Naga Panchami in Tamil

நாக சதுர்த்தி நாளும், விரத பலன்களும் (Naga Panchami)

Naga Panchami 2021 – வியாழக்கிழமை, Aug 12 2021

கருடபஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாக சதுர்த்தி நாளாகும். பாற்கடலிருந்து வெளிவந்த ஆலகாலத்தினை சிவபெருமான் உண்ட தினமாக இந்நாள் கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் இந்நாளில் தம்பிட்டு என்னும் உணவுப்பொருளை தயார் செய்து இறைவனுக்குப் படைக்கின்றார்கள்.

❂ இந்நாளில் அட்ட நாகங்களான வாசுகி, ரட்சகன், காளிங்கன், மணிபத்ரன், ஜராவதன், திருதராஷ்டிரன், கார்க்கோடகன், தனஞ்சயன் ஆகியவர்களை வணங்க வேண்டும். நாக தேசத்திற்காக இந்த நாளில் நாக கற்களை வழிபடுதல், புற்றுக்கு பால் ஊற்றுதல் போன்ற சடங்குகளை செய்கின்றனர்.

❂ ராகு கேது தோஷங்களால் திருமணம் நடக்காதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த நாகங்களை வழிபடுகின்றனர். நாகப்பிரதிகளுக்கு புது துணி கட்டி பாலால் அபிஷேகம் செய்கின்றனர். சிலர் அருகிலுள்ள நீர் நிலைகளிலிருந்து நீரெடுத்துவந்து அவைகளுக்கு அபிஷேகம் செய்கின்றார்கள்.

நாக சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுவதற்கு காரணம்:

❂ ஆடி அல்லது ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தியிலும் ஐந்தாம் நாளாகிய பஞ்சமியிலும் நாக சதுர்த்தி வருகின்றன.

❂ பகவான், அனந்தன் என்னும் நாகமாக இருந்து பூமியைக் காத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாக தட்சகன், வாசுகி, கார்க்கோடகன் முதலான நாகங்களும் பாதாள லோகத்தில் வசிக்கின்றனர்.

❂ கஸ்யபருக்கு கத்ரு என்பவளிடம் தோன்றியவர் நாகர். தாய் சொல்லைக் கேளாததால், நெருப்பில் வீழ்ந்து இறந்து போகும்படி தாயே சபித்து விட்டாள். அந்தச் சாபத்தால் பல சர்ப்பங்கள் நெருப்பில் மாண்டு போயின.

❂ அஸ்தீகர் ஜனமேஜயனது சர்ப்பயாகத்தை நிறுத்தி, சாபத்தை அகற்றினார். அதுவே இந்த பஞ்சமி. அப்பொழுது நாகங்களை வழிபட்டால் நலம் உண்டாகும்.

❂ புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன், நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவதைக் காணலாம்.

❂ ஒரு பெண்ணுக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது நாகப்பாம்பு கடித்து இறந்து விட்டனர். அவர்களை உயிர்ப்பித்துத் தரும்படி அந்தப் பெண், நாகராஜனை வேண்டி நோன்பு செய்தாள். அவரது வேண்டுகோளுக்காக அவளது சகோதர்களை நாகராஜன் உயிர்ப்பித்த நிகழ்வினை தொன்மமாக கருதுகிறார்கள். அதுவே நாக சதுர்த்தி. பாம்பு கடித்து இறந்தவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி கருடனை நோக்கிச் செய்த நோன்பு கருட பஞ்சமி. தங்கள் விருப்பம் போல் நாக சதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களை மேற்கொள்வார்கள்.

❂ விரதம் எதுவானாலும் சரி அன்றைய தினம், பாம்புப் புற்றில் பால் வார்த்து, புஷ்பங்களைச் சாத்தி, பழம் முதலியவற்றை வைத்து பூஜை செய்வார்கள். புற்று மண்ணை எடுத்து வந்து நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். குறிப்பாக சகோதரர்களின் நெற்றியில் இடுவார்கள்.

