பிரயாணங்கள் சற்று அதிகமாக உண்டாகும். அதனால் அலைச்சல்கள் அதிகரிக்கும். இருப்பினும் அதனால் பல வகையில் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒரு அலைச்சலாக இருக்கும்.

 

பொதுவாக காலபுருஷ தத்துவத்தில் 8வதாக அமைந்த விருச்சிக ராசி பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கக் கூடியது. இருப்பினும் இந்த சனிப் பெயர்ச்சியால் பலவேறு நன்மைகளை அடையக் கூடிய ராசியாக விருச்சிக ராசி அமைந்துள்ளது.

இறை நம்பிக்கையுடன் வரும் காலத்தை சந்தியுங்கள், நிச்சயம் வெற்றி தான்.

இப்பொழுது பார்த்த அனைத்து பலன்களும் பொதுப் பலன்கள் தான், உங்கள் லக்கினம் எந்த ராசியோ அதற்கான பலன்களையும் பார்த்து தெரிந்துகொள்வது அவசியம்.

துலாம் அர்த்தாஷ்டம சனிப் பெயர்ச்சி பலன்கள் – சித்திரை, சுவாதி, விசாகம் நட்சத்திர பலன்கள்

விசாகம் நட்சத்திர பலன்கள்

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபம் தேடி வரும். உத்தியோகத்தில் அலுவலக பணிகள் சிரமமின்றி செய்துமுடிப்பீர்கள். பயணங்கள் செல்ல வேண்டிய நிலை இருக்கும்.

கொடுத்த வேலையை, சரியான நேரத்தில் முடிக்கும் திறன் படைத்தவர்கள். இந்த சனிப்பெயர்ச்சியால் அனைத்திலும் லாபம் கிடைக்கும். நோய்கள் நீங்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் நன்மதிப்பை பெறுவீர்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்துசென்றவர்கள் கூட உங்களிடம் திரும்பி வருவார்கள்.

கணவன் – மனைவி இடையே நல்ல ஒற்றுமை இருக்கும். குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கி தருவீர்கள். கல்வி செலவு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு அவர்களின் சக நபர்களால் தேவையற்ற பிரச்சினைகள் வரலாம்.

மொத்தத்தில் விசாக நட்சத்திரத்தினருக்கு சவாலான விஷயங்கள் கொடுத்து அதில் வெற்றி கிடைப்பதற்கான காலமாக அமையும்.

அனுஷம் நட்சத்திர பலன்கள்

எந்த வேலையை அதீத கவனம், சிரத்தையுடன் செய்யும் அனுஷ நடச்த்தினருக்கு, இந்த சனிப்பெயர்ச்சி காலம் காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும், தன்னம்பிக்கை உண்டாகும்.

பண வரவு அதிகரிக்கும், இடமாற்றம், பயணங்கள், அலைச்சல்கள் ஏற்படக் கூடும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான வேலைகள் நன்றாக முடியும்.

உத்தியோகஸ்தர்கள் கட்டளையிடக் கூடிய நல்ல நிலைக்கு செல்வீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை இருக்கும். யாரிடமும் கோபமாகவும், விரோதமாகவும் பேசாமல் இருப்பதே நல்லது. சிலர் பிரிந்து ஒன்று சேரும்.

பெண்கள் எல்லா வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்வீர்கள். எதிர்பாராத திடீர் செலவு, நிகழ்வுகள் உண்டாகலாம். மாணவர்கள் கஷ்டமான பாடங்களையும் நன்றாக படித்து வெற்றி பெற்றுவிடுவீர்கள்.

​கேட்டை நட்சத்திர பலன்

கேட்டை நட்சத்திர பலன்கள்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோட்டை ஆள்வார்கள் என்பார்கள். சோம்பல் இல்லாமல் எறும்பு போன்று சுறுசுறுப்புடன் செயல்படக் கூடியவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் உல்லாச பயணங்கள் செல்வீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தாலும் அதை சமாளித்து வெற்றி பெற்றுவிடுவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்ற வாய்ப்பு உண்டு. மேலதிகாரிகள், சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். மன வறுத்தத்துடன் சென்ற உறவினர்கள், வருத்தம் நீங்கி உங்களை வந்து சேர்வார்கள்.

பெண்கள் அதிக பயணம் செல்ல வேண்டியிருக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் பெரிய முன்னேற்றம் இருக்கும்.

பரிகாரம்:

வலம்புரி சங்கு பூஜை வைத்து பூஜை செய்வது நல்லது. சதுர்த்தி தினங்களில் சங்கடங்களைத் தீர்க்கக்கூடிய கணபதியை வழிபட்டு வரவும்.

பிரதோஷ நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் வழிபட்டு வர நீங்கள் விரும்பிய முன்னேற்றத்தைப் பெறலாம்.

மேஷம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | ரிஷபம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மிதுனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கடகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | சிம்மம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கன்னி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | துலாம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | விருச்சிகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | தனுசு சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மகரம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | கும்பம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | மீனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023

Leave a Comment