செல்வங்களுள் மிக பெரிய செல்வம் , ஆயுள் . ஆயுள் இல்லாதவனுக்கு 1000 வந்தென்ன , போயென்ன என்பர்.
இந்த ஆயுளை பெற ஆண்டவனை வேண்டுவதை தவிர வேறு வழி இல்லை!!!
ஆயுளை கொடுப்பவர் பிரம்மா , ஆயுளை பாதுகாப்பவர் விஷ்ணு , ஆயுளை போக்குபவர் சிவன் .
சிவம் மூவராய் இருக்கிறார். அம்மூவர் சிவன் , ருத்ரன் , தட்சிணாமூர்த்தி ஆவர் . அம்மூவருள் எமனை ஏவலாளாக வைத்து அழிவு செயல்களை செய்பவர் ருத்ரன்.
ஆயுள் பலம் பெற இந்த ருத்ர மூர்த்தியை வணங்க வேண்டும். ஆயினும் , ருத்ரமூர்த்தியை வணங்க சிலை வழிபாடு இல்லை. எனவே , எல்லாம் வல்ல சிவனை வணங்கி வழிபட்டாலே போதும். சிவனை வழிபட 2 முறைகள் உண்டு.
1. மானசீக பூஜை
2.விரத பூஜை .
மனதை ஒருநிலை படுத்தும் ஆற்றல் உள்ளவராலே மானசீக பூஜை செய்ய முடியும். மானசீக பூஜை என்பது உடல் உள்ளத் தூய்மையுடன் தெற்கு நோக்கி அமர வேண்டும். . மனதிற்குள் லிங்கத்தை நினைக்க வேண்டும்.
அந்த லிஙக வடிவிற்கு அபிஷேகம் அலங்காரம் செய்து , தூப தீப ஆராதனை செய்து வழிபடுவதாக மனக்கண் முன் கொண்டுவர வேண்டும்.
உள்ளத்தில் இந்த உருவ வழிபடு நடக்கும் போது உதடுகள் ” ஓம் நமசிவாய நம ” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மானசீக பூஜை முடிந்ததும் கண்களை திறந்து , திறந்த வெளிக்கு கற்பூர ஆராதனை காட்டி பூஜையை முடித்து கொள்ள வேண்டும். அதற்கு பின்னர் , ஷிவா ஸ்தோத்திரத்தை சொல்லி வழிபடலாம். இம்மானஸீக பூஜையை இயன்றவர்கள் வழிபடலாம்.
விரத பூஜை , இப்பூஜை முறைப்படி , ஒவ்வொரு திங்கள் கிழமையும் விரதமிருக்க வேண்டும். அதற்கு சோமவார விரதம் என்று பெயர் .திங்கட்கிழமை விரதமிருக்க தொடங்கினாலும் ஞாயிறு முழுவதும் அசைவ உணவு கூடாது..ஞாயிறு இரவு பலகாரமோ, பாலும் பழமும் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை இரவு, ஒரு செம்பு பாத்திரத்தில் விலவத்தலங்களை இட்டு நீர், விட்டு மூடி வைத்து விட வேண்டும்…
திங்கட்கிழமை அதி காலை எழுந்து நீராடி முடித்து விட்டு, விநாயகருக்கு வீட்டில் முறைப்படி பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும், சிவன் கோவிலுக்கு சென்று, அர்ச்சனை ஆராதனைகள் செய்து, வழிபட வேண்டும். வீட்டிற்கு வந்ததும் சிவத்தோத்திரங்களை சொல்லியபடியும், சிவ மஹாபுராணத்தைப் படித்த படியும் இருக்க வேண்டும். காலை உணவாக வில்வ தள நீரை மட்டுமே அருந்த வேண்டும்.
மதியம் பச்சரிசி, பச்சைப்பருப்பு, வெள்ளம் ஆகியவற்றை கலந்து சமைத்த உணவை சாப்பிட வேண்டும். இந்த உணவை, விரதமிருப்பவரே சமைத்து கொள்ளுவது மிக சிறந்தது.
மாலையில் சிவன் கோவில் சென்று வில்வ தள அர்ச்சனனை செய்ய சொல்லி வழிபடு செய்ய வேண்டும். இரவு வில்வ தள நீருடன், இளநீர், தேன் கலந்த பசுவின் பால் ஆகியவற்றை அருந்தலாம்.
இப்படி நூற்றெட்டு சோமவார விரதங்கள் இருந்தால் ஆயுள் விருத்தி ஏற்படும். சோமவாரத்தில் பௌர்ணமி நாள் அமைந்தால், அன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், முற்பிறவி பாவங்கள் விலகி, ஜாதகங்களில் உள்ள கண்டங்கள் மாறி, ஆயுள் விருத்தி ஏற்படும் என சிவபுராணம் கூறுகிறது.