மண் விளக்கு, வெண்கல விளக்கு, வெள்ளி விளக்கு, பஞ்சலோக விளக்கு, எவர்சில்வர் விளக்கு (சனிக்கிழமை மட்டும் தோஷ சாந்தி செய்பவர்கள் இதை ஏற்றலாம்) என, எந்த விளக்காக இருந்தாலும், அதில் காமாட்சி அம்மன் அல்லது அஷ்டலக்ஷ்மிகளின் உருவம் இருப்பது நல்லது. Deepam types

என்ன எண்ணெய்?!

விளக்கேற்றப் பயன்படுத்தும் ஒவ்வொரு வகை எண்ணெய்க்கும், ஒவ்வொரு பலன் உண்டு. நெய் விளக்கு, மகாலக்ஷ்மி கடாக்ஷம் தந்து செல்வத்தைப் பெருக்கும். எள் எண்ணெயில் (நல்லெண்ணெய்) தீபமேற்றும்போது, தரித்திரம் நீங்கி, மரண சனி, பொங்கு சனியாக மாறி வளம் தருவார். தேங்காய் எண்ணெய், கேது பகவானுக்கு ஏற்றது. கேது தோஷம், கேது திசை நடப்பவர்கள் தொடர்ந்து இந்த எண்ணெயில் தீபம் ஏற்றுவது நல்லது. விளக்கெண்ணெய், அம்ம னுக்கு உகந்தது. இதில் விளக்கு ஏற்றும்போது, தைரியம் மற்றும் செல்வம் பெருகும், உறவுகள் பலப் படும், புகழ் உண்டாகும். இலுப்பை எண்ணெயைக் குல தெய்வக் கோயிலில் விளக்கேற்றப் பயன் படுத்த, குலம் செழிக்கும்.

விளக்கெண்ணெய், எள் எண்ணெய், நெய் இவற்றால் அனைத்து கடவுள்களுக்கும் தீபம் ஏற்றலாம். வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், எள் எண்ணெய், நெய் இவற்றை ஒன்று சேர்த்து, மந்திர ஸித்தி வேண்டி துர்க்கை, காளி போன்ற தெய்வங்களுக்கு விளக்கு ஏற்றலாம். கடலை எண்ணெய், விளக்கேற்ற உகந்தது அல்ல.

Deepam Types

திரிகளும் தருமே பலன்கள்!

விளக்கேற்றுவதற்கான திரிகளிலும் பல வகை உண்டு, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. சுத்தமான பன்னீரில் பஞ்சை நனைத்து, திரியாக்கி, நிழலில் காயவைத்து, விளக்கேற்றப் பயன்படுத்தலாம். இதனால் மங்கலம் வளரும். குலதெய்வ சாபம் உள்ளவர்கள், தங்கள் குல தெய்வத்துக்கு வாழைத்தண்டு திரியில் தொடர்ந்து தீபம் ஏற்றினால், சாபத்திலிருந்து விடுபட லாம். திருமணத் தடை உள்ளவர்கள், வீட்டில் எந்நேரமும் சண்டை சச்சரவுகளுடன் வாழ்க்கை நடத்துபவர்கள் சிவப்பு நூல் திரியினால் விளக்கேற்றலாம். மஞ்சள் நூல் திரியில் விளக்கேற்ற, அம்மன் அருள் கிடைக்கும். வெள்ளை வஸ்திரத் துண்டுகளை பன்னீரில் நனைத்து, திரியாகத் திரித்து, உலர்த்தி, பின் அந்தத் திரியில் விளக்கேற்றி வர, தெய்வக் குற்றங்கள் நீங்கும்.

வீட்டில் துஷ்ட ஆவிகள் இருப்பதாக நினைத்தால், வெள்ளை எருக்கன் திரி ஏற்றிட, துஷ்ட சக்திகள் நீங்கி, மங்கலம் உண்டாகும். தாமரைத் தண்டு திரி, மகாலக்ஷ்மியின் அருள் கிடைக்கச் செய்து, வாழ்க்கையில் மங்கலம் உண்டாக்கும்.

உங்கள் விளக்கில் எத்தனை முகங்கள்?

விளக்கில் எத்தனை முகங்களுக்கு தீபமேற்றுகிறோமோ, அதனைப் பொறுத்து பலனைப் பெறலாம். ஒருமுக தீபமேற்றினால், மன சஞ்சலம் நீங்கும், புகழ் உண்டாகும். இருமுக தீபத்தினால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும், வாக்கு வன்மை வளப்படும். மூன்றுமுக தீபம், ஊழ்வினை தோஷத்தை நீக்கும், புத்திரர்களால் மேன்மை உண்டாக்கும். நான்குமுக தீபமேற்றிட, வீடு வாகன வசதிகள் அமையும், விவசாயிகளுக்கு கால்நடை விருத்திஅடையும். ஐந்துமுக தீபம் அனைத்து செல்வங்களையும் வருவிக்கும், புத்திர சோகத்தை நீக்கும்.

மொத்தத்தில் ஐந்துமுக தீபம் ஏற்றுவது மிகச் சிறந்தது.

எந்த திசையில் ஏற்றலாம், எங்கு வைக்கலாம்?

தெற்கு திசை தவிர்த்து மற்ற எந்த திசையிலும் தீபமுகம் இருக்கலாம். தீபத்தை தரையில் வைக்கக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு என்றால், ஒரு பித்தளை தட்டு அல்லது தாமிரம், பஞ்சலோகத் தட்டில் அரிசி, துவரை, உளுந்து, மஞ்சள்கிழங்கு வைத்து, அதன் மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும். குத்துவிளக்கு என்றால், ஒரு சிறிய வாழை இலையில் அரிசி வைத்து, அதன்மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும்.

தீபஒளி மலரட்டும்… பெருவளம் பெருகட்டும்!

Leave a Comment