Thanusu rasi guru peyarchi palangal 2017-18
தனுசு இராசி அன்பர்களே…..
உங்கள் இராசிக்கு குரு பகவான் 11-ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். 11-ம் இடத்திலிருந்து உங்கள் இராசிக்கு 3, 5, 7-ம் இடங்களை பார்வை செய்வதால் சில காரியங்கள் வெற்றி பெறும். 12, 5-க்குரிய செவ்வாய் சாரத்தில் அமர்கிறார். எதிர்பாரா தனலாபம் கிடைக்கும். திருமணம், குழந்தைபேறு உண்டாகும். கூட்டு தொழில் நன்மை அளிக்கும். தொடங்கப்பட்டு பாதியில் நின்ற கட்டடத்தை கட்டி முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். அலைச்சல் இனி இல்லை. செலவுகள் கட்டுப்படும். நண்பர்கள் உதவியால் குடும்பத்தில் நிலவிய பிரச்னைகள் தீரும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். உறவினர் வருகை, கேளிக்கை ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். நோய், நொடிகள் அகலும். நீங்கள் உஷாராக இருக்க வேண்டியது பிரயாணங்களில்தான். அதுபோல, பொருட்கள் திருடு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் உடல்நலனிலும், பெற்றோர் உடல்நலனிலும் கவனம் தேவை. குரு பகவான், செவ்வாய் சாரத்தில் அமர்வதால், விரயங்கள் அதிகமாக ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். பிறருக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதையும் தவிர்க்கவும். பொதுவாக, இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் உங்களுக்கு நன்மைகள் தருவார். நல்வாழ்த்துக்கள்.
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் |
சுயநலம் இன்றி பிரதிபலன் எதிர்பாராமல் பிறருக்கு உதவி செய்யக்கூடிய ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே!
வாக்கியப்படி 2-9-2017 முதல் 4-10-2018 வரை உங்கள் ராசியாதிபதி குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இது அற்புதமான அமைப்பாகும். இதனால் உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். சிலருக்கு சிறப்பான குழந்தைப் பாக்கியமும் கிட்டும். வீடு, மனை வாங்கும் யோகம் யாவும் சிறப்பாக அமையும். பூர்வீக சொத்துவழியில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும்.
வாக்கியப்படி 19-12-2017 முதல் சனி ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதாலும், 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும் கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், செரிமானக் கோளாறு, கைகால், மூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். உற்றார்-உறவினர்களின் ஆதரவைப்பெற சில நேரங்களில் அவர்களை மிகவும் அனுசரித்துச்செல்ல வேண்டி இருக்கும். பணவரவுகள் சரளமாக இருப்பதால் கடன்கள் குறையும். கொடுக்கல்-வாங்கலில் லாபம் அமையும். பெரிய தொகையைப் பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தையும் அனுகூலத்தையும் அடையமுடியும். கூட்டாளிகளையும் தொழிலாளர் களையும் சற்று அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் சில ஆதாயங்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும். சில நேரங்களில் உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். அரசியல்வாதிகளுக்கு சமுதாயத்தில் பெயர், புகழ் யாவும் உயர்வடையும். மேடைப் பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டி இருக்கும். மாணவர்கள் கல்வியில் முழுஈடுபாட்டுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும்.
உடல் ஆரோக்கியம்
உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். கடந்தகாலங்களில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று மேலும் மனநிம்மதி ஏற்படும். தொலை தூரப்பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும்.
குடும்பம், பொருளாதாரநிலை
உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். உற்றார்-உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு தொலைதூரங்களிலிருந்தும் நல்ல செய்திகள் வரும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் அனைத்தும் குறைந்து சேமிப்பு பெருகும். சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் யோகமும் புதிய நவீன பொருட்சேர்க்கைகளும் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளால் சாதகமான பலன்கள் உண்டாகும்.
