Thanusu rasi guru peyarchi palangal 2023-24

தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Thanusu rasi guru peyarchi palangal 2023-24

உதவி என்று வருபவர்களுக்கு தயக்கமின்றி… தன்னால் முடிந்த உதவிகளை செய்திடும் தனுசு ராசி அன்பர்களே…!!

தனுசு குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024

தலையை அடகு வைத்தாவது சொன்ன சொல்லை நிறைவேற்றுபவர்களே…!

குரு பகவானின் அருள் பெற்ற தனுசு ராசி அன்பர்களே- குருபகவான் உங்கள் ராசி மற்றும் 4-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-வது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே பாக்கிய ஸ்தானம் (9-மிடம் ) லாபம் (11-மிடம்) ஜென்ம ராசி (1மிடம்) ஸ்தானங்களில் பதியும. வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

குரு பகவான் உங்க ராசிக்கு 4வது வீட்டிலிருந்து 5வது வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சியாக உள்ளார். ஏற்கனவே சனிப்பெயர்ச்சியின் போது ஏழரை சனியின் பிடியிலிருந்து தப்பித்த தனுசு ராசியினர் இப்போது அர்த்தாஷ்டம குருவின் பிடியிலிருந்தும் தப்பிக்க போகிறீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமரும் குரு பகவானால், ராகு பகவானால் ஏற்பட்ட கெடுபலன்கள் அனைத்தும் குறைய தொடங்கும். தடைப்பட்டு நின்ற திருமண முயற்சிகள் விரைவில் நடந்து முடியும். காதல் உறவில் இருப்பவர்கள் தம்பதிகளாவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு இந்த முறை நிச்சயம் குழந்தை பாக்கம் கிட்டும்.

புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் அதிகமாகவே உள்ளது. சிலருக்கு வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடிபெயரும் யோகம் ஏற்படும். தடைப்பட்டு நின்ற வீடு கட்டுமான பணிகள் நல்ல முறையில் நடந்து முடியும். படிப்பில் மந்தமாக இருந்த மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி படிப்பார்கள். புதிய முயற்சிகள் அனைத்திற்கும் பெற்றோர்களின் ஆதரவு உண்டு. தேவையற்ற அலைச்சல் குறையும். பயணங்களின் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி மீண்டும் எழுச்சி பெரும்.

மேலும், குரு பகவான் தனது 5 வது பார்வையாக 9வது வீடான பாக்கிய ஸ்தானத்தை பார்வையிடுவதால், தந்தையிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் விலகும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் எதிர்பாலினத்தவரால் ஆதாயம் உண்டு. சிலருக்கு பணி மாற்றம், இடமாற்றம் ஏற்படும். வேலையில்லாத தனுசு ராசியினருக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும்.

பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வார்கள். புதிய தொழில் தொடங்க அற்புதமான காலம். தொட்டது துலங்கும். நஷ்டத்தில் சென்றுக் கொண்டிருந்த தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத லாபம் அதிகரிக்கும். அதேபோல், குரு பகவான் தனது 7வது பார்வையாக உங்க ராசிக்கு 11 வீடான லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால், கடன் பிரச்சனை முழுவதுமாக விலகும். பணவரவு அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும். அடகு வைத்த தங்க நகைகள் மீட்கப்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.

மேலும், குரு பகவான் தனது 9வது பார்வையாக சுய ஸ்தானத்தை பார்ப்பதால் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் நடைபெறும். புதிய நட்பு அறிமுகமாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்காலம் சார்ந்த மனக்குழப்பத்தில் இருந்து முழுமையாக விடுதலை பெறுவீர்கள். சிலருக்கு அரசாங்க வேலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ஆக மொத்தம் அற்புதமாக காலம் என்றே சொல்லலாம்.

தனுசு ராசிக்காரர்களுக்கு ராசி நாதன் குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் பிள்ளைகள் வாழ்க்கையில் சுப காரியங்கள் ஏற்படும். வீடு பராமரிப்பு செய்யலாம். ஜாமீன் கையெழுத்துப் போட்டு யாருக்கும் பணம் கடனாக வாங்கித் தர வேண்டாம். கையில் இருக்கும் பணத்தை சொந்த பந்தங்களுக்கு கடனாகத் தர வேண்டாம். இந்த குரு பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது.

பரிகாரம்
வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் குரு ஓரை வரும் நேரத்தில் கோயிலில் இருக்கும் பசுமாடுகளுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை, வெல்லம் ஆகியவற்றை உணவாக கொடுக்கலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யவும். சித்தர்கள். ஜீவசமாதி அடைந்தவர்களை வழிபாடு செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-24

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Leave a Comment