Meena rasi guru peyarchi palangal 2020-21

மீன ராசி பலன்கள் – 95/100. மீனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Meena rasi guru peyarchi palangal 2020-21

மிகப்பெரிய பிரச்சனைகளையும்… மிருதுவாக கையாளக்கூடிய மீன ராசி அன்பர்களே..!!

நடைபெற இருக்கின்ற குருப்பெயர்ச்சியில் குருவானவர் ராசிக்கு பத்தாமிடத்தில் இருந்து லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். குரு தான் நின்ற இடத்திலிருந்து ஐந்தாம் பார்வையாக மீன ராசிக்கு மூன்றாம் இடமான தைரிய ஸ்தானத்தையும், தன்னுடைய ஏழாம் பார்வையாக ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், தன்னுடைய ஒன்பதாம் பார்வையாக ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.

வாழ்வில் எதிலும் நிலையற்ற தன்மை உண்டாகும். ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை ஒரே சமயத்தில் செய்து முடிப்பீர்கள். விமர்சனங்கள் பல இருந்தாலும் அவை அனைத்தையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும். தாயின் உடல்நிலை சீராகும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கப் பெறுவீர்கள். இளைய உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

 

உத்தியோகஸ்தர்களுக்கு :

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மனைவி வழியில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் தகுந்த நேரத்தில் கிடைக்கும். சக ஊழியர்களிடத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகம் நிமிர்த்தமாக வெளியூர் பயணங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

 

பெண்களுக்கு :

மனம் விரும்பிய மணவாழ்க்கையை பெற்றோர் சம்மதத்துடன் மணம் முடிப்பீர்கள். திருமணமான தம்பதிகளுக்கு குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து மோதல்கள் குறையும். தடைபட்டிருந்த வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

 

கலைஞர்களுக்கு :

ஆன்மிக பெரியோர்களின் வழிகாட்டுதல் சிறப்பான முன்னேற்றத்தை தரும். தங்களது திறமையின் மூலம் ஊரறிய புகழ் பெறுவீர்கள். சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். செய்யும் புதிய முயற்சிகளுக்கு ஏற்ப எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.

 

அரசியல்வாதிகளுக்கு :

வெளிநாட்டில் இருந்து வரும் தகவல்கள் மனமகிழ்ச்சியை தரக்கூடியதாக அமையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். எதையும் எதிர்த்து சமாளிக்கும் மனப்பக்குவத்துடன் செயல்படுவதன் மூலம் வெற்றியை அடைய இயலும்.

 

மாணவர்களுக்கு :

படிப்பில் அதிக கவனம் தேவை. பாடங்கள் படிப்பதை தள்ளிப்போடாமல், அவ்வப்போது படிப்பது சிறப்பு. ஆசிரியர் மற்றும் பெற்றோரின் சொல் கேட்டு பணிவுடன் நடந்து கொள்வது மேன்மையை அளிக்கும். விவசாயம் தொடர்பான கருவிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

 

வியாபாரிகளுக்கு :

வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. தனிப்பட்ட ரீதியாகவோ, கூட்டாளிகளின் வற்புறுத்தலுக்காகவோ, முன் யோசனையில்லாமல் எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பது நன்று. பணியாட்களால் சாதகமான சூழல் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்பட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

 

விவசாயிகளுக்கு :

நீர் பாசன நிலை நன்றாக இருக்கும். தாயின் ஆரோக்கியம் சீரடையும். குடும்ப உறுப்பினர்களிடம் ஆதரவான சந்தர்ப்ப சூழ்நிலை உண்டாகும். இதுவரை இருந்துவந்த நில தகராறுகள் சரியாகும். பூர்வீக சொத்துக்களை புதுப்பிப்பீர்கள்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களைப் பிரபலமாக்குவதுடன், பண வசதி மற்றும் சொத்து சேர்க்கையைத் தருவதாக அமையும்.

லாப குரு குரு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். வேலை தொழிலில் இருந்த நல்ல இட மாற்றங்கள் நிகழும். சம்பள உயர்வு ஏற்படும்.தொழில் ரீதியான லாபம் பெருகும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் வசிப்பவருக்கு முன்னேற்றம் ஏற்படும். சொந்த ஊரில் வசிப்பவர்களுக்கு முன்னேற்றம் இருந்தாலும் விரையச் செலவுகள் ஏற்படும். குரு பெயர்ச்சியின் முற்பகுதியிலும் இறுதியிலும் திருமணம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்

வழிபாடு:

வியாழக்கிழமை தோறும் நவகிரகங்களில் இருக்கக்கூடிய பிரகஸ்பதியான தேவகுருவிற்கு மஞ்சள் நிற மலர்களை சூட்டி வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

பழநியில் கோயில்கொண்டிருக்கும் அருள்மிகு தண்டாயுதபாணியின் ராஜ அலங்காரத் திருக்கோலத்தை ஒருமுறை தரிசித்து வாருங்கள். முருகனின் அருளால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Leave a Comment