Saguna Sastram in Tamil

நல்ல சகுனம் என்பதற்கான அறிகுறிகள்

1. கன்னிப்பெண் தண்ணீர் குடத்துடன் வருதல்.

2. பிணம் எதிரே வருதல்.

3. அழுக்குத் துணியோடு வண்ணான் வருதல்.

4. தாயும் பிள்ளையும் வருதல்.

5. கோயில் மணியடித்தல்.

6. சுமங்கலிகள் வருதல்.

7. கருடனைக் காண்பது.

8. திருவிழாவைக் காணல்.

9. எருக் கூடையைக் காணல்.

10. யானையைக் காண்பது.

11. நரி இடமிருந்து வலமாகச் செல்லல்.

12. பாம்புகளில் ஆணும், பெண்ணும் பிணைந்திருப்பதைக் காணல்.

13. கருடன் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் செல்லல்.

14. காகம் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் செல்லல்.

15. கழுதை கத்துதல்.

16. பசு கன்றுக்குப் பால் கொடுத்தலைக் காணல்.

17. அணில் வீட்டிற்குள் வருதல்.

மேற்கண்டவைகள் அனைத்தும் நாம் பயணம் மேற்கொள்ளும்போது காணும் நல்ல சகுனங்கள் ஆகும்.

மேலும் மலர், மஞ்சள், குடை, கிளி, மான், பழம், பசு, புலி, யானை, இரட்டை பிராமணர், பல்லாக்கு, வெண்ணெய், தயிர், மோர், மயில், இரட்டை விதவைப் பெண்கள், தேர், தாமரை மலர் போன்றவைகளைக் காணுதலும் நல்ல சகுனங்களாகும்.

பசு, புலி, யானை, முயல், கோழி, நாரை, புள்ளிமான், கொக்கு ஆகியவை வலப்பக்கமாக வந்தால் நினைத்த காரியம் வெற்றியடையும்.

எருமை, ஆடு, பன்றி, கரடி, நாய், குரங்கு, கீரிப்பிள்ளை ஆகியன இடப்பக்கமாக வந்தால் நல்ல சகுனங்களாகும்.

++++++++++++++++++++++

*கெட்ட சகுனங்கள் என்பதற்கான அறிகுறிகள்*

1. பூனை குறுக்கே போதலும் எதிர்ப்படுதலும்.

2. ஒற்றைப் பிராமணனைக் காணல்.

3. விதவையைக் காணல்.

4. எண்ணெய்ப் பானை எதிர்ப்படல்.

5. விறகுடன் வருபவரைக்காணல்.

6. மண்வெட்டியுடன் எதிர்ப்படல்.

7. தும்மல் ஒலி கேட்டல்.

8. ஆந்தை அலறல்.

9. கருடன் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக செல்லல்.

10. காகம் வலமிருந்து இடமாகச் செல்லல்.

11. நாய் குறுக்கே செல்லுதல்.

12. போர் வீரனைக் காணுதல்.

13. நாய் ஊளையிடுவதைக் கேட்டல்.

14. அம்பட்டனைக் காணல்.

15. வெளுத்த துணிகளுடன் வண்ணான் வருதலைக் காணல்.

16. பாய் விற்பவரைக் காணல்.

17. அரப்பு விற்பவரைக் காணல்

18. விலக்குமாறு விற்பவரைக் காணல்.

19. முக்காடிட்டவரைக் காணல்.

20. தலைமுடியை விரித்துப் போட்டுள்ள பெண்ணைக் காணல்.

பயணத்தை மேற்கொள்ளும் போது கோடாரி, சுத்தி, கடப்பாரை, வீட்டிற்கு தூரமான மங்கை, பாம்பு, குரங்கு, ஆடு, கழுதை, நெருப்பு, நோயாளி, விறகுச் சுமை, ஏணி முதலியவற்றைக் காண்பது கெட்ட சகுனங்களாகும்.

இணையத்தில் படித்தது

Leave a Comment

Enable Notifications Allow Miss notifications