Kanni rasi guru peyarchi palangal 2017-18

கன்னி இராசி அன்பர்களே…

உங்கள் இராசிக்கு தனஸ்தானம் என்கிற 2-ம் வீட்டுக்கு குரு பகவான் 02.09.2017 அன்று பெயர்ச்சி ஆகி வருகிறார். இராசிக்கு 3, 8-க்குரிய செவ்வாய் சாரத்தில் அமரப் போவதால் பெரும் நன்மைகளும், சிறு தீமைகளும் தருவார். 4, 7-க்குரிய குரு பகவான், தனஸ்தானத்தில் இருப்பது வெகு அருமை. நினைத்தது நடக்கும். மண்ணை தொட்டாலும் பொன்னாகும். இந்த குரு பெயர்ச்சி வெகு நற்பலனை வாரி வழங்கும். பணவரவு தாராளமாக வந்துக்கொண்டு இருக்கும். கடன் சுமை அத்தனையும் தீரும். புதிய தொழில் தொடங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மற்றவர்கள் புகழும் அளவிற்கு வாழ்க்கை தரம் உயரும். முக்கியமாக, குரு பகவான் 8-ம் வீட்டை பார்வை செய்வதால், வழக்கு விவகாரத்தில் கவனமாக இருங்கள். பிரச்னைகள் தேடி வரும். மௌனமும், அமைதியும் அவசியம். சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் மிக, மிக கவனமாக அனுகுங்கள். வியபாரத்தில் ஒரே நேரத்தில் பெரிய முதலீடு செய்யாமல் சிறுக, சிறுக முதலீடு செய்வதே நல்லது. கூட்டாக செய்யும்போது உங்கள் பக்கம் கவனமாக இருங்கள். மற்றபடி, குரு பகவான் இந்த பெயர்ச்சியில் கிள்ளியும் விடுவார். அள்ளியும் கொடுப்பார். நல்வாழ்த்துக்கள்.

 

உத்திரம் (2,3,4), அஸ்தம், சித்திரை (1,2)
Guru

கூர்மையான அறிவும், எதையும் முன்கூட்டியே செய்யும் திறனும்கொண்ட கன்னி ராசி நேயர்களே!

உங்கள் ஜென்ம ராசிக்கு 4,7-க்கு அதிபதியான பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் வாக்கியப்படி வரும் 2-9-2017 முதல் 4-10-2018 வரை தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இந்த குரு மாற்றத்தால் கடந்தகால பிரச்சினைகள் அனைத்தும்விலகி அனுகூலமான பலன் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள்விலகி ஒற்றுமை பலப்படும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு சிறப்பான புத்திரபாக்கியம் அமையும். பணம் பலவழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். பொருளாதாரநிலை சிறப்பாக அமைவதால் கடன்களும் படிப்படியாகக் குறையும். புத்திரபாக்கியம் வேண்டு பவர்களுக்கு அழகான புத்திர பாக்கியம் அமையும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் சரளநிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தி லாபமடையமுடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும், அபிவிருத்தியும் பெருகும். தொழிலாளர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் பல முன்னேற்றப்பாதைகளுக்கு வழிவகுக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு உடையவற்றாலும் அனுகூலப்பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்தியான நிலையினை அடைவார்கள். தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உற்சாகத்தை ஏற்படுத்தும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாக அமையும். அரசியல்வாதிகளுக்கும் மாண்புமிகு பதவிகள் தேடிவரும்.

19-12-2017 முதல் சனி ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிக்க உள்ளதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச்சனி நடைபெறவுள்ளது. இதனால் எதிலும் சற்று கவனமுடன் நடந்துகொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சனி உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகம் என்பதால் பெரிய கெடுதல்களை செய்யமாட்டார். ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 11-ல் சஞ்சரிப்பதால் எந்த பிரச்சினைகளையும் முறியடிக்கக்கூடிய ஆற்றலைப்பெற்று வீரநடை போடுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்
உங்களின் உடல் ஆரோக்கியம் வெகுசிறப்பாக இருக்கும். இதுவரை இருந்துவந்த உடல்நலக் கோளாறுகள் யாவும் படிப்படியாக விலகும். மனைவி, பிள்ளைகளும் சுபிட்சமாக அமைவதால் மருத்துவச் செலவுகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். எல்லாப் பணிகளிலும் புதுத்தெம்புடனும், பொலிவுடனும் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பயணங்களும் அதன்மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

