மகாளய பக்ஷ தர்ப்பண ஸங்கல்பம் செய்யும் முறை

18-09-2024 (ப்ரதமை திதி)
புதன் கிழமை

ஆசமனம்.
அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:
கேசவா + தாமோதரா

*கீழ்கண்ட மந்திரங்களை சொல்லி பவித்ரம் போட்டுக் கொள்ளவும்*

*ருத்யாஸ்ம ஹவ்யைர் நமஸோபஸத்ய*
*மித்ரம் தேவம் மித்ரதேயந்நோ அஸ்து*
*அனூராதான் ஹவிஷா வர்த்தயந்த:*
*சதஞ் ஜுவேம ஶரத: ஸவீரா:*

பவித்ரம் த்ருத்வா

*வலது கை மோதிர விரலில் பவித்ரம் போட்டுக் கொண்டு சில கட்டை தர்ப்பங்களை காலுக்கு அடியில் போட்டுக் கொண்டு கையை ஜலம் தொட்டு அலம்பி விட்டு சில கட்டை தர்ப்பங்களை பவித்ரத்துடன் மடித்து வைத்துக்கொள்ளவும்*

ஶூக்லாம் + ஸாந்தயே, ஓம் பூ: + பூர்புவஸ்ஸுவரோம்

மமோபாத்த + ப்ரீத்யர்த்தம், அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா, யஸ்மரேத் புண்டரீகாக்ஷம், ஸபாஹ்ய, அப்யந்தர: ஶூசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா, ஸமுபார்ஜிதம், ஶ்ரீராம, ஸ்மரணேனைவ, வ்யபோஹதி நஸம்ஸய: ஶ்ரீராம ராமராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம், ஜகத், ஶ்ரீகோவிந்த கோவிந்த, கோவிந்த அத்யஶ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய, அத்யப்ரும்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேத, வராஹகல்பே, வைவஸ்வத, மன்வந்தரே, அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவருஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஶகாப்தே, அஸ்மின்வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்டி, ஸம்வத்ஸராணாம், மத்யே

*குரோதி * நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ * ருʼதௌ ** கன்யா மாஸே *க்ருஷ்ண பக்ஷே அத்³ய * ப்ரதமாயாம்* புண்யதிதௌ² *ஸௌம்ய வாஸர யுக்தாயாம்ʼ பூர்வ ப்ரோஷ்டபதா நக்ஷத்ர யுக்தாயாம்ʼ *கண்வ நாம யோக³ யுக்தாயாம்ʼ *பவ கரண யுக்தாயாம்ʼ விஷ்ணு யோக விஷ்ணு கரண ஏவங்கு³ண ஸகல விஶேஷண விஶிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் * ப்ரதமாயாம் * புண்யதிதௌ²

*ப்ராசீனாவீதி*

*தந்தையார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்*

……..கோத்ராணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத், பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாணாம்,

*கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இல்லாதவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்*

மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீணாம்

*கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்*

பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது: ப்ரபிதா, மஹீணாம்

*தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்*

……………கோத்ராணாம் வஸூருத்ராதித்ய, ஸ்வரூபாணாம், அஸ்மது, ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஶபித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம் தத்
தத் கோத்ரணாம் தத் தத் ஶர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பிருத்வ்ய மாதுலாதி வர்க்கத்வய அவஶிஷ்டானாம் ஸர்வேஷாம் காருன்ய பித்ரூனாம் அக்ஷய த்ருப்த்யர்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சம அபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய புண்யகாலே பக்‌ஷீய அத்ய தின ஶ்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

*கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை தர்பங்களை மட்டும் கீழே போடவும். பூணலை வலம் போட்டுக்கொள்ளவும் கையில் ஜலத்தால் துடைத்துக்கொள்ளவும். பூணலைஇடம் போட்டுக்கொள்ளவும்.*

*கீழ்க்கண்ட மந்திரங்களை சொல்லி தாம்பாளத்தின் நடுவில் தெற்கு நுனியாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை போடவும்*

*ஆவாஹந மந்த்ரம்*

ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம், தததோரயிஞ்ச, தீர்க்காயுத்வஞ்ச ஸதசாரதஞ்ச// அஸ்மின் கூர்ச்சே வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி/

*கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி கட்டை தர்ப்பங்களை கூர்ச்சத்தின்மேல் வைக்கவும்.*

*ஆஸன மந்த்ரம்*

ஸக்ருதாச்சின்னம் பர்ஹி: ஊர்ணாமிருது ஸ்யோநம் பித்ருப்யஸ்தவா, பராம்யஹம், அஸ்மின் ஸீதந்துமே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதா மஹாஸ்ச்ச அனுகைஸ்ஸஹ//

வர்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்.

*கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி எள்ளை கூர்ச்சத்தில் மறித்துப் போடவும்.*

ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம் //

*தர்ப்பண மந்த்ரம்*

உதீரதாம் அவரே உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸும் ய ஈயு: அவ்ருகா: ரிதக்ஞா: தேனா வந்து பிதரோஹவேஷு

……கோத்ரான் ……..ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

அங்கிரஸோந: பிதர: நவக்வா: அதர்வான: ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் ஸுமதௌ யக்ஞியாநாம் அபிபத்ரே.ஸௌமனஸே ஸ்யாம

……கோத்ரான் ……..ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

ஆயாந்துந: பிதர: ஸோம்யாஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி: தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயாமதந்து அதிப்ருவந்து தே அவந்து அஸ்மான்

……கோத்ரான் ……..ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ரூன்

……கோத்ரான் ……..ஶர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

பித்ருப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதாநம: பிதாமஹேம்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதாநம: ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதாநம:

……கோத்ரான் ……..ஶர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

யேசேஹ பிதர: யேசனேஹ, யாகுச்ச வித்ம யாகும் உசனப்ரவித்ம அக்னேதான் வேத்த யதிதே ஜாதவேத: தயா ப்ரத்தம் ஸ்வதயா மதந்து

……கோத்ரான் ……..ஶர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

மதுவாதா: ருதாயதே, மதுக்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர்ன: ஸந்து ஓக்ஷதீ:

……கோத்ரான் ……..ஶர்மண: ஆதித்யரூபான் பிரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

மதுநக்த்தம் உதோஷஸி மதுமத் பார்த்திவம் ரஜ: மதுத்யௌ: அஸ்துந: பிதா

……கோத்ரான் ……..ஶர்மண: ஆதித்யரூபான் பிரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

மதுமான்னா: வனஸ்பதி: மதுமான் அஸ்து ஸூர்ய: மாத்வீ: காவோ பவந்துந:

……கோத்ரான் ……..ஶர்மண: ஆதித்யரூபான் பிரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி

*கீழ்வரும் தர்ப்பணங்களை தாயார் இல்லாதவர்கள் மட்டும் செய்ய வேண்டியது*

……..கோத்ரா: …………நாம்நீ; வஸுரூபா: மாத்ருஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

……..கோத்ரா: …………நாம்நீ; ருத்ரரூபா: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

……..கோத்ரா: …………நாம்நீ; ஆதித்யரூபா: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

*கீழ்வரும் தர்ப்பணங்களை தாயார் உள்ளவர்கள் மட்டும் செய்ய வேண்டியது*

……..கோத்ரா: …………நாம்நீ; வஸுரூபா: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

……..கோத்ரா: …………நாம்நீ; ருத்ரரூபா: பிது: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

……..கோத்ரா: …………நாம்நீ; ஆதித்யரூபா: பிது: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

*மாதாமஹவர்க்கம்*

…..கோத்ராணாம்……..ஶர்மண: வஸுரூபான் மாதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

…..கோத்ராணாம்……..ஶர்மண: ருத்ரரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

…..கோத்ராணாம்……..ஶர்மண: ஆதித்யரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

……..கோத்ரா: …………நாம்நீ; வஸுரூபா: மாதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

……..கோத்ரா: …………நாம்நீ; ருத்ரரூபா: மாதுப் பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

……..கோத்ரா: …………நாம்நீ; ஆதித்யரூபா: மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

தத் தத் கோத்ரான் தத் தத் ஶர்மா ணஹ: வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க்கத்ய அவஶிஷ்டான் ஸர்வான் காருன்ய பித்ரூன் ஸ்வமாநமஸ் தர்ப்பயாமி (3முறை)

ஞாதாக்ஞாத, ஸகாருனிக வர்க்கத்வய, பித்ரூன், ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3தடவை)

*கீழ்வரும் மந்த்ரங்களைச் சொல்லி எள்ளும் ஜலமுமாக தாம்பாளத்திற்குள் அப்ரதிஷிணமாக சுற்றிவிடவும்*

*மந்த்ரம்*

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே ஸகாருணிக பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