கொடுக்கல்–வாங்கல்
கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் துறைகளில் உள்ளவர்களுக்கு நல்ல லாபமும் பெரிய மனிதர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக நடைபெறும். பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தமுடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி அனைவரிடமும் நல்ல பெயரை சம்பாதிக்கமுடியும். வழக்குகள் பைசலாகும்.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குக் கடந்த காலங்களில் இருந்து வந்த தடைகள், போட்டிகள், முன்னேற்றமற்ற நிலை போன்ற யாவும் விலகி நல்ல மேன்மை உண்டாகும். லாபத்தையும் பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கும் கூட்டாளிகளின் ஆதரவுகள் சிறப்பாக அமையும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் எதிர்பார்த்த அனுகூலப்பலன்கள் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நல்ல லாபம் அடைவீர்கள்.
உத்தியோகம்
தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு, சம்பள பாக்கிகள் யாவும் உத்தியோகஸ்தர்களுக்குக் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தக்கசமயத்தில் அமைந்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புக்கள் மேலும் உங்களின் உயர்வுகளுக்கு சாதகமாக அமையும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள். வேலைப்பளு குறையும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். கணவர் மற்றும் புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பொருளாதாரநிலை சிறப்பாக அமைவதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். கடன்கள் அனைத்தும் குறையும். புதிய பொருட்சேர்க்கைகளும் உண்டாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் கனவுகளும் நனவாகும். உத்தியோகம் செய்பவர்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.
அரசியல்
உங்களின் பெயர், புகழ் யாவும் உயரக்கூடிய காலமாகும். எதிர்பார்த்த கௌரவப் பதவிகள்கூட கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் தொண்டர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். மறைமுக வருவாய்கள் அதிகரிக்கும்.
விவசாயிகள்
விளைச்சல் நன்றாக இருக்கும். நவீன முறைகளைக் கையாண்டு பயிர் விளைச்சலைப் பெருக்குவீர்கள். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். நீர் வரத்து தாராளமாக இருக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். அரசுவழியில் மானிய உதவிகள் கிட்டும். சுபகாரியங்கள் யாவும் கைகூடும்.
கலைஞர்கள்
நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பட வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்துவீர்கள். கலை சம்பந்தப்பட்ட துறைகளிலும் நல்ல உயர்வுகளைப் பெறமுடியும். ரசிகர்களின் பேராதரவைப் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பணப்பாக்கிகளும் திருப்திகரமாக கைக்கு வந்து சேரும்.
மாணவ–மாணவியர்
கல்வியில் நல்ல மேன்மையான நிலைகள் உண்டாகும். கல்விக்காக எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் வெற்றி கிட்டும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப்பெறும். நல்ல நண்பர்களால் சாதகமான பலனை அடைவீர்கள். கல்வி மட்டுமின்றி விளையாட்டுப்போட்டி, கவிதை, கட்டுரைப் போட்டி போன்றவற்றில் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.
குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 2-9-2017 முதல் 5-10-2017 வரை
உங்கள் ராசியாதிபதி குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்கும் இக்காலங்கள் எல்லாவகைளிலும் ஏற்றங்களைப் பெறக்கூடிய காலமாக அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் இக்காலங்களில் ஏற்றமிகு பலன்களை அடைவீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலிலும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் அதனால் பொருளாதார உயர்வுகளும் உண்டாகும். ஆன்மிக,தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அமையும். உற்றார்- உறவினர்களின் வருகை கடந்தகால பிரச்சினைகளை மறந்து ஒற்றுமையை நிலைநாட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கமுடியும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். சனிப்பரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.
குரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 6-10-2017 முதல் 7-12-2017 வரை
குரு பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். கணவன்-மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வீடு, மனை, வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகமும், அசையா சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். புதிய பொருட்சேர்க்கையும், ஆடை ஆபரணமும் சேரும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். உடல்நலத்தில் சற்று கவனம் எடுத்துக்கொண்டால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க முடியும். புதிய தொழில் தொடங்கவும், பெரிய முதலீடுகளில் விரிவு செய்யவும் ஏதுவான காலமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திருப்தியுடன் செயல்படுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கப்பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெறுவதால் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ச்சியடைவார்கள். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் பெருகும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக அமையும். சர்ப்ப சாந்தி செய்வது நல்லது.
குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 8-12-2017 முதல் 13-2-2018 வரை
குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 11-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பணம் பலவழிகளில் தேடிவந்து சேரும். மனதில் தைரியமும் துணிவும் உண்டாகி எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். வாக்கியப்படி 19-12-2017 முதல் சனி ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்த மருத்துவச்செலவுகள் குறையும். உற்றார்- உறவினர்களிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். கணவன்-மனைவி உறவில் கருத்து வேறுபாடு ஏற்படலாம் என்பதால் அனுசரித்துச்செல்வது நல்லது. திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். புத்திரவழியில் பூரிப்பும், மகிழ்ச்சியும் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். கடன்கள் பைசலாகும். கூட்டுத்தொழிலில் அபரிதமான லாபத்தை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்று பணியில் திருப்தியானநிலை ஏற்படும். அரசியல்வாதிகளின் செல்வம், செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடிவரும். மாணவர்கள் திறம்பட செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலைக் குறைத்துக்கொள்ள முடியும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.
குரு பகவான் அதிசாரமாக விருச்சிக ராசியில் 14-2-2018 முதல் 6-3-2018 வரை
குரு பகவான் இக்காலங்களில் அதிசாரமாக விரய ஸங்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக்குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்றுத் தள்ளிவைப்பது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும். பணம் கொடுக்கல் -வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் நற்பலனை அடையமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது, கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்துச்செல்வது போன்றவற்றால் அபிவிருத்தி பெருகும். எதிர்பாராத திடீர்தனவரவுகள் கிடைக்கப்பெறுவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலையே நிலவும். விளையாட்டுப்போட்டிகளில் ஈடுபடும்போது கவனமுடன் இருப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
குரு பகவான் வக்ரகதியில் 7-3-2018 முதல் 3-7-2018 வரை
குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், சனி ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதாலும் இக்காலங்களில் நன்மை, தீமை கலந்த பலன்களே உண்டாகும். உடல்நிலையில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணம் உண்டாகும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்கடங்கி இருப்பதால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். கடன் பிரச்சினைகளும் அதிகளவில் இருக்காது. திருமண சுபகாரிய முயற்சிகளில் பல இடையூறுகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டுத் தொழிலில் சற்று கவனம் தேவை. பயணங்களால் அனுகூலமற்ற பலன்கள் ஏற்பட்டாலும் சிலரின் நட்புகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகளும் இடமாற்றங்களும் தாமதமாகத்தான் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முழுஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி உண்டாகும். விநாயகர், அம்மன் வழிபாடுகள் நன்மையைத்தரும்.
குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 4-7-2018 முதல் 4-10-2018 வரை
குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 11-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுகள் திடீரென்று கிடைக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துகளாலும் லாபம் அமையும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார்-உறவினர்களால் சாதகமான பலன்களும் மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கக்கூடிய யோகமும் அதற்கு அரசுவழியில் உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் அபரிதமான லாபத்தைப் பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலிலும் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தமுடியும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பாராத உயர்வுகளைப் பெறுவார்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளுவும் குறையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நற்பலனைத்தரும். ராகு-கேதுவுக்குப் பரிகாரம் செய்வது நல்லது.
பரிகாரம்
தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிக்குத் தொடர்ந்து பரிகாரம் செய்வது, ஊனமுற்ற ஏழைஎளியவர் களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது மிகவும் நல்லது.
வியாழக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம். ஜென்ம ராசிக்கு 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகர், துர்க்கை வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 1, 2, 3, 9.
நிறம்: மஞ்சள், பச்சை
கிழமை: வியாழன், திங்கள்
கல்: புஷ்ப ராகம்
திசை: வடகிழக்கு
தெய்வம்: தட்சிணா மூர்த்தி