குடும்பம், பொருளாதாரநிலை
குடும்ப வாழ்வில் குதூகலமும் பூரிப்பும் உண்டாகும். கடந்தகால சோதனைகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பொருளாதாரநிலையும் மிகச்சிறப்பாக அமைவதால் பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். உற்றார்-உறவினர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி நட்பு மலரும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கொடுக்கல்வாங்கல்
கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் எதிர்பார்க்கும் லாபத்தை அடையமுடியும். கொடுக்கல்-வாங்கலிலும் சரளமான நிலை ஏற்பட்டு தாராளமான பணவரவுகள் உண்டாகும். உங்களுக்கிருந்த வம்பு வழக்குகள்விலகி சாதகப்பலன் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் தக்க சமயத்தில் உதவிகரமாக இருக்கும்.

தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் இதுநாள்வரை நிலவிய நலிவுகள் மறைந்து ஏற்றமான பலனை ஏற்படுத்தும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டி பொறாமைகளும் விலகும். கூட்டுத்தொழிலிலும் கூட்டாளிகளின் ஒற்று மையான செயல்பாட்டால் பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். வேலையாட்களாலும் பணவரவுகளும் ஆர்டர் களும் குவியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளும் எதிர் பாராத ஏற்றத்தை ஏற்படுத்தும். புதிய கிளைகளை நிறுவும் நோக்கம் நிறைவேறும்.

உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புக்களும் எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களும் படிப்பிற்கேற்ப சிறப்பான வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள்.

பெண்கள்
உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். திருமணவயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர். அழகான புத்திரபாக்கியத்தையும் பெற்றெடுப்பர். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
அரசியல் அரசியல்வாதிகளின் பெயர், புகழ் அதிகரிக்கக்கூடிய காலமாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். பதவிக்கு இருந்த இடையூறுகள் விலகி எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைவீர்கள். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும்.

விவசாயிகள்
விளைச்சல் மிகச்சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகும். நீர்வரத்து தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளைக் கையாண்டு அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி, நிலம், மனை போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும்.

கலைஞர்கள்
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். இதுவரை வராமல் தடைப்பட்ட பணத்தொகை கைக்கு வந்துசேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் மேன்மைகளும் உண்டாகும். உடனிருக்கும் சக கலைஞர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும்.

மாணவமாணவியர்
கல்வியில் ஏற்பட்ட தடைகள் விலகி மாணவர்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். படிப்புக்காக எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி,கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 2-9-2017 முதல் 5-10-2017 வரை
குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு தனஸ்தானமான 2-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றியினைப் பெறுவீர்கள். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் எந்தக் காரியத்திலும் எளிதாக ஈடுபடமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார்-உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் கனவுகளும் நனவாகும். கடன்கள் அனைத்தும் குறையும். கொடுக்கல்-வாங்கலிலும் எதிர்பார்த்த லாபம் அமையும். பெரிய மனிதர்களின் நட்பு அனுகூலப்பலனை உண்டாக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். சனி பகவான் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் பணம் பலவழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய பொருட்சேர்க்கைகளும், ஆடை ஆபரணமும் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபங்கள் கிட்டும். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 6-10-2017 முதல் 7-12-2017 வரை
குரு பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு தனஸ்தானமான 2-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எதிர்பார்த்த கடனுதவிகள் தடையின்றிக் கிடைப்பதால் தொழிலில் நல்ல அபிவிருத்தி பெருகும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். கணவன்-மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார்-உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் தாராளமாக அமைவதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறக்கூடிய காலம் என்பதால் சிலருக்கு மனதில் நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகம் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடும். கொடுக்கல்-வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றிக்கனியினைப் பறிப்பார்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சனிக்குரிய பரிகாரங்களைத் தொடர்ந்து செய்வது நல்லது.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 8-12-2017 முதல் 13-2-2018 வரை
குரு பகவான் தன ஸ்தானமான 2-ல் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். இக்காலங்களில் பொருளாதார ரீதியாக முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். ராகு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத திடீர் தனசேர்க்கைகளும் கிடைக்கப்பெறும். குடும்பத்திலிருந்த கருத்து வேறுபாடுகள் விலகி கணவன்-மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன பொருட்சேர்க்கைகளும், ஆடை ஆபரணமும் சேரும். பூர்வீக சொத்துகளால் கூடுதல் லாபம் உண்டாகும். வீடு, மனை, பூமி வாங்கும் யோகம் உண்டாகும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கக் கூடிய யோகம் உண்டாகும். 19-12-2017 முதல் சனி ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். தொழில், வியாபார ரீதியாக இருந்து வந்த கடந்த கால பிரச்சினைகள் விலகி நல்ல லாபத்தையும் ஏற்றத்தையும் பெறுவீர்கள். கடன்கள் அனைத்தும் படிப்படியாகக் குறைந்து மனநிம்மதி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். கலைஞர்கள் திறமைக்கேற்ற வாய்ப்புகளைப் பெறுவார்கள். சனிப்பரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