*உபவீதி*

*ப்ரதக்ஷிண மந்த்ரம்*

தேவதாப்ய: பித்ருப்யஶ்ச மஹாயோகிப்ய: ஏவச, நமஸ்வதாயை, ஸ்வாஹாயை, நித்யமேவ, நமோநம:

யாநிகாச பாபாணி ஜன்மாந்த்ர க்ருதானிச தானிதானி விநஶ்யந்தி ப்ரதக்ஷிண பதேபதே

*அபிவாதயே… நமஸ்காரம்*

*ப்ராசீனாவீதி*

*கீழ்க்கண்ட மந்திரங்களை சொல்லி தாம்பாளத்தின் நடுவில் தெற்கு நுனியாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை போடவும்*

*யதாஸ்தான மந்த்ரம்*

ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம், தததோரயிஞ்ச, தீர்க்காயுத்வஞ்ச ஸதசாரதஞ்ச// அஸ்மாத், கூர்ச்சாத், வர்க்த்வய, பித்ரூன், யதாஸ்தானம், ப்ரதிஷ்டாபயாமி

*தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை எடுத்து பிரித்து கீழ் நுனியாக வலது கை கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்த்ரத்தை சொல்லி ஜலம் விடவும்*

*மந்த்ரம்*

ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவா: நாந்ய, கோத்ரிந: தேஸர்வே த்ருப்தி மாயாந்து மயா உத்ஸ்ருஷ்டை: குஶோதகை: த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

*உபவீதி*
ஆசமனம் செய்யவும்

*கையில் ஜலத்தை விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி மந்த்ரம் முடிந்தவுடன் கீழே விடவும்*

காயேநவாசா மனஸேந்ரியைர்வா புத்யாத்ம நாவா ப்ருகிருதேஸ்வபாது கரோமியத்யது ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத் ப்ரம்மார்பணமஸ்து…

இன்று மகாளய பட்சம் 2024 ஆரம்பம் : பித்ருக்களுக்கு எதற்காக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?

🍁🍁🍁

மகாளய பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட கால அளவாகும். புரட்டாசி மாத பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் காலமாகும். மகாளய பட்சத்தின் நிறைவாக வரும் அமாவாசைக்கு, மகாளய அமாவாசை என்று பெயர். மற்ற மாதங்களில் வரும் அமாவாசையில் பித்ரு தர்ப்பணம் கொடுத்தால் அது யாருடைய பெயரை சொல்லி கொடுக்கிறார்களோ அவர்களை மட்டும் போய் சேரும்.

மகாளய பட்சத்தின் 15 நாட்களும் திதி கொடுத்து, தர்ப்பணம் கொடுக்கலாம். தானங்கள் வழங்கலாம். இந்த 15 நாட்களும் நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள் நம்முடைய பல தலைமுறை முன்னோர்களை சென்றடையும். இதனால் எவர் ஒருவர் மனக்குறையுடன் இறந்து இருந்தாலும் அந்த ஆத்மா சாந்த அடைந்து, நற்கதி அடையும்.

மகாளய பட்சம்:

புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் முன்னோர் வழிபாட்டுடன் தொடர்புடையதாகும். இந்த மாதத்தில் வரும் பவுர்ணமி துவங்கி, அமாவாசை வரையிலான 15 நாட்களை மகாளய பட்சம் என்கிறோம். மகாளய என்றால் ஒன்றாக கூடி வருதல் என்று பொருள். நம்முடைய முன்னோர்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு பூமிக்கு வந்து, நம்முடைய பூஜைகளை ஏற்று, நமக்கு ஆசி வழங்கக் கூடிய காலம் மகாளய பட்ச காலமாகும். முன்னோர்களுக்கு செய்யப்படும் வழிபாட்டில் நாள் கணக்கு என்பது மிகவும் முக்கியமானதாகும். அதனாலேயே மகாபட்சமும் 15 நாட்கள் கொண்ட விரத காலமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மகாளய பட்சம் செப்டம்பர் 18ம் தேதி துவங்கி, அக்டோபர் 01ம் தேதி வரை உள்ளது.