❂ இந்த நாக சதுர்த்தி நாளில் நாகர் கோவில் நாகராஜா கோவில், பரமக்குடி நயினார் கோவில், நாகப்பட்டினம் நாகநாதர் கோவில் மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோவில் போன்றவற்றில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன

நாகசதுர்த்தி

நாக வழிபாடு என்பது வேத காலத்தில் இருந்தே இருக்கிறது. மனிதரின் ஜாதக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவது நவகிரகங்கள். இதில் ராகு, கேது கிரகங்கள் நாக வடிவுடையவை. நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமலும், பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாகவும், நோயால் அவதிப்படுவதும் குடும்பத்தினர் பிரிந்தும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவர். நாக தேவதைகள் துன்பங்களிருந்து மீளவும், நல்ல பலன்களை பெறவும் நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் பெறலாம் என்பது ஐதீகம். பாம்புகளின் தலைவனாக விளங்கிய ‘தட்சகன்’ என்ற கொடிய நாகத்தால் பரிசட்த் என்ற மன்னன் கடிக்கப்பட்டு இறந்தான்.

தந்தையின் இறப்புக்கு காரணமான பாம்பு இனத்தையே அழிக்க உறுதி செய்து, ‘சர்ப்பயக்ஞம்’என்ற வேள்வியை நடத்தினான். பல பாம்புகள் அவன் நடத்திய யாகத்தில் இருந்த வேள்வித்தீயில் விழுந்து மாண்டன. அஸ்தீகர் என்ற முனிவர் ஜனமேஜயனது யாகத்தை நிறுத்தி நாகர்களுக்கு சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு சாபநிவர்த்தி கொடுத்த நாள் நாக சதுர்த்தி தினமாகும். எனவே நாக விரதம் ஆடி மாத சதுர்த்தியில் கொண்டாடும் வழக்கம் தோன்றியது. முதல் முதலில் இந்த விரதத்தை தொடங்குபவர்கள் ஆடி மாதத்தில் நாகசதுர்த்தி விரதத்தை தொடங்க வேண்டும். இந்த நாக சதுர்த்தி விரதத்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.

நாகர் சிலைக்கு நீரால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் பால் அபிஷேகம் செய்வார்கள். பின் மஞ்சள் பூசிக் குங்குமம் வைப்பார்கள். நாக சதுர்த்தி வழிபாட்டைச் செய்தால், ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அதில் உள்ள ராகு மற்றும் கேது பகவான்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும். ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தியும், மறுநாள் பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகின்றது. நாக சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக இட்டுக் கொள்வார்கள். அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது நல்லது. அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று, பால் மற்றும் முட்டைகள் வழங்கி வழிபட்டால், சர்ப்ப தோஷங்கள் யாவும் நீங்கும்…

நாக சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுவதற்கு காரணம்:

❂ ஆடி அல்லது ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தியிலும் ஐந்தாம் நாளாகிய பஞ்சமியிலும் நாக சதுர்த்தி வருகின்றன.

❂ பகவான், அனந்தன் என்னும் நாகமாக இருந்து பூமியைக் காத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாக தட்சகன், வாசுகி, கார்க்கோடகன் முதலான நாகங்களும் பாதாள லோகத்தில் வசிக்கின்றனர்.

❂ கஸ்யபருக்கு கத்ரு என்பவளிடம் தோன்றியவர் நாகர். தாய் சொல்லைக் கேளாததால், நெருப்பில் வீழ்ந்து இறந்து போகும்படி தாயே சபித்து விட்டாள். அந்தச் சாபத்தால் பல சர்ப்பங்கள் நெருப்பில் மாண்டு போயின.

❂ அஸ்தீகர் ஜனமேஜயனது சர்ப்பயாகத்தை நிறுத்தி, சாபத்தை அகற்றினார். அதுவே இந்த பஞ்சமி. அப்பொழுது நாகங்களை வழிபட்டால் நலம் உண்டாகும்.

❂ புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன், நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவதைக் காணலாம்.