குரு பகவான் அதிசாரமாக விருச்சிக ராசியில் 14-2-2018 முதல் 6-3-2018 வரை
குரு பகவான் அதிசாரமாக முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் தேவையற்ற சோதனைகளை சந்திக்க நேரிடும். சனியும் 4-ல் சாதகமற்று சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்து லாபம் குறையும். வரவேண்டிய ஆர்டர்களும் தடைப்படும். எந்தவொரு காரியத்தையும் முழுமையாகச் செய்துமுடிக்க இயலாதபடி தாமதநிலை உண்டாகும். எதிர்பார்க்கும் கடனுதவிகளும் தாமதப்படும். பலவகையில் நெருக்கடிகள் அதிகரிக்கும். குடும்பத்திலும் வீணான சண்டை சச்சரவுகள் ஏற்படும். எவ்வளவுதான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்க முடியாத நிலை உண்டாகும். உற்றார்- உறவினர்களே தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். கடன்காரர்களும் மிகவும் தொல்லை கொடுப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து உடல்நிலை சோர்வடையும். பிறர்செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டி இருப்பதால் வீணான பழிச்சொல் உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கைநழுவி பொருளாதாரத் தடைகள் உண்டாகும். சனிக்கிழமைதோறும் சனிக்குப் பரிகாரம் செய்வது நல்லது.

குரு பகவான் வக்ரகதியில் 7-3-2018 முதல் 3-7-2018 வரை
இக்காலங்களில் குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சற்று நன்மை, தீமை கலந்த பலன்களைப் பெறுவீர்கள். ராகு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எந்த பிரச்சினைகளையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்திலிருந்த மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். உற்றார்- உறவினர்கள் தக்கசமயத்தில் உதவுவார்கள். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொள்வதால் கடன்களைத் தவிர்க்கலாம். சுபகாரிய முயற்சிகளை மேற்கொண்டால் சில தடைகளுக்குப்பின் கைகூடும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகை கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்து சிந்தித்துச் செயல்பட்டால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்குக் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைத்தாலும் வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்ள இயலாது. உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் சுமாராகவே இருக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 4-7-2018 முதல் 4-10-2018 வரை
குரு பகவான் தன ஸ்தானமான 2-ல் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புத்திரவழியிலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். வெளிவட்டாரத் தொடர்புகளால் உங்களின் பெயர், புகழ், உயரும். உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திருப்தியான நிலையை அடைவார்கள். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபார ரீதியாக புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக அமையும். கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். கடன்கள் குறையும். கலைஞர்கள் வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பினைப் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

பரிகாரம்
கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டமச்சனி நடைபெறுவதால் சனிக்குரிய பரிகாரங்களைத் தொடர்ந்து செய்து வருவது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது. கேது 5-ல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது, கேதுவுக்குப் பரிகாரம் செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பை
எண்: 5, 6, 7, 8.
நிறம்: பச்சை, நீலம்.
கிழமை: புதன், சனி.
கல்: மரகத பச்சை.
திசை: வடக்கு.
தெய்வம்: ஸ்ரீவிஷ்ணு.

Leave a Comment