*முன்னோர் வழிபாட்டு கணக்கின் காரணம் :*

ஒருவரின் உடலில் இருந்து உயிர் பிரிந்த பிறகு அந்த உயிர், பிரேத உலகில் இருந்து பித்ரு உலகத்திற்கு செல்வதற்கு 11 ஆகும். அதனால் தான் ஒருவர் இறந்த பிறகு 13 அல்லது 16 நாட்களுக்கு பிறகு காரியம் வைக்கிறார்கள். பித்ருலோகத்தில் இருந்து அந்த ஆத்மா சூரிய மண்டலம் அல்லது சந்திர மண்டலத்தை அடைய ஒரு வருடம் காலம் ஆகும். ஒரு வருட காலத்திற்கு பிறகு அந்த ஆத்மா தவது கர்ம வினைகளின் அடிப்படையில் சூரிய அல்லது சந்திர மண்டலங்களுக்கு செல்லும். அந்த ஆத்மாவானது சூரிய மண்டலத்திற்கு சென்றால் இறைவனின் திருவடிகளை அடைந்து முக்தி அடைந்து விடும். ஒருவேளை அது சந்திர மண்டலத்திற்கு சென்றால் அந்த ஆத்மா மீண்டும் பூமியில் கர்ம வினைகளின் அடிப்படையில் பிறப்பு எடுக்கிறது.

_*பித்ருக்களுக்கு சொர்க்கம் :*_

ஒருவரின் ஆத்மா சூரிய அல்லது சந்திர மண்டலத்தை அடைந்த பிறகு தான் அந்த ஆத்மாவின் ஆயுட் சுயற்சி நிறைவடைகிறது. இதனால் தான் ஒருவர் இறந்த ஒரு வருடத்திற்கு பிறகே அவர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். அந்த வீட்டில் ஒரு வருடத்திற்கு பிறகே சுப காரியங்கள் நடத்த கூடாது என சொல்லப்படுகிறது. அந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரை அந்த ஆத்மா இறைவனை அடைய முடியாமலும், மீண்டும் பிறவி எடுக்க முடியாமலும் காற்றில் அலைந்து கொண்டிருக்கும். அந்த சமயத்தில் அதன் கஷ்டத்தை பொருட்படுத்தாமல், சுப காரியங்கள் செய்வதால் அந்த ஆத்மாவின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.

_*ஆத்ம சாந்தி வழிபாடு :*_

ஒருவர் எப்படி இறந்திருந்தாலும், அந்த உயிர் உடலை விட்டு பிரியும் போது ஏதாவது மனக்குறையுடன் தான் உடலை விட்டு பிரிய மனம் இல்லாமல் செல்கிறது. இதனால் அந்த ஆத்மாவிற்கு அமைதி தருவதற்காக எமதர்ம ராஜா, ஒவ்வொரு ஆத்மாவை வருடத்திற்கு ஒரு முறை 15 நாட்கள் பூமிக்கு சென்று மனநிறைவு, மன மகிழ்ச்சியை பெற்று திரும்புவதற்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். அப்படி முன்னோர்கள் பூமிக்கு வந்து, இங்கு மன நிறைவு பெறுவதற்கான வழிகளை தேடும் காலமே மகாளய பட்சமாகும். அந்த நேரத்தில் நாம் கொடுக்கும் தர்ப்பணம், திதி ஆகியவை தான் அந்த ஆத்மாக்களை நிறைவடைய வைக்கும். அப்படி மனநிறைவு பெற்ற ஆத்மா, தன்னுடைய சந்ததிகளை வாழ்த்தி விட்டு சென்று முக்தியை அடையும்.

*பித்ரு தர்ப்பணத்தின் முக்கியத்துவம் :*

ஒருவேளை அந்த ஆத்மாவின் சந்ததியினர் யாரும் திதி, தர்ப்பணம் ஏதும் கொடுக்காமல் இருந்தால் அந்த ஆத்மா மனம் வருத்தப்படுவதாகும், கோபப்படுவதாலும் அது பித்ரு தோஷம் அல்லது பித்ரு சாபமாக மாறுகிறது. இதன் விளைவாக நமக்கு பலவிதமான துன்பங்கள் ஏற்படுகிறது. இவற்றில் இருந்து விடுபட, நாம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். வருடத்தின் மற்ற நாட்களில், அமாவாசை நாட்களில் தர்ப்பணம் அளிக்க மறந்திருந்தாலும், இந்த மகாளய பட்சம் காலத்தை பயன்படுத்தி தர்ப்பணம் கொடுப்பதால் பித்ருக்கள் ஏற்றுக் கொண்டு நமக்கு ஆசி வழங்குவதால், நம்முடைய குடும்பம் மட்டுமின்றி நம்முடைய சந்ததியே எந்த குறையும் இல்லாமல் இருக்கும்.

🍁🍁🍁

Leave a Comment