❂ ஒரு பெண்ணுக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது நாகப்பாம்பு கடித்து இறந்து விட்டனர். அவர்களை உயிர்ப்பித்துத் தரும்படி அந்தப் பெண், நாகராஜனை வேண்டி நோன்பு செய்தாள். அவரது வேண்டுகோளுக்காக அவளது சகோதர்களை நாகராஜன் உயிர்ப்பித்த நிகழ்வினை தொன்மமாக கருதுகிறார்கள். அதுவே நாக சதுர்த்தி. பாம்பு கடித்து இறந்தவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி கருடனை நோக்கிச் செய்த நோன்பு கருட பஞ்சமி. தங்கள் விருப்பம் போல் நாக சதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களை மேற்கொள்வார்கள்.

❂ விரதம் எதுவானாலும் சரி அன்றைய தினம், பாம்புப் புற்றில் பால் வார்த்து, புஷ்பங்களைச் சாத்தி, பழம் முதலியவற்றை வைத்து பூஜை செய்வார்கள். புற்று மண்ணை எடுத்து வந்து நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். குறிப்பாக சகோதரர்களின் நெற்றியில் இடுவார்கள்.

❂ இந்த நாக சதுர்த்தி நாளில் நாகர் கோவில் நாகராஜா கோவில், பரமக்குடி நயினார் கோவில், நாகப்பட்டினம் நாகநாதர் கோவில் மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோவில் போன்றவற்றில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன…

சகல தோஷம் போக்கும் சர்ப்ப பூஜை

இந்து சமயத்தில் கலாசாரம், பண்பாடு, வழிபாடுகள், விரதங்கள், பண்டிகைகள் எல்லாமே இயற்கையை மையமாக வைத்து ஏற்படுத்தப்பட்டவை. பஞ்ச பூதங்களாகிய நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம், மற்றும் மலைகள், மரங்கள், விலங்குகள், பட்சிகளையும் தெய்வமாக கொண்டாடுகிறோம். யானை, கருடன், குதிரை உள்பட பல மிருகங்கள், பட்சிகள் கடவுளின் வாகனமாக இருக்கின்றன. இந்த வகையில் நாகங்கள் இந்து வழிபாட்டில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. ஜோதிட சாஸ்திரத்தில் சாயா கிரகங்கள், நிழல் கிரகங்கள் என்ற அமைப்பில் ராகு-கேதுவாக நாகங்கள் கிரக பரிபாலனம் செய்கின்றன.

இத்தகைய சர்வ வல்லமை படைத்த நாக தேவதைகளுக்கு ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி என்றால் நான்கு. இந்த நான்கு என்ற எண் அலைவரிசை எண் கணித சாஸ்திரப்படி ராகுவை குறிப்பதாகும். எனவே நான்காவது திதியான சதுர்த்தி அன்று வழிபடுவது மிகவும் விசேஷமாகும். நாகங்களை பற்றி பல புராண கதைகள், கர்ண பரம்பரை கதைகள், அனுபவ உண்மைகள் என ஏராளம் உள்ளது. நாகம் ஆலய வழிபாடுகளில் முக்கிய இடத்தை பெறுகிறது. அம்மன், சிவன், முருகன் ஸ்தலங்களில் நாக வாகன புறப்பாடு மிக விமரிசையாக நடக்கும்.

அதேபோல் திருப்பதி உள்ளிட்ட பெருமாள் ஸ்தலங்களில் சேஷ வாகனம் என்ற பெயரில் திருவீதி உலா நடப்பது விசேஷம். அம்மன் கோயில்களில் அரச மரம், வேப்ப மரம் இணைந்து இருக்க அங்கே பாம்பு புற்று வழிபாடு பிரசித்தமாகும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பாம்பு புற்றுக்கு சந்தனம், மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைத்து, அனந்தன், வாசுகி, கிஷ்காலன், அப்ஜன், மகரி, கங்குபாலன், கார்கோடன், குளிகன், பத்மன் ஆகிய நாக தேவர்களின் பெயர்களை உச்சரித்து புற்றுக்கு பால், முட்டை ஊற்றி வழிபடுவர். பல கோயில்களில் அம்மன்கள் நாக அம்சமாகவே அருள்பாலிக்கின்றனர்.

