How to be happy always in Life

எப்பவுமே சந்தோஷமா இருக்கணுமா? (how to be happy always in life) இந்த ரகசியத்த மட்டும் தெரிஞ்சிக்கங்க..!!

மகிழ்ச்சி என்று வரும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று மகிழ்ச்சியை தரும். ஆனால் நிரந்தர மகிழ்ச்சியை தருவது எது என்று தெரியுமா. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்லுகிறார்கள் வாங்க பார்க்கலாம்.

நம் எல்லோருக்கும் பிடித்தமான ஒரு விஷயம் என்றால் அது மகிழ்ச்சியாக இருப்பது தான். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று யார் தான் விரும்ப மாட்டார்கள். மகிழ்ச்சியான தருணம் வந்தாலே நம் மனதும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடும் அல்லவா. இதற்கு சிறந்த உதாரணம் என்றார் குழந்தைகள் தான். குழந்தைகள் தான் எதையும் மறந்து எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மகிழ்ச்சியை பற்றி நாம் ஒரு கதை கூட கேள்விப்பட்டு இருப்போம்.

ஒரு ராஜா தன் அமைச்சர்களை கூப்பிட்டு தன் ராஜ்யத்தில் உள்ள ஒரு மகிழ்ச்சியான நபரை கண்டுபிடித்து வாருங்கள் என்றார். ஏன் என்று ராஜாவிடம் கேட்டதற்கு மகிழ்ச்சியான ஒரு மனிதனின் சட்டையை அணிந்தால் தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்றாராம். இதன் படி அமைச்சர்களும் நீண்ட தேடல்களுக்கு பிறகு ஒரு நபரை கண்டறிந்து அவரை ராஜாவின் அவைக்கு கூட்டி வந்தார்களாம். உடனே ராஜா அந்த நபரை பார்த்து உன்னுடைய சட்டையை என்னிடம் ஒப்படை என்று கூறினாராம். அதற்கு அந்த மனிதர் எனக்கு சட்டையே இல்லை என்று கூறினாராம். ஏனென்றால் அவர் ஒரு சட்டை கூட வாங்க முடியாத மிகவும் ஏழையாக இருந்துள்ளார். இருப்பினும் அவர் அவருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளார்.

என்ன பாடம்?

இந்த கதை நமக்கு ஒரு பாடத்தை சுட்டிக்காட்டுகிறது. மகிழ்ச்சியை பொருத்தவரை ஒவ்வொரு மக்களின் வரையறை என்பது எவ்வாறு வேறுபடுகிறது என்பதை இக்கதை நம்மிடம் கூறுகிறது. சிலர் பணம் தான் மகிழ்ச்சிக்கு அவசியம் என்று நினைக்கிறார்கள். சிலருக்கு ஆரோக்கியம், சிலருக்கு நண்பர்கள் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வரையறை. இப்படி மகிழ்ச்சியை பற்றி சில சுவாரஸ்யமான ரகசியங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதைப்பற்றி தான் நாம் இக்கட்டுரையில் காணப் போகிறோம்.

ஹார்வர்ட் ஆய்வு..

ஹார்வர்ட் ஆய்வு நிரந்தர மகிழ்ச்சியை பற்றி 80 ஆண்டுகாலமாக ஆராய்ச்சி செய்தது. 1938 ல் தொடங்கிய இந்த ஆய்வு 250க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஆராய்ந்து ஒரு சுவாரஸ்யமான பதிலை தந்தது. இந்த ஆய்வின் படி ஒரு மனிதரை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது பணம், செல்வம் அல்லது அழகு அல்ல. நம்முடைய நிரந்தர மகிழ்ச்சியின் திறவு கோலானாது நம் உறவில் தான் உள்ளது என்று கூறியுள்ளது. நம்முடைய நெருங்கிய மற்றும் அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பிணைப்பு தான் நம்மை நிரந்தர மகிழ்ச்சி உள்ளவராக மாற்றும் என்பதையும் அந்த ஆய்வு கூறியுள்ளது.

மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது..

எனவே நெருங்கிய உறவுகளுடன் அன்பாக இருப்பது மகிழ்ச்சியை மட்டும் தருவதில்லை மாறாக நமது மன ஆரோக்கியத்திலும் அது மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் ஒரு நபர் உறவுகளில் சிக்கல் பிரச்சனைகளை சந்திக்கும் போது அவர் குறைந்த அளவு மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை சந்திக்க நேரிடும். மகிழ்ச்சியில் திருமணம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த ஆய்வின் படி ஆரோக்கியமான திருமண வாழ்க்கையை தொட்டவர்கள் போராட்டாமான வாழ்க்கையை விட திருப்திகரமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துகிறார்கள். ஆனால் இதை நிரூபிக்கவும் ஆய்வு தேவைப்பட்டது.

உங்கள் மகிழ்ச்சியை கொல்லக் கூடியது எது?

உறவுகள் இல்லாமல் தனிமையில் இருப்பது வாடுவது போன்றவை மகிழ்ச்சியை கொல்லக் கூடிய ஒன்று. இதனால் மனச்சோர்வு, சோகம் போன்றவை ஏற்படும். மகிழ்ச்சியான சமூக வாழ்க்கை கொண்டிருப்பவர்களை விட வயதாகும் போது தனிமையில் வாடுபவர்களுக்கு மனச்சோர்வு அதிகமாக ஏற்படுகிறது. இதனால் தனிமையை போக்க நிறைய பேர் புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.

மகிழ்ச்சியாக இருக்க உங்க உறவுகளை கவனியுங்கள்..

நாம் ஆரோக்கியமாக இருக்க எப்படி உடலை கவனித்துக் கொள்கிறோமோ அதே மாதிரி உறவுகளையும் கவனித்துக் கொள்வது முக்கியம். எனவே உறவுகளை கவனத்துக் கொள்வது ஒரு வகையான சுய பாதுகாப்பின் வெளிப்பாடு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க உங்க உறவுகளை கவனித்துக் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்!

சித்தர் மொழிந்த பொன்மொழிகள்

மகா பெரியவா பொன் மொழிகள்

உன்னை வெல்லும் வழி அது என்ன?

Leave a Comment