Bhairavar / பைரவரை வழிபட்டால் நமக்கு கிடைக்கும் மிக மிக அற்புதமான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்…

⭐ பைரவர், சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது.

⭐ எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார்.

Bhairavar

 

*சகோதர ஒற்றுமை மேம்பட :*

⭐ செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மாலை அணிவித்து புனுகு பூசி துவரம் பருப்பு பொடி கலந்த அன்னம் செம்மாதுளம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் சகோதர ஒற்றுமை மேம்படும்.

*வெற்றி கிடைக்க :*

⭐ செவ்வாய்க்கிழமை பைரவருக்கு சிவப்பு குங்குமம் கலந்த நீரால் அபிஷேகம் செய்து எலுமிச்சம் பழ மாலை அணிவித்து புனுகு பூசி எலுமிச்சை பழத்தில் நெய் தீபமிட்டு அர்ச்சனை செய்து வந்தால் எதிர்ப்புகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

*கல்வியில் சிறந்து விளங்க :*

⭐ புதன்கிழமை பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை அணிவித்து புனுகு பூசி பாசிப்பருப்பு பொடி கலந்த அன்னம், பாசிப்பருப்பு பாயாசம் போன்றவற்றை படைத்து அர்ச்சனை செய்து வந்தால் கல்வியில் ஏற்படும் தடைகள் விலகி சிறந்து விளங்கலாம்.

*திருமணத் தடை அகல :*

⭐ வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு சந்தன காப்பு செய்து புனுகுபூசி தாமரை மலர் அணிவித்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் அமையும்.

*நாகதோஷம் நீங்க :*

⭐ வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு பாலாபிஷேகம் செய்து புனுகுபூசி நாகலிங்க பூ மாலை அணிவித்து பால் சாதம், பால் பாயாசம் நைவேத்தியமாக படைத்து அர்ச்சனை செய்து வந்தால் நாகதோஷம் நீங்கும்.

*மாங்கல்ய தோஷம் விலக :*

⭐ செவ்வாய்க்கிழமை எமகண்டத்தில் பைரவருக்கு சந்தன காப்பு செய்து மஞ்சள் கொம்பு மாலை சூட்டி, மஞ்சள் கயிறு(தாலிக்கயிறு) சமர்ப்பித்து சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், பானகம் படையலிட்டு அர்ச்சனை செய்து வழிபட்டு சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய கயிறு குங்குமம் தந்து ஆசீர்வாதம் பெற்றால் மாங்கல்ய தோஷம் நீங்கும்.

*பைரவர் வழிபாடு :*

⭐ தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்.

⭐ பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம்.

⭐ ஸ்ரீ பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்…

Leave a Comment