நாகாத்தம்மன், முப்பாத்தம்மன், காளியம்மன், மாரியம்மன் என ஒவ்வொரு ஊரிலும் பல விசேஷ பெயர்களில் வீற்றிருக்கிறாள் சக்தி. திருவேற்காட்டில் தேவி கருமாரி அம்மன், நாக சக்தியாக அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறாள். இத்தலத்தில் மிகப் பெரிய புற்றுக் கோயில் உள்ளது. பாற்கடலில் பரந்தாமன் பாம்பு படுக்கையில் பள்ளி கொண்டிருப்பதாக விஷ்ணு புராணம் விவரிக்கிறது. புராண இதிகாசகங்களின்படி சமுத்திரத்தின் அதள பாதாளத்தின் கீழே பூமியை தாங்கியபடி ஆதிசேஷன் இருப்பதாக பாகவத புராணம் உள்ளிட்ட பல புராணங்கள் கூறுகின்றன. இதை சிலர் கட்டுக்கதை என்று சொல்வார்கள், ஆனால் நவீன விஞ்ஞான உலகத்தில் கடலுக்கு உள்ளே அதள பாதாளத்தில் ‘பாம்பு பாறை‘ இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஜோதிட சாஸ்திரப்படி நாகங்கள் ராகு, கேது என்ற பெயரில் கிரகங்களாக பரிபாலனம் செய்கின்றன. ராகு, யோக போகங்களுக்கும் கேது மோட்சம், ஞானத்திற்கும் அதிபதியாக ஆதிக்கம் செலுத்துகின்றனர். மனித வாழ்வில் மிக முக்கிய அம்சமான திருமண விஷயத்திலும், குழந்தை பாக்யம் அருள்வதிலும் தோஷத்தை ஏற்படுத்துவது இந்த ராகு கேதுதான். நாக தோஷம், சர்ப்ப தோஷம் என பல வகைகளில் தோஷங்களை ஏற்படுத்துவதில் ராகு-கேதுவுக்கு நிகர் யாரும் இல்லை எனலாம். குழந்தை பிறக்கும்போது கழுத்தில் மாலை போட்டுக்கொண்டு பிறப்பது, கொடி சுற்றிக்கொண்டு பிறப்பது எல்லாம் ராகு-கேதுவின் வேலையாகும். இத்தகைய கடுமையான தோஷங்களை ஏற்படுத்தும் நாகங்களின் அம்சமான ராகு-கேதுவை நாக சதுர்த்தி தினத்தில் மனமுருகி வழிபட்டால் சகல தோஷ நிவர்த்தி ஏற்படும்.

பரிகார ஸ்தலங்கள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாமனியில் உள்ளது நாகநாத சுவாமி ஆலயம். ஆதிசேஷன் நாகநாதரை பூஜிக்க பாதாளத்தில் இருந்து வந்ததால் பாதாளேச்சரம் என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு.  மனித முகமும், பாம்பு உடலும் கொண்ட ஆதிசேஷனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. ராகு-கேது உள்பட சகல நாகங்களுக்கும் தலைவன் ஆதிசேஷன் என்பதால் இங்கு வந்து வழிபட்டு, பிரார்த்தனை செய்தால், சகல நாக தோஷங்கள் நீங்கும். குழந்தை பாக்யத்திற்காக இங்கு அதிக அளவில் வேண்டுதல் செய்கிறார்கள்.

நாகர்கோவிலில் உள்ள நாகராஜ சுவாமி கோயிலில், நாகராஜன் சுயம்புவாக தோன்றி அருள்பாலிக்கிறார். இது பிரார்த்தனை ஸ்தலமாகும். ராகு, கேது சம்பந்தமான எல்லா தோஷங்களுக்கும் இங்கு வேண்டுதல் செய்யலாம். ராமாவதாரத்தில், ஆதிசேஷன், லட்சுமணராக அவதாரம் எடுத்தார். லட்சுமணரின் நட்சத்திரம் ஆயில்யம் என்பதால் இங்கு ஆயில்ய நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அந்த நட்சத்திரத்தில் இங்கு வழிபடுவது சிறப்பாகும்.ஸ்ரீபெரும்புதூர் அல்லது ஸ்ரீரங்கம் சென்று ராமானுஜருக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம். அவரை திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பாகும். ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம், கீழ் பெரும்பள்ளம் ஆகியவையும் நாக பரிகார ஸ்தலங்களாகும்…

