கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி | Bhairava Ashtami
கடன்கள் தீர பைரவர் வழிபாடு பைரவர் அவதாரம் கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த நாளில் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது கடன் தீர்த்து செல்வ வளம் தரும் சொர்ண ஆகார்ஷண பைரவர்
எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். கடன் பிரச்சினை தீர இவரை சரணடையலாம்.
ஓம் பைரவா போற்றி ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி வேணும் வைரவமூர்த்தி துணை.
பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை நடக்கும்.
ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாம் இடம் என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானம். ருணம் என்றால் கடன். ரோகம் என்றால் வியாதி. சத்ரு என்றால் எதிரி. இந்த ஆறாம் இடமும், ஆறாம் அதிபதியும், அவருடன் சேர்ந்த கிரகங்களும், பார்க்கும் கிரகங்களும், ஒருவருக்கு கடன் தொல்லைகளை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.பைரவர் வழிபாடு கால பைரவருக்கு பிரதி மாதம் பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி விசேஷமான நாளாகும். இந்த விசேஷமான நாளில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபடுவதால் நினைத்த காரியம் வெற்றி பெரும். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளிப்புஷ்பத்தால் பூஜித்து வந்தால் நல்ல குழந்தைச் செல்வம் கிடைக்கும். பைரவரை வழிபட்டால் தொழிலில் லாபம், பதவி உயர்வு மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றமும் கிடைக்கும்.
பைரவர் அவதாரம் கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த நாளில் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது. சித்திரை மாதம் பரணி, ஐப்பசி மாத பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.
இழந்த பொருள் கிடைக்கும் ஞாயிற்றுக்கிழமை பைரவரை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். கடன் தொல்லைகள் தீரும். மேலும் பைரவருக்கு புனுகு சாத்தி, முந்திரி பருப்பு மாலை சாற்றி வழிபட்டால் நலன் பெருகும். திங்கட்கிழமை அன்று வில்வம் கொண்டு பைரவரை அர்ச்சித்தால் சிவனருள் கிடைக்கும். செவ்வாய்க்கிழமை அன்று மாலை நேரத்தில் மிளகு தீபம் ஏற்றி வந்தால் நாம் இழந்த பொருளைத் திரும்பக் கிடைக்கும்படி அருள் புரிவார் பைரவர்.
மனநிம்மதி உண்டாகும் பூமி லாபம் கிடைக்க பிரதி புதன்கிழமை பைரவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பைரவருக்கு பிரதி வியாழக்கிழமை அன்று மனமார விளக்கேற்றி வழிபட்டால் ஏவல், பில்லி மற்றும் சூனியம் விலகி மன நிம்மதி கிடைக்கும். வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரங்களில் வில்வ இலைகள் கொண்டு பைரவருக்கு அர்ச்சனை செய்து வந்தால் செல்வம் பெருகும்.சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
திருமண தடை தீரும் சனி பகவானுடைய குரு பைரவர். ஆகவே சனிக்கிழமைகளில் இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச்சனி ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து விடுபட்டு நன்மைகளை அடையலாம். இவ்வாறு வாரத்தின் ஏழு நாட்களும் நாம் செய்யும் கால பைரவரின் வழிபாடு மற்றும் பைரவ அஷ்டக பாராயணம் நமக்கு நினைத்த காரியங்களை நிறைவேற்றி திருமணத் தடைகளை நீக்கி சகல நன்மைகளைத் தரும்.
செவ்வாய்கிழமை கடன் தீர்க்கலாம் கடன் தீர பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. அஸ்வினி, அல்லது அனுஷம் நட்சத்திர நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும். செவ்வாய்க்கிழமையன்று, செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தருவதால் கடன் பிரச்னை நீங்கும். ஞாயிற்றுக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியன்றும் சனிக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியிலும் குளிகன் நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சீக்கிரம் அடைபடும்.
ஓம் பைரவா போற்றி ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி வேணும் வைரவமூர்த்தி துணை
கஷ்டங்ளை போக்கும் பைரவ காயத்ரி மந்திரம்
ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்…
இந்த காயத்ரியை அஷ்டமி வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.
ஸ்லோகம் :
ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத் !
பைரவரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரியுமா?