நேச நாயனார்.

கூரநாடு எனும் நாட்டில் காம்பீலி என்ற திருத்தலத்திலே அவதரித்து மிகமிக எளிமையான வாழ்வை வாழ்ந்து .வந்த சிவனடியார் சிவநேசன்.நெசவு நெய்யும் வேலைசெய்து வந்த அடியார்.

சிவநேசனார் திருப்பணியானது

நெசவு நெய்வது..
. தம் இல்லம் வரும் சிவனடியார்களுக்கு ஆடை, கோபீனம் ஆகியவற்றை தம் கரங்களாலே நெய்து அன்பொழுக அளிப்பதை தம் கடமையாக கருதியவர். சிவநேசனார் சிவனடியார்களை மனதில் வைத்து செய்த தொண்டின் காரணமாக நம் அப்பன் ஈசன் அவரை கணப்பொழுதும் சோதிக்காது அள்ளி அரவணைத்தார். அருள்மழை பொழிந்தார்.

அடியார் பெருமக்களுக்கு ஆடை அளித்ததுடன் சிவாயநம எனும் ஐந்தெழுத்து மந்திரம் ஓதி கூரைநாட்டு சிவாலயத்திற்கு காந்திலி நாட்டிலிருந்து கொண்டுவந்த கணபதி மற்றும் தண்டபாணி கடவுளின் விக்ரகங்களை ஆலயங்களில் நிர்மாணம் செய்து வணங்கி வழிபட்ட மெய்யடியார். உணவளித்து உடல் வளர்த்த பல அடியார்களில் உடை அளித்த உத்தமர்..
தமிழர்களின் உயரிய பண்புக்கு நேசநாயனார் ஒரு அடையாளம். இறைவன் பேரருளால் இனிதே திருவடிபேறு பெற்று அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகும் அருளையும் பெற்று விளங்கினார்..

நேச நாயனார் குருபூசை பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திர தினத்தில் கொண்டாடப்படுகிறது.

நேச நாயனார் திருவடிகள் போற்றி

அம்மையப்பன் திருவடிகள் போற்றி போற்றி.