புத்திரபாக்கியம், குழந்தைகளுக்கு ஆயுள் விருத்தி தரும் நாகபஞ்சமி விரதம்

ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் நாக பஞ்சமி விரதம் தொடங்குகிறது. ஒவ்வொரு மாதமும் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இதேபோல், சுக்ல பஞ்சமியில் கருட விரதத்தைத் தொடங்க வேண்டும். ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தியும், மறுநாள் பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகின்றது. வரலட்சுமி விரதம் கொண்டாடுவதற்கு ஒரு வாரத்துக்குமுன், இப்பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த இரு பண்டிகைகளும், சகோதரர்களின் நலத்தை விரும்பி, சகோதரர்களும், சகோதரிகளும் கொண்டாடும் இரு முக்கிய பண்டிகைகளாகும்.

சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக அணிந்து கொள்வார்கள். அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது நல்லது.

பிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு நான்கு மனைவிகள். அவர்களில், கத்ரி என்பவளிடத்தில் பிறந்தவர் நாகர். தாய் சொல்லைக் கேட்காததால், தீயில் விழுந்து இறக்கும்படி தாய் கத்ரி சாபம் கொடுத்தாள். அந்த சாபத்தினால், பல நாகங்கள் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின்போது அக்கினியில் வீழ்ந்து இறந்தன. அஸ்தீகர், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து, நாகர்களுக்குச் சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் இந்த நாக பஞ்சமி தினம்.

இந்த நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.விரதம் கடைப்பிடிக்கும் போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ, அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்துள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்…

 

நன்மைகள் கோடி பயக்கும் நாகபஞ்சமி

மனிதன் இயற்கையை கண்டு அஞ்சினான். அதன் பிரம்மாண்டத்தை கண்டு வியப்பெய்தினான். அந்த அச்சத்தின் எச்சமே வழிபாடாக மாறியது. அதிக வெப்பத்தை கக்கிய ஆதவனை ஆண்டவனாகவே கருதினான் ஆதி மனிதன்.  இதுபோல் பேரலையால் ஆபத்தை உண்டு பண்ணும் கடலையும் கடவுளாக கருதினான். விஷம் கொண்டு விலங்கினங்களையும், உயிரை பறிக்கும் பலம் கொண்ட உயிரினங்களையும் உருவம் வைத்து வழிபட்டான். அந்த வழியில் வந்ததுதான் நாகர் வழிபாடு. அச்சம் மட்டுமே வழிபாடு ஆகாமல் அதனூடாக தத்துவார்த்தத்தையும் சேர்த்துக்கொண்டான்.

சிராவண மாதத்தில் (சாந்திராயன மாதம்)  அதாவது தமிழ் மாதத்தின் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால் ஆடி மாத அமாவாசை கழிந்த ஐந்தாவது நாளான சுக்லபட்ச பஞ்சமியன்று ் நாகபஞ்சமி வருகின்றது. நாகர்கள் மற்றும் நாக தேவதைகளை  கௌரவிக்கும் பொருட்டு, இந்திய நாடு முழுவதும் நடைபெறும் உற்சவமாகும். ஹேமாத்ரி என்ற ஸம்ஸ்க்ருத கிரந்தத்திலிருந்து, எடுக்கப்பட்ட வரதராஜா என்ற பகுதியில், இந்த நியமங்களும், பூஜை புனஸ்கார முறைகளும் நாகராஜாவை முன்னிட்டு செய்ய வேண்டிய விதிகளும் விவரமாக சொல்லப்பட்டுள்ளன. ‘‘ஸ்ராவண மாதத்தின், சுக்லபட்ச பஞ்சமியன்று, வாசற்கதவின் இரண்டு பக்கமும் மாட்டுச்சாணியினால் மெழுகி, நாகராஜாவை வரவேற்க வேண்டும்…. இது  மிகவும் புனிதமான நாளாக சொல்லப்படுகிறது.’’

