மோட்சம் அளிக்கும் மணிகண்டனின் மகர ஜோதி தரிசனம்…..

எவர் தாம் செய்த தவற்றை எண்ணி வருந்துகிறாரோ அவர் மன்னிக்கப்படுவார் . அவரை இறைவனும் மன்னிக்கிறான்.இது எல்லா மதங்களாலும் எல்லா வேதங்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.

பரமேஸ்வரனின் அம்சமும் , மஹாவிஷ்ணுவின் அம்சமும் பொருந்திய இறைவன் தான் ஹரிஹர சுதன் .

அந்த ஐயப்பனை மெய்யன்புடன் தொழுதால் , செய்த பாவங்களுக்கு விமோசனம் மோட்சமும் கிட்டும்.

மணிகண்டனை தொழ சில அனுஷ்டானங்களும் , ஆச்சாரங்களும் உள்ளன. இந்த அனுஷ்டானங்களையும் , ஆச்சாரங்களையும் , மாலையிட்டு , ஐயப்பன் கோவிலுக்கு பல ஆண்டுகள் வந்த ஒருவரையே குருவாக ஏற்று அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஒரு குருவின் ஆசி இன்றி ஐயப்பனை தொழுவதும் , மாலையிட்டு கோவிலுக்கு செல்வதும் சிறப்பான செயலன்று..

முதல் முறை ஐயப்பனை வணங்க செல்பவர் , கன்னி ஐயப்பன் என வழங்கப்படுவர் . அவர் தொடர்ந்து 18 ஆண்டுகள் செல்ல வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் குருஸ்வாமியின் துணையுடன் , இருமுடி தரித்து ஆண்டுக்கு ஒரு படி வீதம் ஐயப்பன் கோவிலில் உள்ள 18 படிக்கும் பூஜை செய்து முடித்து காந்த மலை ஜோதி தரிசனம் செய்துவிட்டால் அவரின் பாவங்கள் நீங்கும், மோட்சம் கிட்டும் என்கிறது ஐயப்பன் புராணம்.

Leave a Comment