இதற்கு முந்தைய தினம், அதாவது சதுர்தியன்று ஒரு வேளை மட்டும் உண்டு விரதமிருக்க வேண்டும். பஞ்சமியன்று இரவு மட்டும் தான் உணவு உட்கொள்ள வேண்டும். வெள்ளி, மரம், மண், மஞ்சள் அல்லது சந்தனத்தில் நாக உருவங்கள் அல்லது ஐந்து நாக உருவங்களை செய்து வைத்திருக்க வேண்டும். வீட்டின் முன் கோலமாக போட வேண்டும். பஞ்சமியன்று அவலும், பஞ்சாமிர்தமும் கொண்டு (அம்ருதமாக சொல்லப்படும் ஐந்து பொருட்கள் பால், தயிர்,நெய், தேன், சர்க்கரை) பூஜிக்க வேண்டும். அலரி புஷ்பங்களும், மல்லிகை செந்தாமரை பூக்களும், சந்தனப்பொடியும் மற்ற வாசனை திரவியங்களும் கொண்டு பூஜை செய்ய வேண்டும். மிகப் பிரசித்தமான நாகராஜாக்களான அனந்தன் அல்லது சேஷநாகம். வாசுகி, கார்கோடகன் – இவை இந்த தினத்தில் பூஜிக்கப்படுகின்றன. மற்ற எல்லா விழாக்களையும் போல, ஹிந்துமத வழக்கப்படி மிகப்பெரிய அன்னதானம் நடைபெறும். அன்னதானம் இந்த நோன்பின் மிக பிரதானமாகும் அன்று விழா முடியும் வரை. எங்கும், யாராலும் பூமி தோண்டப்படாதவாறு பக்தர்கள், கண்விழிப்பாக கவனித்து இருப்பர்.

தமிழ் நாட்டில், நல்ல பாம்புகள், சரியான முறையில் வணங்கி வழிபட்டால் நல்ல செழிப்பையும், அதிர்ஷ்டத்தையும் தரும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. நாகபஞ்சமியன்று, விடியற்காலையில் நீராடி. ஹிந்து பெண்கள், பாலும் , தேனும் நாகராஜாவுக்கு படைத்து வணங்குகின்றனர். கேரளாவில் உள்ளது போலவே, தமிழ் நாட்டிலும் நாகராஜா அருளால் புத்ரபாக்யம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அரச மரத்தடிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாக – சிலைகளுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு, பிரசித்தமான 108 பிரதட்சணம் (சுற்றி வலம் வருதல்) செய்வர். இதை வேதமறிந்த பிராமணர்கள் துவங்கி வைப்பர். இவ்வாறு விரதம் அனுஷ்டிக்கும் பெண், தாயானதும், ஒரு கல்லில் பாம்பு உருவத்தைச் செதுக்கி, இந்த மரத்தடியில் கொண்டு வந்து வைப்பது வழக்கம்.

தமிழ் நாட்டில், இவ்வாறு நாகபூஜை செய்து பிறந்த குழந்தைகளுக்கு நாகராஜா அல்லது நாகமணி என்று பெயரிடுகின்றனர்.    ஹிமாசல பிரதேசத்தில், நாக பஞ்சமி, உற்சவம். ‘ரிகி பஞ்சமி’ அல்லது ‘பிரூரி பஞ்சமி’ என்று வழங்கப்படுகிறது. காரணம், ‘ரிக்கேஸ்வரா’ என்பது சிவபெருமானுடைய ஒரு பெயராகும். இவர் நாகராஜாக்களின் தலைவர். இந்த சமயம் இவர் சுற்றிலும் பாம்புகளால் சூழப்பட்டவராகவும் படமெடுத்த நாகங்களாலான மாலையை தலையில் சூடியவராகவும் காட்சியளிக்கிறார்.

நாக பஞ்சமி உற்சவத்திற்கு முன்னதாகவே வீடுகளின் சுவர்களில் நாகராஜாக்கள், பறவைகள் இவற்றின் உருவங்களை வரைந்து. வர்ணம் தீட்டி அழகுற வைக்கின்றனர். ஏழு நாட்கள் முன்னதாக நீரில், கோதுமை, பருப்புகள், தானியங்கள் இவற்றை ஊறவைக்கின்றனர். உற்சவ விருந்து செய்யும் நாள் காலையில். ஒரு தர்ப்பையை எடுத்து. பாம்பு போல செய்து, ஊறிய தான்ய நீரில் நனைத்து. தித்திப்பு தின்பண்டங்களோடு நாகராஜாவுக்கு சமர்ப்பிக்கின்றனர். ஹிமாசல் பிரதேசத்தில் காங்ரா என்னுமிடத்தில், தீபாவளிக்குப் பின், இந்த நாகராஜாக்களை வழியனுப்பும் ஒரு உற்சவம் நடைபெறுகிறது மாட்டுச் சாணத்தில் நாகராஜா உருவம் செய்து. வணங்குவர். இதற்குப் பின்னும், உயிருள்ள நாகங்கள் தென்பட்டால். அது ‘‘நன்றியில்லாத’’தாக எண்ணி கொல்லப்படும்.

‘கட்வால்’ பிரதேசத்தில்,மண் தரையில் நன்றாக, நிறைய சாணம் போட்டு மெழுகி, மண் தடவி, மஞ்சளும், சந்தனமும் கொண்டு. அழுத்தமாக ஐந்து. ஏழு அல்லது ஒன்பது பாம்பு வரை படங்கள் வரைகின்றனர் ஊதுவத்தி. சாம்பிராணி போன்ற வாசனை திரவியங்கள் காட்டி பழங்களும் உணவுப் பொருட்களும் படைக்கப்படுகின்றன. காலையிலும், மாலையிலும் இந்த முறையில் வழிபட்டு வணங்கிய பின், இரவு, நாகராஜாவின் புகழ் பாடும் கதா காலட்சேபங்களை கேட்டு பொழுது போக்குகின்றனர்.

வடமேற்கு பகுதிகளில், நாகபஞ்சமி, கௌரீ பூஜையுடன் சேர்த்து, பெண்கள் நாக தேவதை களுக்கு நைவேத்யங்கள் படைப்பதோடு, கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில், நாகபஞ்சமி, பிரசித்தமான நாக – கருடயுத்தம், அதன் ஆண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது. இங்கும், நேபாளத்திலும் பல தலைகளுடைய பாம்பு உருவங்கள் சுவர்களில் வரையப்பெற்று வணங்கப்படுகின்றன. இதைப்போன்றே இந்தியாவின் சில பகுதிகளில் நாக பஞ்சமி கூடவே கருட பஞ்சமியும் கொண்டாடுகின்றார்கள். கருடன் பட்சிகளின் ராஜா. இவை நாகங்களின் பிறவி எதிரிகள் என்பது தெரிந்ததே. கருட பஞ்சமி விரதம் இருந்து, பாம்புக்கடியிலிருந்து பாதுகாப்பு பெறலாம் என்பது ஒரு நம்பிக்கை. இந்த நாளில் சகோதர சகோதரிகள்  பரிசுப் பொருள்கள் கொடுத்துக்கொள்வர்.

பீகார் மாகாணத்தில், நாக பஞ்சமி பதினைந்து நாட்கள் உத்ஸவமாக கொண்டாடப்படுகிறது. கோதுமையாலும், அரிசியாலும் நாக உருவங்கள் செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஜனங்கள் நாட்டு பாடல்களை பாடிக்கொண்டே, உடன் செல்வர். பூஜை முடிந்த பின் இந்த உருவச்சிலைகள். வெச்சப் பாகுடன் கலந்து புதைக்கப்படும் இந்த உற்சவத்தைத் தொடர்ந்து ஊர்ச் சந்தை நடப்பதும் ஒரு விசேஷம். பீகாரில் புதை பொருள் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ள சில இடங்களில் கல்லில் பாம்புகள், படத்துடன் கூடிய பல தலைகளுடைய பாம்பு சிலைகள் போன்றவை கிடைத்துள்ளன. கர்நாடகத்தில் நாக சதுர்த்தி, நாகபஞ்சமி இரண்டு நாளும் சிராவண(ஆவணி) மாத சுக்லபட்ச சதுர்த்தி, பஞ்சமி தினங்களில் கொண்டாடப்படுகிறது. பெண்கள் சதுர்த்தியன்று விரதம் இருக்கின்றனர்.

குடும்பத்தின் நன்மைக்காக இந்த விரதம், என்றாலும் தன் சகோதர்களுக்காக விசேஷ வேண்டுதல்கள் செய்வர். வீட்டின், வாசற்படியின் இருபுறமும், மஞ்சளால் சிறிய பாம்பு குட்டிகளின் படங்கள் கோலமாக வரையப் பெறும். வெளிவாசலும் ரங்கோலிகள், பாம்பு கோலங்களே பெரும்பாலும் வரையப்பெறும். தங்க, வெள்ளி பாம்பு – உருவங்கள் வைத்து, நகரத்து வீடுகளில் வீட்டிலேயே பூஜைகள் செய்து பெண்கள் நைவேத்யங்கள் நாகராஜாவுக்கு சமர்ப்பித்து வணங்குவர். கிராமங்களிலும், நகரத்தின் வெளிப்புறங்களிலும் எறும்பு புற்றைத் தேடிச் சென்று இந்த வேண்டுதல்களை நிறைவேற்றுவர். அவல், உளுந்து, நெய், பால், வெல்லம், உப்பு, பூக்கள் இவை கொண்டு புற்றுக்கு அருகில் பூஜை நடக்கும். வீடுகளிலும் அவலும், பாலும் கொண்டு ஒரு தித்திப்பு தின்பண்டம் செய்யப்படுகிறது.

அகர்வால் பனியா என்ற சமூகத்தினர், தங்கள் நாகராஜா வான வாசுகியின் வழி வந்தவர்களாக சொல்லிக்கொள்கின்றனர். இவர்கள் ஆஸ்திக முனி என்ற வாசுகியின் குருவையும் வணங்குகின்றனர். வீட்டின் சுவர்களில் பாம்பு படம் வரைந்து. வணங்கும் இவர்கள், பிராமணர் களுக்கு உணவளித்து, ஆர்த்தி செய்வர். இந்த பாம்புகளுக்கு உணவாக அளிக்கப்பட்ட எள்ளில் ஒரு சிறிதை ஒவ்வொரு பெண்ணும் தன் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறாள். ஒரு ஸ்தோத்திரத்தைச் சொல்லி வீட்டின் எல்லா பகுதிகளிலும் இரைக்கிறாள். இதன் மூலம் வீட்டில் விஷ ஐந்துக்கள் அண்டமாட்டாது என்று நம்புகின்றனர்.
நாகபஞ்சமியன்று பூமியை உழுவதில்லை.

நாட்டின் சில பகுதிகளில் உழவர்கள், நாகபஞ்சமியன்று பூமியை உழுவதில்லை. எலிகளைத் தேடி பூமியில் வளையவரும் நல்ல பாம்புகளின் தலையில், கலப்பையின் கூரிய நுனி பட்டு துன்பம் விளைவிக்கக் கூடும் என்று அஞ்சி இவ்வாறு செய்கின்றனர்…

போகர் கூறிய நாகதோஷ பரிகாரம்

Naga Panchami:

Naga Chaturthi and Naga Panchami (also known as Garuda Panchami) are traditional Hindu festivals dedicated to the worship of snake gods. Nagas are very powerful, mystical beings in the form of snakes that have the power to cast or remove curses. This festival is celebrated to seek protection against snake bites, snake afflictions and also to receive the serpentine blessings for the welfare of your children, family, progeny and overall affluence.

Naga Panchami 2016 – Sunday, August 7, 2016
Naga Panchami 2017 – Thursday, July 27, 2017
Naga Panchami 2018 – Wednesday, August 15, 2018

Naga Panchami 2020 – Saturday, July 25, 2020

It is believed that any Puja offered to snakes would reach to the serpent Gods. Hence people worship live snakes on the day as representative of serpents Gods who are revered and worshipped in Hinduism. Although there are several serpent Gods, following twelve are worshipped during Nag Panchami Puja –

Naga Panchami

 1. Ananta
 2. Vasuki
 3. Shesha
 4. Padma
 5. Kambala
 6. Karkotaka
 7. Ashvatara
 8. Dhritarashtra
 9. Shankhapala
 10. Kaliya
 11. Takshaka
 12. Pingala

 

Leave a Comment